பாகம் 15

151 10 35
                                    

Published: Sep 15, 2021

நரம்பியல் நிபுணர் மற்றும் கௌன்சிலர் இருவரையும் சந்தித்துவிட்டு சில பரிசோதனைகள் முடிந்தபின் பூங்கா காலனியை வந்தடைந்தாள் பூரணி

Oops! Ang larawang ito ay hindi sumusunod sa aming mga alituntunin sa nilalaman. Upang magpatuloy sa pag-publish, subukan itong alisin o mag-upload ng bago.

நரம்பியல் நிபுணர் மற்றும் கௌன்சிலர் இருவரையும் சந்தித்துவிட்டு சில பரிசோதனைகள் முடிந்தபின் பூங்கா காலனியை வந்தடைந்தாள் பூரணி. நேராக சென்றது அர்ஜுன் வீட்டிற்கு, யமுனாவையும் பத்மாவையும் பார்த்து முதலில் மன்னிப்பு கேட்டாள்.

"நான் பண்ணது தப்பு தான், எதோ மனக்குழப்பத்துல உங்க எல்லாரையும் பார்க்க வராம இருந்துட்டேன். ஸாரி பெரிய அம்மு, ஸாரி அம்மு. நான்..." பேச முடியாமல் அழுகை விம்மி வெடித்தது. "அம்மா மாதிரி என்கிட்ட பாசம் காட்டி என்னை பாத்துகிட்ட உங்க மனசை கஷ்டப் படுத்தியிருக்க கூடாது. எனக்கு கில்டியா இருக்கு.. ஸாரி."

பெற்றது கோகிலாவும் பரந்தாமனும் என்றாலும், அவளை வளர்த்ததில் பெரும் பங்கு இந்த இரு குடும்பங்களுக்கும் தான். அழுது சிவந்திருந்த அவள் முகத்தையும் கண்களையும் துடைத்துவிட்டார் பத்மா, அவர்களும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியிருந்தனர். அவளின் பிரிவு அனைவரையும் பாதித்திருந்தது.

"உன் மேல கோவம் இல்லை டா, என்ன காரணம்னு யாருக்கும் தெரியலை. உனக்கும் அர்ஜுனுக்கும் சண்டையா? இல்ல சுகந்திக்கும் உனக்கும் எதாச்சும் மனஸ்தாபமா? வேற யாராவது எதாவது சொன்னாங்களா? ஒரு வேளை நான் தான் என தங்கத்தை கண்டிக்கிறேன் பேர்வழினு எதாச்சும் காயப்படுத்திட்டேனோ? இந்த பெரிய அம்மு அப்படி எதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிக்கடீ என் ராஜாத்தி. இந்த அம்மாவை மறுபடியும் தவிக்கவிட்டுடாத டீ".
அவள் கையை பற்றி குரல் உடைந்து அவர் அழவும், பாய்ந்து அவரை அணைத்து கொண்டு குற்ற உணர்ச்சியில தவித்தாள் பூரணி.

கை நீட்டி அழைக்கிறேன்..Tahanan ng mga kuwento. Tumuklas ngayon