கானல் - 22

Start from the beginning
                                    

வானதி மதன் ஓட்டி வந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவனும் கண்ணாடியில் அவள் பிம்பத்தை பார்த்தவறே கவனமாக காரையும் செலுத்தினான்.

அவர்கள் கல்லூரியில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு அருவிக்கு தான் அவர்கள் முதலில் சென்றார்கள்.

அழகாக வெள்ளி ரசம் போல் கொட்டிக் கொண்டிருந்த அருவியை பார்த்த பெண்கள் அனைவரும் ஆரவாரமாக அதன் அருகில் சென்று அதில் விளையாட தொடங்கி இருக்க, அருவிகளின் அரசி இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த நம் நாயகிக்கு அதில் அவ்வளவு ஆர்பாட்டம் இல்லாமல் போனது.

இருப்பினும் தன் தோழிகளுடன் இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைப்பது அரிது என்பதால் அதை வீணடிக்க மனமில்லாமல், அவர்கள் செய்யும் கலாட்டாக்களில் அவளும் கலந்து கொண்டாள்.

மதனும் அவன் நண்பர்களுடன் இன்னொரு புறம் சென்று அங்கிருந்து அருவியில் குளித்து, அதை படம் பிடித்து கொண்டு மகிந்திருந்தான்.

இரண்டு மணி நேரம் அந்த அருவியில் செலவிட்ட பின், அங்கேயே ஒரு பாறையில் அமர்ந்து அவர்கள் ஆர்டர் செய்து வர வைத்த உணவுகளை அனைவரும் பகிர்ந்து உண்ண தொடங்கி இருந்தனர்.

வானதியின் பார்வை எதேச்சையாக அவனிடம் செல்ல, அவனோ ஏற்கனவே அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். திடீரென அவன் பார்வையை சந்திக்க நேர்ந்தது அவளுக்கு சற்று படபடப்பாக இருக்க, வேகமாக தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.

அவளுக்கு அப்போது தான் அவர்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வந்தது. அந்த நாளில் இதே போல தான் அவள் தோழிகளுடன் குளிக்க சென்ற போது அவனை முதல் முறையாக சந்தித்தாள்.

அவள் கையில் இருந்த உணவை பார்த்து அவளுக்கு மேலும் ஆச்சர்யமாக இருந்தது. அன்று அவள் அவனுக்காக கொடுத்து வந்த அதே உணவு வகைகள் தான்.

அதை வைத்தே அவன் அதை எல்லாம் தனக்கு நினைவு படுத்தான் அதை ஆர்டர் செய்திருக்கிறான் என்று உணர்ந்து தனக்குள்ளேயே புன்னகைத்து கொண்டாள்.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now