இராவணனின் சீதை 6 💖

912 24 0
                                    

அடுத்த நாள் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு யுகமதிக்கு விழிப்பு வந்துவிட்டது... ஏதோ மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும் விக்ரமின் நினைவு அவளை வாட்ட வாசலை கூட்டி அழகாக கோலம் இட்டவள் வீட்டின் பின்புறத்தில் வந்து அமர்ந்து விட்டால்... எவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை அவளது தந்தை அவள் அருகில் வந்து அமர திரும்பி அவரைப் பார்த்தால்....

என்ன ஆச்சு மா ஏன் முகம் வாட்டமா இருக்கு என்று கேட்க ...அவரது தோள்களில் சாய்ந்து கொண்டவள் யாஷை நெனச்சு தான் பயமா இருக்குப்பா... அவனோட மாமா அவனுக்காக பாடிகார்ட் எல்லாம் அனுப்பி இருக்காரு ... அந்த பாடிகார்ட் போயி என்கூட யாஷ் ஊர் சுத்துறது சொல்லி அவருக்கு அது தெரிஞ்சா என்ன சொல்லுவாரு... நினைச்சாலே படபடப்பா இருக்கு ...இந்த ஒரு வாரம் எப்படி போகும்ன்னு தெரியல ...

யாஷ் என்னை விட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டான்னு தெரிஞ்சு தான் மாமா அவன ஊருக்கு அனுப்பி வச்சாங்க... இப்போ இங்கே வந்து இப்படி பண்றது அவனுக்கு வேணும்னா சந்தோஷமா இருக்கலாம்... மாமாவுக்கும் அத்தைக்கும் சந்தோஷத்தை கொடுக்கலாம் ஆனால் மத்தவங்களுக்கு அது சந்தோஷத்தை கொடுக்கலையே என்றால் ஆதங்கத்துடன்....

நீ மத்தவங்கள நினைச்சு வருத்தப்படுவது நிறுத்தமா... உன் வாழ்க்கை பார் ...உன்னை யாரும் எதுவும் சொல்லாமல் யாஷ் பாத்துபான்.... அப்படி சொன்னா அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டான்... சின்ன வயசுல இருந்து அவனை பார்க்கிற தானே அவங்க அப்பா அவன் கோவத்தை கட்டுப்படுத்துவதற்காக மட்டும்தான் இப்போ ஊருக்கு அனுப்பி வச்சிருக்கான்... அவனும் மாறிட்ட மாதிரி தான் இருக்குது...

ஆனா ஒருத்தவங்களோட குணம் அவ்வளவு சீக்கிரம் மாறாது... நீ எவ்வளவு பொறுமையா இருக்கியோ அந்த அளவுக்கு அவன் கோபத்தை கட்டுப்படுத்தலாம்... அவனுக்கு நீ தான் சொல்லி புரிய வைக்கணும் என்றார் பொறுமையாக ....சரி என்று தலை அசைத்தவள் சரிப்பா சரியான நேரத்துக்கு வந்து நிற்பான் ... நான் கிளம்பி போகலனா அதுக்குள்ள சித்திக்கும் அவனுக்கும் சண்டை வரும் ...

இராவணனின் சீதை 💖Dove le storie prendono vita. Scoprilo ora