இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

40.1K 995 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 40

907 24 7
By Anupriya_Arun08

நான்காம் நாள் யுகமதியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்... மித்ராவை எந்த வேலையும் செய்ய விடாமல் பத்திரமாக கவனித்துக் கொண்டார் மீனாட்சி .... யாஷ் முகம் எல்லாம் பல்லாக ஜானு மித்ரா என் இருவரையும் நன்றாக கவனித்து கொண்டான்.. மருமகனை கையில வைத்து வீடு முழுவதும் சுத்திக் கொண்டிருந்தான்... விக்ரம் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை ... குழந்தை பிறந்த அன்று அவளை பார்த்து விட்டதோடு சரி... ஒரு நாளில் நான்கு ஐந்து முறை போனில் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்...

இவ்வளவு நாள் பூனை குட்டி போல் சுற்றி வந்தவன் அவளை தள்ளி செல்வது மனம் வலித்தது...யாஷ் அவன் வேலையைப் பற்றி அவளிடம் புரிய வைத்திருந்ததால் அவளும் நிதர்சனத்தை உணர்ந்து அமைதியாக இருந்தால்... ராவணா இரண்டு நாளா என்ன செஞ்சிட்டு இருக்கேன்னு தெரியலையே என்று அவள் புலம்ப ... அதே நேரம் கல்வி அமைச்சரை கத்தியை வைத்து இடுப்பிலும் கையிலும் அவன் கிழித்து கொண்டிருந்தான் ...

சொல்லு பெண்களை யாருக்கு விக்கிற டா... நீ உண்மையை சொல்லல நான் கண்டுபிடித்து உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன்.. அதுக்கப்புறம் நீ எப்படி உயிரோடு இருக்க முடியும்.. எப்படியும் இந்த ரூம விட்டு நீ வெளியே போக போறது கிடையாது ... சொல்லு டா என்று சுந்தரபாண்டியன் அடைத்து வைத்திருந்த அதே வீட்டில் கல்வி அமைச்சர் ராஜமாணிக்கத்தை அடைத்து வைத்திருந்தான் ...

அவர் கத்திய சத்தம் இந்த வீட்டை விட்டு தாண்டி செல்ல முடியாது ... வெளியே கறுப்பு சீருடை அணிந்து வீட்டை சுத்தி 10 பேர் விக்ரமின் குருவால் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர் ... உன்னால என்கிட்டே இருந்து உண்மையை வாங்க முடியாது... ஒருவேளை நான் யாருக்கு வேலை செஞ்சன்னு உனக்கு தெரிய வரும் போது அவனால நீ கொடூரமா செத்து இருப்ப என்றான் ராஜமாணிக்கம் ...

அவன் இல்ல அவன் அப்பனே வந்தாலும் அவனை கொன்னுட்டுதாண்டா கடைசியா இந்த விக்ரம் உயிரை கூட விடுவேன் என்று அவரை முகத்தில் குத்த ராஜமாணிக்கம் மயங்கி இருந்தான்... சலிப்புடன் அவனை பார்த்தவன் ஒரு மணி நேரம் கழிச்சு அவன் வாயில மிளகாய் தூளை வைத்து அடைங்க... அப்புறம் உப்பை எடுத்து அவன் உடம்பில் கொட்டுங்க ... எத்தனை சின்ன புள்ளைங்க வாழ்க்கை அழிச்சிருப்பான் என்று கடைசி வார்த்தை மட்டும் வாய்க்குள்ளே மூணு மூணுத்துவிட்டு வெளியே நடந்தான்...

அப்போது சரியாக அவனுக்கு ஒரு போன் வந்தது ... செம கடுப்புல இருக்கேன் பாஸ் எப்பதான் இந்த சனியன் உண்மையை உலறுவான் என்று நான்கு கெட்ட வார்த்தைகளை கூறியவன்... மத்த நாலு பேரையும் நீங்க தூக்குறீங்களா இல்லை நான் தூக்கட்டா என்றான்... அந்த பக்கம் பதில் வந்ததும்... சரி முடிச்சுட்டு சொல்லுங்க என் ஸ்டைலில் பனிஷ்மென்ட் கொடுக்கிறேன் என்றான்..

அந்த பக்கம் "......................."

