பாகம் 27

127 7 30
                                    

Date published: 5th april 2022

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

Date published: 5th april 2022

Word count: 1777 words

அந்த பகுதியில் இருந்த மிக பெரிய தனியார் முருத்துவமனை முன்பு வண்டி நின்றது. துரிதகதியில் விஷ்வாவை ஸ்டிரெச்சரில் கிடத்தி உள்ளே கொண்டு சென்றதும், காயம் ஏற்பட்ட காரணம் அறிந்த மருத்துவர்கள் போலீஸ் கேஸ் என்பதால் வைத்தியம் பார்க்க மறுத்தனர். அர்ஜுன் கண்களில் கண்ணீரோடும் குமுறும் கோபத்தோடும் ஊழியர்களிடம் மன்றாடும் போதே பிரகாஷ் அருகே வந்தான்.

"உங்க ஹாஸ்பிடல் சேர்மன் லைன்ல"

பிரகாஷின் மொபைல் பணியிலிருந்த டாக்டரிடம் கைமாற, அவர் முகம் வெளிறியது.

'சேர்மன் யார் அவரை எப்படி பிரகாஷுக்கு தெரியும்?' 
பதட்டத்தில் அர்ஜுனால் தெளிவாக யோசிக்க கூட இயலவில்லை.

மறுமுனையில் காட்டமான உத்தரவுகள் வர அந்த டாக்டர் பதில் கூற திணறுவது தெரிந்தது. அவர் அதிர்ந்த பார்வை பார்த்தார் பிரகாஷை.

"ஸாரி மிஸ்டர் பிரகாஷ்! உங்க பிரதர்ன்னு தெரியாது..." கைபேசியை அவனிடம் திருப்பி கொடுத்தார்.

"யாரோட ரிலேடிவ்வா இருந்தாலும் உயிரு எல்லாம் ஒண்ணு தான டாக்டர்? என்னோட பொசிஷனை யூஸ் பண்ணினதுக்கு மன்னிக்கணும்".

அவர் உடனே சிக்ச்சையை துரிதப்படுத்தினார். அர்ஜுனிடம் விண்ணப்ப படிவம் நீட்டப்பட்டது, விஷ்வா குறித்த விவரங்களை பூர்த்தி செய்தான்.

"சிஸ்டர் நாங்க ரெண்டு பேரும் ஒரே ப்ளட் க்ரூப் தான்" அர்ஜுன் அருகில் இருந்த செவிலியரிடம் கூறினான்.

கை நீட்டி அழைக்கிறேன்..Donde viven las historias. Descúbrelo ahora