இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

39.8K 994 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 30💖

883 22 0
By Anupriya_Arun08

நீயே என்னை ஏமாத்துவன்னு நினைக்கல ஜானு என்று தேவ் கூறியதும் ...அழுதபடியே நான் உன்னை நினைக்கும் ஏமாத்தணும்னு நினைச்சதே இல்ல தேவ்... இப்படி எல்லாம் சொல்லாத என்றால் அழுகையுடன் ...அப்புறம் எதுக்காக என்கிட்ட மறைச்ச என்று கேட்க... அவனை நீ ஏதாவது பண்ணிருவேங்குற காரணத்துக்காக தான் நான் சொல்லல என்றால் திணறியபடி....

அவனை ஏதாவது நான் பண்ண கூடாதா.... அதான் ஏன்னு கேக்குறேன்... அவனை நீ விரும்புற தானே என்று கேட்க.... மௌனமாகவே இருந்தால்... இப்ப கூட நீ என்னை ஏமாத்துற... கடைசி வரைக்கும் வாழ்க்கையில் இப்படியே இருக்க போறியா... வாழ்க்கையில எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும்... அதை அடைய முதல்ல முயற்சி பண்ணனும்... சின்ன எறும்பு கூட தன்னோட வாழ்க்கைக்காக முயற்சி பண்ணும்...

அப்படி என் உனக்கு இல்லை... நீ என்னை மட்டும் ஏமாத்தல... உன்னையே நீ ஏமாத்திக்கிற ...இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருக்குமே தன்னோட ஆசையை நிறைவேத்திக்கிற உரிமை இருக்கு ...நீ கேட்டு நான் ஏதாவது பண்ணாமல் இருந்திருக்கனா... சின்ன வயசுல இருந்து உன்னோட இந்த குணம் மட்டும் போகவில்லை... உனக்கு அவனை தான் புடிச்சிருக்குன்னு நீ சொன்னா கண்ணை மூடிகிட்டு அவன் கூட சேர்த்து வைத்திருப்பேன்...

நான் என்ன அவ்வளவு கெட்டவனாவா போயிட்டேன் என்று வருத்தத்துடன் கேட்டான் ....அவள் அவனின் கேள்வியில் உண்மையை உணர்ந்து நான் அப்படி சொல்லல தேவ்... ஆனா எனக்கே குழப்பமா இருக்கு ...அவன் நல்லவனா கெட்டவனா எனக்கு ஒண்ணுமே புரியல... என் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு ...

திடீர்னு ஒருத்தன் வரான் லவ் பண்றேன்னு சொல்றான்... அவனே கெடுத்துட்டான்... அவன் நல்லவனாகவும் கண்ணுக்கு தெரிகிறான் ... கொலைகாரனாவும் இருக்கான்... தீடிரென போலிஸ் அப்படின்னு சொன்னா என்ன பண்ணுறது...இத்தனை குழப்பத்துக்கு மத்தியில் என்னால எப்படி முடிவு எடுக்க முடியும் என்றால் ஆற்றாமையாக...

சரி மத்த விஷயத்தையெல்லாம் விட்டுடு... அவனுடைய காதல் உனக்கு புரியுதுதானே... அது மட்டும் யோசி நெகட்டிவான எந்த விஷயத்தையும் யோசிக்காத ...உன் குழந்தையை பத்தி நினைச்சு பாரு... இந்த விஷயத்துல நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்கு உறுதுணையா நான் இருக்கேன்... அவன் கூட நீ சேர்ந்து வாழ்ந்தாலும் சரி சந்தோஷமா நான் சேர்த்து வைக்கிறேன்...

இல்ல நான் தனியாவே இருந்துப்பன்னு நீ நெனச்சனா அதுக்கும் உனக்கு துணையாக நான் கடைசி வரை இருப்பேன் என்று உறுதியளித்தவன் காரை எடுத்தான்... விக்ரமிற்காக அவன் பேசவில்லை அவன் ஜானுவின் காதலை கண்களில் கண்டு விட்டு இத்தனையும் பேசினான்... அமைதியான இருந்தவள் சட்டென தேவ் அவரை உனக்கு பிடிக்கும் தானே என்றால் பயத்துடன்.... யாஷ் நினைவில் விக்ரம் கூறியது நினைவு வந்தது... அவள் தனக்காக காயப்படுவதை அவன் விரும்பாதவன் ஆம் என்று தலையசைத்தான்...

