இராவணனின் சீதை 3 💖

1.1K 26 0
                                    

அமைச்சர் சுந்தரபாண்டியன் அழைத்ததும் வேகமாக அவரது வீட்டிற்கு வந்தவன் அவருக்கும் முன் இருந்த சோபாவில் அமர்ந்தான் ....அமைச்சர் விக்ரமிற்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது ... அவனை அடியாள் போல பார்த்தாலும் நிறைய முறை உயிரை காப்பாற்றியதால் வந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும்... அதனால் சுந்தரபாண்டியன் விக்ரமிடம் தான் எதற்கு அழைத்தோம் என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்....

விக்ரம் உனக்கே தெரியும் எனக்கு ஒரு தங்கச்சி மீனாட்சி இருக்கா அப்படின்னு... என் பொண்ணு மித்ரா கூட அவங்க பையனுக்கு தான் கட்டிக் கொடுக்கிறதா நான் ஆசைப்படுகிறேன்.... என் தங்கச்சி இதுக்கு சரி சொல்லிடுவா ஆனா அவ புருஷன் என்னை பாத்தா ஏதோ ஒரு மாதிரி பார்ப்பாரு என்று மென்று விழுங்கினார்.... தங்கை கணவர் தன்னை ரவுடி அடியாள் போல பார்ப்பதை இன்னொரு அடியாரிடம் சொல்ல அவர் மனம் இடம் கொடுக்கவில்லை...

இப்ப என்னன்னா அந்த பையன் வெளியூரிலிருந்து வந்திருக்கான்... அவனுக்கு கொஞ்சம் பாதுகாப்பு கொடுக்க வேண்டியதா இருக்கு... உனக்கே தெரியும் எனக்கு இப்போ கொலை மிரட்டல் எல்லாம் வந்துகிட்டு இருக்கு அப்படின்னு ....அதனால என் மாப்பிள்ளைக்கு ஒரு வாரம் பாடிகெட்டா நீ போறியா என்று கேட்க... சரி என்ற ஒரு வார்த்தையுடன் அவன் கிளம்பும் அமைச்சரின் மனைவியோ விக்ரம் தம்பி என்ன வந்துட்டு உடனே கிளம்புறீங்க சாப்பிட்டு போகலாம் என்றால்....

வேண்டாம் அண்ணி எனக்கு இப்போ பசியில்லை என்றவன் எங்கே செல்வது என்று இலக்கு தெரியாமல் தனது வீட்டிற்கே வந்தான்.... அது ஒரு பெரிய வீடு நான்கு அறை கீழேயும் மாடியில் மூன்று அறைகளும் கொண்ட பங்களா வீடு தான்.... ஆனால் அங்கு இருப்பது விக்ரம் மட்டுமே.... பாதுகாப்பிற்காக ஆட்கள் யாராவது இருப்பதாக கூறினாலும் அவர்களை அனுப்பி விடுவான்... அவனுக்கு என்று சமைப்பதற்கு ஒரு வயதான பாட்டி மட்டும் அவ்வப்போது வந்து செல்வார்...

தம்பி சாப்பாடு போட்டுட்டீங்களா என்று சாரதா பாட்டி அவன் அருகில் வந்து கேட்க வேணாம் பாட்டி பசிச்சா சாப்பிடுறேன் நீங்க கிளம்புங்க என்றான் ...அடியாளாய் இருப்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை.... சிறுவயதிலிருந்தே தனக்கு நேர்ந்த சம்பவங்களின் அடிப்படையில் தான் இப்படி வந்ததை நினைத்து மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தவன் வெளியே செந்திலின் பேச்சு சத்தத்தில் எட்டிப் பார்த்தான் ...

இராவணனின் சீதை 💖حيث تعيش القصص. اكتشف الآن