இராவணனின் சீதை 37 💖

873 25 7
                                    

மருத்துவமனையில் இருந்து அன்று மாலையே மதியை டிஸ்டார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்... மருமகளை பத்திரமாக இருக்கும் படி பல அறிவுரைகளை அவளுக்கு கூறி அனுப்பினார் மீனாட்சி... பூரணியும் தன் பங்கு இருக்கு அறிவுரை கூறியே அனுப்பினாள்... இதே போல் இனிமேல் கோபமே படக்கூடாது அது குழந்தைக்கு ஆபத்து என்று அவளுக்கு சொல்லி புரிய வைத்தால் பூரணி...

விக்ரம் அவளுடனே யாஷ் வீட்டிற்கு வந்தான் ... அவனுக்கும் காயம் ஏற்பட்டிருந்தால் 10 நாட்கள் லீவ் கொடுத்து அனுப்பி இருந்தார் அவன் தந்தை... ஜாலியாக இந்த லீவை தன் மனைவியுடன் கழிக்கலாம் என்று வீட்டில் டேரா போட்டு விட்டான்... இவ்வளவு நாள் பார்த்துக்கொள்ளாத மகளை பார்த்துக் கொள்வதற்காக யாஷ் வீட்டிலேயே தங்கி இருந்தார் வேந்தன் ....

ஆனால் தலைக்கு மேல் வேலை இருக்க மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினார்கள் அனைவரும்... தம்பி தங்கைகளை பிரிய அவளுக்கு மனம் இல்லை... ஆனால் அவர்களுக்கு படிப்பு முக்கியம் என்று அரை மனதுடன் தன் குடும்பத்தினரை அனுப்பி வைத்தாள். இவ்வளவு நேரம் விக்ரமிற்கு அவளிடம் பேச தனிமை கிடைக்கவில்லை... உணவு சாப்பிடும் போதும் அவன் கையில் அடிபட்டு இருப்பதால் அவளே அவனுக்கு ஊட்டி விட்டாள்...

நெருக்கத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு முன் தன்னை முதல் முறையாக கை கால்கள் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்... மதிக்கு இவரு இவ்வளவு அடக்க ஒடுக்கமான பையன் இல்லையே என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் .... யுகமதி அறைக்கு வந்தவுடன் அங்கே அமைதியாக அமர்ந்திருக்கும் கணவனை பார்த்து காயம் ரொம்ப வலிக்குதா என்று கையை மெதுவாக வருடியவாறு கேட்க...

இல்லை என்று தலையசைத்தவன் சற்று கோவமாக தள்ளி அமர்ந்து கொண்டான்... அதில் அவள் மனம் வாட தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கோங்கோ... இனிமே என்னை விட்டு போங்கன்னு சொல்ல மாட்டேன்... நான் என்னதான் பண்றது சின்ன வயசுல இருந்தே என்னால தான் எல்லாம் தப்பு தப்பா நடக்குதுன்னு என்ன சுத்தி இருக்கிறவா சொல்லி இருக்காங்க... அதே போல எல்லாமே தப்பா தானே இதுவரைக்கும் நடந்திருக்கு ... நான் மட்டும் என்ன பண்றது என்று அழுகையுடன் மதி சொல்ல...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now