சரி அவங்களுக்கு கொஞ்சம் தண்டனை கொடுத்து வைக்கிறேன் .. நீங்களே வந்து தண்டிங்க என்று கடுப்புடன் போனை வைத்து விட்டான் ... மூன்று நாட்களாக மனைவியின் முகம் பார்த்து பேசவில்லை.. மனம் பாரமாக இருந்தது... யாஷ் போன் செய்து திட்டினான் அவன் ஜானுவின் முகம் வாடி இருக்கிறது என்று... அவள் அன்று வீட்டிற்கு வந்தவுடன் பனிஷ்மென்ட் தருகிறேன் என்று கூறியது நினைவில் வந்த போக ..மனம் உடல் இரண்டும் சோர்ந்து போய் வீடு திரும்பினான்...

சதாசிவம் மகன் உள்ளே வரும்போது கவனித்தவர் ... அவன் இரு தோள்களையும் பிடித்துக் கொண்டவர் எதுக்கும் தலை குனியக் கூடாது விக்ரம்... எதிர்த்து நின்று போராடு வெற்றி உனக்கு தான் என்று அவனை இறுக்கி அணைத்து உள்ளே அனுப்பி வைத்தார்.. அவரின் வரிகளில் இருந்து உண்மையை உணர்ந்து கொண்டவன் குளித்து முடித்து யுகமதியை காண சென்றான் ...

போகும்போது சிவகாமி கொடுத்த பத்திய சாப்பாட்டையும் மனைவிக்காக எடுத்துக் கொண்டு தனது உயிரான ராயல் என்ஃபீல்டில் பறந்தான்... எப்பொழுது அவளுடன் இதில் மறுபடியும் செல்வது என்ற ஏக்கம் அவனுக்கு இருந்தது ... கொஞ்ச நாள் தான் பொறுத்து போவோம் என்று தனக்குத்தானே சமாதானம் படுத்திக் கொண்டு யாஷ் வீட்டிற்குள் நுழைந்தான்..

குழந்தையை சுற்றி பிரணித் பிரணிதா இருவரும் வந்து பேசிக் கொண்டிருந்தனர்... மாமா சொல்லு... அத்தை சொல்லு... சித்தி சொல்லு என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க ... மீனாட்சி அவர்கள் அருகில் வந்து பிறந்த குழந்தை எப்படிடா பேசும் உங்க சேட்டை தாங்க முடியல என்று இருவரையும் செல்லமாக கண்டித்துக் கொண்டிருந்தார்... ஆனாலும் அக்காவின் மகன் மீது பாசத்துடன் அவனை தொட்டு கிள்ளி விளையாடிக் கொண்டிருந்தனர் ...

விக்ரம் உள்ளே நுழைந்ததும் கைகள் தன் மகனை தூக்கி கொஞ்ச ஆசை இருந்தது.. ஆனால் அவன் முதல் தேவை மனைவி தானே... வேந்தன் மருமகனை சிறு புன்னகையுடன் உள்ளே வாங்க என்று அழைக்க... அவன் அவருக்கு பதில் சிரிப்புடன் யுகா எங்க என்றான் ... அவனின் துடிப்பை உணர்ந்து கொண்ட சாவித்திரி மேல தான் இருக்க போங்க மாப்பிள்ளை என்றால்..

இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாண்டி உள்ளே சென்றான் விக்ரம்... உள்ளே நுழைந்ததும் தலையணையை முதுகிற்கு வைத்து வாசலையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த மதியின் முகம் தான் அவனை வரவேற்றது... தன்னை எவ்வளவு தேடி இருப்பாள் என்பதை உணர்ந்தவன் கவலையுடனே உள்ளே நுழைந்தான்... இப்பதான் என்ன பாக்க தோணுச்சா என்றால் கோபத்துடன்... முகத்தை எதிர் பக்கம் திரும்பி கொண்டாள்...

சாரி டி என்று திணறியபடியே கூறினான்... அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க திறன் இல்லை விக்ரமிற்கு ...என்னை பாருங்க என்றால் மதி... அவன் அப்பொழுதும் குனிந்து இருக்க அவன் முகத்தை அழுத்தமாக பிடித்து நிமிர்த்தியவள்... நீங்க சுயநினைவுல இருந்தா கண்டிப்பா அப்படி ஒரு தப்பா பண்ணி இருக்கவே மாட்டீங்க இந்திரன்... எனக்கு ஒரு வாரம் டைம் கொடுத்துட்டு போனீங்க ஞாபகம் இருக்கா...

அந்த டைம் முடிஞ்சு உங்க போலீஸில் வாழ்க்கை பற்றி உண்மையை சொல்லி கல்யாணம் பண்ணிக்க நினைச்சீங்க... உண்மைதானே என்று அவள் கேட்க... தன்னை இவ்வளவு புரிந்து வைத்திருக்கும் மனைவியை நினைத்து அதிர்ச்சியுடன் உனக்கு எப்படி தெரியும் என்றான் .. நீங்க என்ன முதல் முறையா பார்க்க வந்தீங்க ஞாபகம் இருக்கா ... அன்னைக்கு உங்களை பத்தி உண்மை தெரிஞ்சதும் யோசிச்சு பார்த்தேன் ... கண்டிப்பா நீங்க இதுதான் பண்ணி இருப்பிங்கன்னு என்னால உணர முடிஞ்சது..