இந்த நேரத்தில் இருவரும் வந்திருப்பதை பார்த்து மித்ரா அவர்களிடம் என்னவென்று கேட்க இருவரும் மௌனம் சாதித்தனர்.. முகமே சரியில்ல ஏதாவது சாப்பிடுறீங்களா என்று கேட்க... வேண்டாம் என்றனர் இருவரும் ஒரே நேரத்தில் ...இதுல மட்டும் ரெண்டு பேரும் ஒத்துமையா இருங்க என்றவள் பழசாரை எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தாள்... இந்த மாசம் செக்கப் எல்லாம் போனியா ஜானு என்று அவள் கேட்க....

ஜானு-ன்னு நான் மட்டும் தான் கூப்பிடுவேன் என்று கத்தினான் யாஷ் ...சரி சரி கத்தாதிங்க ...சொல்லு மதி போனியா என்று கேட்க ...அவனது பொசசிவ்வில் சிரித்தவள் ...விக்ரம் பேபி யுகா என்று கூப்பிடுவது எல்லாம் நினைவு வந்தது ...இருவருக்கும் இடையில் உள்ள பொசசிவ்னஸ் எப்படி இருக்கும் என்று நினைத்து வெளியே சிரித்து விட்டாள்... என்னத்த யோசிச்சு சிரிக்கிற....சொன்னா நாங்களும் சிரிப்போம் இல்ல என்ற மித்ரா கேட்க ...

அப்பொழுதுதான் யோசித்தால் ஏன் விக்ரமை யாஷுடன் சேர்த்து யோசிக்க வேண்டும் என்று ... அவன் மீது கொண்ட காதலா என்று யோசித்தால்... மனது ஆம் என்று கூறியது... தேவ் கூறியதை போல அவனைப் பற்றி நல்லதாக சிந்தித்துப் பார்த்தாள்... தன் மீது அவன் கொண்ட காதலை நினைக்கும் போது உடல் சிலிர்த்தது... மித்ராவிடம் ஒன்றுமில்லை எனக் கூறியவள் மூவரும் சேர்ந்து வெளியே போகலாமா என்று கேட்டால்...

அவளது மனநிலை மாறுவதற்காக யாஷும் அவளை கூட்டிக் கொண்டு வெளியே சென்றான் ....காரில் செல்லும் போது மித்ரா டேஷ் போர்டில் இருந்த புடவையை பார்த்து ஏது இது என்று கேட்க... அதை எடுத்து யுகமதியிடம் கொடுத்தவன் உனக்காக ஒருத்தர் என்னை பார்த்து கொடுத்திட்டு போனாரு என்று பொடி வைத்து கூறினான் ..யுகமதி யார் என்பதை அறிந்து கொண்டால் ..

மித்ரா யார் என்று கேட்க ...நாளைக்கு சொல்றேன் என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையாக முனுமுனுதான்... சஸ்பென்சா என்று அவளும் அதே போல் கேட்க ...ஆம் என்று தலையசைத்தான்... மூவரும் சற்று வெளியே சுற்றி விட்டு வீடு திரும்பினார் ....அடுத்த நாள் வளைகாப்பு விழா கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

விக்ரம் தேர்ந்தெடுத்த பச்சை நிற புடவையையே உடுத்தி இருந்தால் மதி.. தேவ் புரிந்து கொண்டான் ...அவள் காதலை உணர்ந்து விட்டால் என்று... சிறிது அலங்காரத்திலே தாய்மை பூரிப்பில் அழகாக இருந்தாள் யுகமதி... அவளை கன்னங்களை பிடித்து நெற்றியில் முத்தமிட்டு ரொம்ப அழகா இருக்க என் குட்டி ஜானு....

