கானல் - 10

Start from the beginning
                                    

அதே போல் நடந்திருச்சு. ஆனா இவ்வளவு சீக்கிரம் இவுங்க இங்க திரண்டு வருவாங்கனு நானும் எதிர்பார்க்கல‌.

அந்த பொண்ண பார்க்காம யாரும் இங்கிருந்து போற மாதிரி தெரியல. பேசாம உங்க குற்றத்தை ஒப்புக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷன்ல்ல போய் சரண்டர் ஆயிடுங்க" என்றான்.

அந்த குறுந்தாடி வைத்த கரடி விழிகளை உருட்டி மிரண்டு போனது போன்ற முக பாவத்துடன் அமர்ந்திருந்தான்.

அவர்கள் பேசிக் கொண்டு இருந்த போது, ஒரு காவலர் அவர்கள் அறைக்குள் நுழைந்தார். அவரை திடீரென அங்கு பார்த்தும் அவர்கள் இருவரும் பதறி போனார்கள்.

அவர் முகத்தை கோபமாக வைத்து கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தார்.

"உண்மையை சொல்லுங்க, அந்த பொண்ணு எங்க?" என்றார் கண்டிப்பான குரலில்.

"சார்... அது வந்து..." அந்த செயலாளர் பேச்சில் தடுமாற்றம் தெரியவும், அவர்களால் தான் குந்தவிக்கு ஆபத்து என்று அவர் உணர்ந்தார்.

"உயிரோட வெளியே போக ஆசை இருந்தா உண்மையை சொல்லிருங்க" என்றார் கடுமையாக.

"சார்! இவர் தான் எல்லா தப்பையும் செஞ்சாரு. நான் இங்க வேலை செய்யுற சாதாரண ஊழியர் தான், எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இவர் தான் இங்க குற்றவாளி" என்று கூறி சரணடைந்து விட்டான் அந்த மேனேஜர்.

காவலர் அந்த குறுந்தாடிகாரனை முறைத்து பார்த்தார். அவனும் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தான்.

வெளியே மாணவர்கள் கூச்சல் சத்தம் அதிகரித்தது. அங்கிருந்த அனைவரும் அவரவர் நண்பர்களை அழைத்து அங்கே வர சொல்லி விட, அனைவரும் அங்கு வந்து சேர்ந்ததால் அந்த இடத்தில்  கூட்டமும் அதிகரித்தது.

வானதி முதல் ஆளாக அந்த கூட்டத்தில் நின்றிருந்தாள். அப்பொழுது அவள் அந்த வரவேற்பில் பார்த்த பெண்களில் ஒருத்தி தயங்கி தயங்கி அங்கு நின்று கொண்டு இருந்தது அவளுக்கு தெரிந்தது.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now