அதுக்கப்புறம் நீங்க பண்ற ஒவ்வொரு சேட்டையும் நினைத்து பார்த்துப்பேன்... எல்லாம் எனக்காக தானே நான் வருத்தப்படக்கூடாது என்பதற்காக எல்லார் கிட்டயும் காமெடியை காட்டுகிறீங்க.. இதெல்லாம் எதுக்காக என்றால்... அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ... ஏதோ நேரில் பார்த்தது போல் அனைத்தையும் அல்லாவா கூறிக் கொண்டிருக்கிறாள் ...

சற்று நிதானத்துக்கு வந்தவன் அவளிடம் என்னை பார்த்து உன் கண்ணுல ஒரு பயம் தெரியும் டி.. எனக்கு அது பிடிக்கல... உன் கண்ணுல காதல் இருந்தா நான் சந்தோஷப்படுவேன் .. என்னை பார்த்து நீ ஏன் பயப்படனும் ... நான் என்ன உன்னை கொலையா பண்ண போறேன் ... உன்கிட்ட காதலை தானே கேட்டேன்... என் முன்னாடி என் பொண்டாட்டி எதுக்கும் பயப்படக்கூடாது ... யாருக்காகவும் பயப்படக்கூடாது எங்க அப்பா டிஜிபி.. அண்ணே கலெக்டர் கண்டிப்பா உனக்கு பயம் வரும் ..

பொண்ணுங்க இயல்பு அது... அவங்ககிட்ட கூட உன்னுடைய மென்மையான குணத்தை சொல்லி புரிய வச்சேன்.. அவங்களும் புரிஞ்சுகிட்டு எனக்காக எல்லாமே பண்ணாங்க ... உண்மைய சொல்லணும்னா அவங்க கிட்ட உள்ள உண்மையான குணம் வெளியில் கொண்டு வருவதற்கு நீ யூஸ் ஆன என்று சிரித்தவன்... இவ்வளவு நாளா குடும்பத்தோட பிரிந்து இருந்த எனக்கும் உன்னோட வரவு ஒரு வசந்த காலம் போல இருந்தது...

மத்தபடி என் குடும்பத்தில எல்லாருமே இது மாதிரி கலகலப்பான ஆள் தான் ... அது உன் முன்னாடி ஓவரா எக்ஸ்பிரஸ் பண்ணி காமெடியாயிட்டு... அதை நீயும் கண்டுபிடிச்சிட்ட என்றான் அசடு வழியும் சிரிப்புடன் ... உண்மைய சொல்லட்டா இந்திரா எனக்கு உங்க கம்பீரமான முகம்தான் புடிச்சது என்றால் கர்வமாக.. தன்னை தானாக இருக்க சொல்லும் மனைவியை பிரமிப்புடன் பார்த்தவன்... கம்பீரமாகவும் காமெடியாவும் பேசுறன்னு சொல்லுறியே டி மாமி..

உன்கிட்ட காதல் மன்னனா இருந்தது பத்தி சொல்லவே இல்ல என்று அவன் கேலியாக கேட்க... முகத்தில் செம்மை படற தலை குனிந்தவள்.. அதுக்கு ஆதாரமா தான் உங்க பையன் இருக்கானே என்றாள்... அவனை பார்க்க முடியாமல் வெட்கம் தடுத்தது ... என்ன தலை குனியக் கூடாதுன்னு சொல்லிட்டு இப்ப என் மகாராணி எதுக்கு தலை குனியனும்.. கம்பீரமா இருக்கனும் நீ என்று அவளை அணைத்துக் கொண்டவன்...

அன்னைக்கு ரொம்ப உடைஞ்சு போயிட்டேன் டி ... அவ்வளவு வலியும் என்னால் தானே என்றான் வலி நிறைந்த குரலுடன்... லூசு புருஷா நம்ம சந்தோஷமா வாழ்ந்து ஒரு குழந்தை உருவாகி பிறந்தாலும் இதே வலி தான் அனுபவித்திருப்பேன் ... இந்த ஊர்ல யாருக்குமே குழந்தை பிறக்காதது மாதிரி நீயும் அவனும் அன்னைக்கு ஹாஸ்பிடல் ரெண்டா இருக்கீருங்க .. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல என்று இருவரையும் திட்டியவள்...

