இராவணனின் சீதை 20 💖

770 22 2
                                    

யுகமதி மயங்கி விழுந்த அடுத்த கணம் தாங்கி பிடித்த யாஷ் ஏற்கனவே இருவருக்கும் விமானத்தில் அடுத்த டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளதால் அவளை தூக்கிக்கொண்டு நேராக மும்பை விமானம் ஏறினான்.. இது சாதாரண மயக்கம் என்று அவனும் அறிந்து வைத்திருந்தான்... நேரடியாக வீடு சென்று எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தவிப்புடன் அவளை தன் கரங்களிலேயே வைத்துக் கொண்டு மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தான்...

ஏற்கனவே அவன் கூறிவிட்டதால் டாக்டர்கள் அவன் வீட்டில் இருக்க வந்ததும் அவளை செக் செய்துவிட்டு சாதாரண மயக்கம் தான் என்று கூறி சென்று விட்டார்கள்... எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தனது வீட்டில் இருந்தே அனைத்தையும் மறந்து சிறு குழந்தை போல் சிரித்திடும் அவள் சிரிப்பு தற்போது அவள் முகத்தில் இல்லை... முற்றிலுமாக அனைத்தும் காணாமல் போனது விக்ரம் ஒருவனால் மட்டுமே என்று நினைத்த யாஷ் அவனை தன் கைகளால் கொலை செய்ய முடிவு எடுத்து விட்டான்... ஆனால் யுகமதியை தனியே விட்டு செல்ல மனம் இல்லாததால் சில அடியார்களை ஏற்பாடு செய்து அவன் கதையை முடிக்க சொல்லி இருந்தான்...

மணி செந்தில் இருவரும் விக்ரமிடம் எவ்வளவோ பேசி பார்த்து விட்டார்கள்... யுகமதி சென்ற நிமிடத்தில் இருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதி காத்தப்படியே வந்தான்.... ஆனால் நிழல் போல சுந்தரபாண்டியனை தொடர்ந்து கொண்டே இருந்தான்... ஏனென்றால் அவளை இவர் ஏதாவது செய்து விடுவார் என்ற காரணத்திற்காக...

அவள் எங்கே இருந்தாலும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்தது ...ஏனென்றால் அவனுக்கென முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கிறது அல்லவா... மனதில் கொண்ட தீராத வெறி வெளியே தெரியாமல் உலா வருகிறான் விக்ரம்... அவன் யுகமதியை உயிர் பிரியும் வரை விடமாட்டான்.... அவள் இப்போது யாஷ் வீட்டில் இருப்பது வரை அறிந்து வைத்திருந்தான்....

அமைச்சர் சுந்தரபாண்டியன் தனிப்பட்ட பங்களா ஒன்றில் மற்ற அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.... என்ன தலைவரே இன்னும் பொண்ணுங்களை அனுப்பி வைக்கல போல... ஒரே குடைச்சல் கொடுக்கிறான் அந்த மும்பைக்காரன் என்ன பண்றது? என்று ஒரு அமைச்சர் கேட்க...கைவசம் இருந்த பொண்ணுங்களையும் தவற விட்டுட்டாங்க இனிமேதான் ஏதாவது ஏற்பாடு பண்ணி அனுப்பனும் என்று புலம்பியவர் ...

இராவணனின் சீதை 💖Onde as histórias ganham vida. Descobre agora