6 வயசுல இப்படித்தான் பாவாடை சட்டை போட்டுக்கிட்டு என் பின்னாடி சுத்துவ... இப்போ இவ்வளவு பெரிய பொண்ணா ஆயிட்ட என்றான் கண்கள் கலங்க... நீ எப்போது எனக்கு முக்கியம் யாஷ்... கடைசி வரை என்ன விட்டுட்டு போயிடாத எந்த காரணத்துக்காகவும் என்று சொல்ல..

இந்த உடம்பிலிருந்து இந்த உயிர் பிரிஞ்சா மட்டும்தான் என் ஜானுவை விட்டு நான் பிரிவேன் இது சத்தியம் என்றான்.... அந்த அழகிய தருணத்தை மித்ரா கண் கலங்க போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்... எப்பொழுதும் பிள்ளைகளை போட்டோ எடுத்துக்கிட்டு இருக்க என்று லதா கேட்க... நான் படிச்சது இதுலயாவது காட்டனுமே ஆன்டி என்று சிரித்தால்... அப்படி என்னம்மா படிச்ச என்று ரேகா கேட்க... விஷுவல் கம்யூனிகேஷன் ஆன்ட்டி என்று சிரித்தால் ...

விழா சிறப்பாக தொடங்கப்பட்டது ....அவளை அலங்கரித்த ஒரு நாற்காலியில் அமர வைத்தனர்... யார் முதல்ல வளையல் போட போறீங்க என்று வரதன் கேட்டார்... வெயிட் பண்ணுங்க என்று கூறிய தேவ் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.... முக்கியமா யாராவது வரப்போறாளா என்று ரேகா மாமி கேட்க... ஆமாம் என்ற தேவ் ... அவங்க வந்துட்டாங்க என்றான் ....

தேவேந்திரன் தனது குடும்பத்தினருடன் உள்ளே நுழைந்தான்.... பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக தனது அண்ணன் மகளை பிடித்த படி வந்தான்... தேவ் தேவேந்திரன் சார் தான் முக்கிய விருந்தாலியா என்று வரதன் கேட்டார்... அவர் தான் முக்கியமே என்ற தேவ் அவனை முறைத்துக் கொண்டே போய் ஜானு பக்கத்துல உட்காரு என்றான் ....இரவே அவன் ஜானுவின் சந்தோஷத்திற்காக அவனை அழைத்திருந்தான்...

இப்படி எல்லாம் சொன்னா நான் போக மாட்டேன் ...பாசமா சொல்லு என்று அவன் அவனை கிண்டல் செய்ய... வர கோவத்துக்கு உண்மையா அடிச்சிடுவேன் டா... உன் மாப்பிள்ளை திமிரை என்கிட்ட காட்டாத ....பல்லை உடைத்து கைல கொடுத்துடுவேன் என்று அவனுக்கு கேட்கும் படி முணு முளைத்தவன்... விக்ரம் கையைப் பிடித்து ஜானு அருகில் அமர வைத்தான் .‌‌.

அனைவரும் அதிர்ந்து அவர்களை நோக்க ...ஹாய் மை டியர் பொண்டாட்டி என்று அவளை தோலுடன் அணைத்துக் கொண்டான் தேவேந்திரன்... மதியும் அதிர்ச்சியில் தான் இருந்தாள்.. லதா வரதன் அவர்கள் அருகில் வர... தேவ் பொதுவாக அனைவரிடமும் இவ்வளவு நாள் ஏசிபி அவரோட பொண்டாட்டி பாதுகாப்புக்காக அவளை பத்தி வெளிய சொல்லாமல் தனியா தங்க வைத்திருந்தார்.., இனிமே அதுக்கான அவசியம் இல்லைன்னு வந்துட்டாரு என்று ஒரு காரணத்தை கூறியவன்....

நீ வளையல் போடுறியா இல்ல நான் போடட்டா என்றான் ‌...டேய் என் பொண்டாட்டிக்கு ஆசை ஆசையா தேடி கண்டுபிடித்து வாங்கிட்டு வந்து இருக்கேன்... உன்னை போட விடுவேனா என்று கூறியவன்... சந்தனத்தை தொட்டு அவள் கன்னத்தில் வைத்து மாலை அணிவித்தவன் ....தான் வாங்கி வைத்திருந்த நான்கு ஜோடி வைரவளையல்களை அவள் கையில் போட்டு விட்டான் ...அவள் முகத்தில் சந்தோஷம் இருந்தது ஆனால் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை... தேவாவின் தாய் மீனாட்சி மருமகளை பார்த்து ஆனந்தமாக இருந்தார்... கல்யாணம் வேண்டாம் என்ற மகன் தற்போது அவனுக்கு ஒரு குழந்தை வர போகிறது என்று அவருக்கு மனநிறைவு...

அஹா நம்ம பொண்டாட்டிக்கு வெட்கம் எல்லாம் வருதே என்று உள்ளுக்குள் குதுகலித்தவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டான் ‌.‌.. அடுத்ததாக யாஷ் வந்து அவளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அவன் வாங்கி வைத்த வைரவளையள்களை போட்டுவிட்டான்.... இருவரும் ஒற்றுமையாக ஒரே மாதிரி வாங்கி இருந்தனர்...

அவன் இவனை முறைக்க... இவன் அவனை முறைத்தான்... இருவருக்கு இடையில் மாட்டிக் கொண்டு யுகமதி விழிக்க ...மித்ரா தேவ்வை அழைத்துக் கொண்டு யுகமதி மறுபக்கத்தில் நின்று கொண்டாள் ... மீனாட்சி அடுத்து அவன் அண்ணி பூரணி பின் சதாசிவம் அவன் அண்ணன் யோகேந்திரன் என அனைவரும் சந்தனம் குங்குமம் மற்றும் வளையல் என போட்டுவிட்டு சென்றனர்...லதா ரேகா மனமாற அவளை வாழ்த்தினர்...மித்ரா கடைசியாக தங்க வளையளை போட்டு முடித்து வைத்தால்..

பின்னர் ஆரத்தி எடுத்ததும் பொண்ணு வீட்டுக்காரவுங்க மதியை வீட்டிக்கு கூட்டிட்டு போங்க என்று ஒருவர் கூற ..இவ்வளவு நாள் என் பொண்டாட்டி தனியா தான இருந்தா ...இனிமே நான் பாத்துக்குறேன் என்றான் தேவா... வளைகாப்பு போட்டா பொண்ணு வீட்டுக்கு தான் போகணும் என்றார் சதாசிவம் மகனை கண்டித்து... ஜானு நீ என் கூட கிளம்பி வா என்று தேவ் கூறியான்....

விக்ரமின் தாய் ஆமா தேவா பொண்ணு வீட்டுக்கு தான் போகணும் ....இதுலயாவது எங்க பேச்ச கேளு என்று கடிந்து கொண்டவர் .... மருமகளை அணைத்து விடுத்தவர் நல்லா இருக்கனும்..‌ இரண்டு பேரும் சீக்கிரம் என் பேர புள்ளையோட வீட்டுக்கு வா மா என்றார் ....அதேபோல் அவன் அண்ணன் மனைவியும் கூற அவர்களிடம் ஒட்டுதல் இல்லை என்றாலும் சரி எனும் வகையில் தலை அசைத்து விட்டு தேவுடன் கிளம்பினால் ....

விக்ரம் அவளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தான் ...அன்று இரவு தேவ்விடம் விக்ரமிடம் எப்படி பேசின என்று கேட்க ‌....அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது போய் தூங்கு என்று அனுப்பி வைத்து விட்டான் ....குழந்தை பிறப்பு அதன் பிறகு மூன்று மாசம்.‌.. ஆறு மாதம் இங்கு வைத்திருக்கலாம் என தேவ் திட்டம் போட்டிருந்தான்.. ஆனால் அடுத்த நாள் காலையிலேயே மனைவியை காண சூரியன் எழுவதற்கு முன்பே விக்ரம் தேவ் வீட்டுக்கு வந்து கதவை தட்டினான்...

Continue Reading

You'll Also Like

45K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
152K 451 3
Highest Rank in Romance #2 on 07|06|17 & 08|06|17. #1 on 09|06|17 to 12|06|17 & 22|06|17 & 9|07|17 & 10|07|17 காதல் சுகம...
10.6K 548 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
164K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...