ரெண்டு பேரும் வாய மூடிட்டு இருந்தா அன்னைக்கு நானே சீக்கிரமா குழந்தை பெற்று இருப்பேன் ... ரெண்டு பேரும் அவ்வளவு அட்ராசிட்டி பண்ணிட்டீங்க என்று சிரித்தாள்... பின்னர் அவனை மடியில் சாய்த்துக் கொண்டு தலையை கோதி விட்டாள்.. மூன்று நாள் அலைச்சல் மன வருத்தம் அனைத்தும் அவள் மடி சாய்ந்ததில் மறந்து போனது ...கண்கள் சொருக சிறிது நேரத்தில் நிம்மதியாக உறங்கியும் விட்டான் விக்ரம்...

மீனாட்சி மித்ரா இருவரும் குழந்தையை மதியிடம் கொடுக்க வந்தனர்... விக்ரம் அவள் இடையில் கட்டி பிடித்து கொண்டு தூங்குவதை பார்த்து சிரிப்புடன் என்ன ஆச்சு மா தூங்கிடாறா ... சாப்பிடவே இல்ல என்று கேட்க ... கொஞ்ச நேரத்தில் கூட்டிட்டு வரேன் அத்தை .. இரண்டு நாளா தூங்கவில்லை போல என்று கவலையுடன் அவன் தலையை தடவி கொடுத்தாள்.. அண்ணன் பாவம் மதி அக்கா என்று சொன்ன மித்ரா குழந்தையை அவள் அருகில் படுக்க வைத்துவிட்டு சென்றால்...

வெளியே சென்று வந்த யாஷ் மதியின் அறைக்கு செல்ல அவனை வேகமாக வந்து பிடித்து கொண்டாள் மித்ரா... விடு டி ஜானுவை பாத்துட்டு வரேன்... மருமகனை பாக்காம வேலையே ஓடவில்லை என்று அவளையும் தள்ளிக்கொண்டு யுகமதி அறைக்குள் நுழைந்தான்... அங்கு அவர்கள் நிலையை பார்த்து சத்தம் இல்லாமல் வெளியே வந்தான்... நான் தான் சொன்னேன்-ல .. எல்லாம் அவசரம் என்று மித்ரா தலையில் அடித்து கொண்டு செல்ல... பொறுமை டி என்று அவளை தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான் காதல் கள்வன்...

--------
எதுக்கு இந்தியா வந்திருக்க டா என்று தன் எதிரே நின்று கொண்டிருந்தவனிடம் கார்த்திக் கேட்க... என் பொண்டாட்டி சொல்லலையா உங்க கிட்ட.. நடிக்காதிங்க டா அவளுக்காக .... சமகடுப்புல இருக்கேன் என்றான் அந்த ஆறறை அடியில் நின்றவன்... எதாவது பண்ணி சண்டை போட்டு எங்க உயிரை வாங்குறிங்க டா பைத்தியங்களா என்று வாய்க்குள் புலம்பினான்... என்ன தீட்டியது போதும்.. நான் வேலை விசயமா வந்துருக்கேன் டா அண்ணா ... அவளை கூட்டிட்டு போக இல்லை என்று அலச்சியம் போல் கூறியவன் காரில் ஏறி அமர்ந்தான்...

தன் காதல் மனைவி மேல் கோபம் தான் ஆனால் யாரிடமும் கூற மனம் இல்லை... உனக்கு இருக்கு டி கண்ணம்மா என்று மனதிற்குள் திட்டியவன்... தனது பாதுகாவலர்கள் சூழ வந்த இடம் யாஷ் வீடு... விக்ரம் குடும்பம், யாஷ் குடும்பம் மற்றும் மதியின் வீட்டினர் குழந்தைக்கு பேர் வைக்கும் விழா பற்றி பேச கூடி இருந்தனர்... அந்நேரம் சரியாக விக்ரமை சந்திக்க அவன் குரு உள்ளே நுழைந்தான்... விக்ரமிற்காக எதையும் செய்ய காத்திருக்கும் அவன் குரு ...

யாருன்னு தெரியுதா 😅😅

குட்டி யூடி பிகாஸ் கமெண்ட் கம்மி அதான் 🤧🤧🤧நாளை சந்திப்போம்... அப்புறம் கமெண்ட் லைக்ஸ்  கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றிகள் 🙏🙏🙏🙏❤️☺️☺️💖💖😊

Continue Reading

You'll Also Like

175K 5.2K 31
இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு
40.8K 1.7K 22
கணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...
111K 3K 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்...
146K 6.4K 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியா...