பாகம் 23

120 6 4
                                    

அன்று காலை சைட்டில் நடந்தது:

காலையில் வெறும் ஆய்வு என தொடங்கிய விவகாரம்  பூதாகாரமாக, சென்னை கிளையின் மேனேஜர், ரங்கநாதன் மிகவும் பதறி போனார். அவரின் பதற்றம் அர்ஜுனும் இன்ன பிற இளம் பணியாளர்களின் வாழ்வு பாதிக்க படக்கூடாது என்பதால். மும்பை அலுவலகத்தின் டைரக்டர்களை தொடர்பில் வைத்து தகவலை பரிமாறி கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் டைரக்டர் தாமோதரை தலையிடும் படி கேட்டுக்கொண்டார்.

ஜே. என் க்ரூப்பின் எதிரி மற்றும் தங்களின் போட்டி கம்பெனியினர் சேர்ந்து செய்யும் சதி வேலை என  உணர்ந்த டைரக்டர் தாமோதர், தனிவிமானம் மூலம் மும்பையிலிருந்து புறப்பட்டிருந்தார், வக்கீலுடன்.
ஆனால் இந்த சதியில் தங்கள் பணியாளர்கள் இருவரை குறிவைப்பது ஏன் என்பது அவருக்கு விளங்கவில்லை.

ஆறுதலான விஷயம், அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர் ஜே.என் குரூப்பின் டைரக்டர் இது எதையும் நம்பவில்லை என்பதே.

"Illegal practice எதுவும் எங்க தரப்பிலோ R & M Associates தரப்பிலோ நடக்கலை சார். அப்படி பண்ணி என்ன லாபம் சொல்லுங்க? இது நிச்சயம் திட்டமிட்ட சதி."

அவன் வாக்குமூலத்தில் உறுதியும், அவர்கள் தரப்பு கோப்புகளில் (file) எந்த குளறுபடியும் இல்லாதது அதிகாரிகளுக்கு உறுத்தலாக இருந்தது. "ஒருத்தன் நேர்மையா இருந்தாகூட சந்தேகமா பாக்கறீங்க, அப்ப நீங்களே தப்பு பண்றதுக்கு தூண்டுற மாதிரி தானே அர்த்தம்?" அவனின் கேள்விக்கு பதிலளிக்காமல் விலகினர்.

ஜே. என் க்ரூப் வழக்கமாக செய்யும் ஏற்றுமதி இறக்குமதி மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்க எண்ணி இந்த ஷாப்பிங்க் மால் கட்டும் முயற்சியில் இறங்கியிருந்தான். அதில் ஆரம்பம் முதலே எதிர்ப்புகளும் எச்சரிக்கைகளும் இருந்தன. இருப்பினும் இதில் முனைப்போடு இருந்தான். தனது செல்வாக்கை  பிரயோகித்திருந்தான் இதன் பின்னணியை கண்டறிய. 

கை நீட்டி அழைக்கிறேன்..Where stories live. Discover now