இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

44.8K 1K 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 29

925 27 1
By Anupriya_Arun08

லதா அந்த இடத்துக்கு வரும் முன்னே யுகமதியை தன்னிடம் இருந்து பிரித்து அமர வைத்தவன் வருனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்... தம்பி எங்க தூக்கிட்டு போறீங்க என்று தேவாவிடம் லதா கேட்க ...ஹாஸ்பிடல் தான் இவ்வளவு நேரம் வீட்டில் வைத்திருக்கிறது தப்பு என்றவன் வண்டியில் ஏறிக்கொள்ள லதாவும் கூடவே சென்றால் ...

நல்ல காய்ச்சல் அடித்து.. மயக்கத்தில் இருந்தால் வரும் டாக்டர் பரிசோதித்து விட்டு மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்... நல்ல வேலை தம்பி நீங்க கூட இருந்தீங்க இல்லன்னா என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருந்திருப்பேன் ...அந்த நேரத்தில் நீங்கள் எப்படி கரெக்டா அங்கு வந்தீங்க என்று கேட்க ...ஒரு கேஸ் விஷயமா காலையில வந்தேன் அப்பதான் உங்களை பார்த்தேன் என்று ஏதோ கூறி மறுப்பினான் விக்ரம்...

வரதன் சார்கிட்ட சொல்லி அனுப்புறேன் மறுபடியும் காய்ச்சல் என்றால் கூட்டிட்டு போய் காட்டுங்க என்று கூறிய விக்ரம் யுகமதியை பார்த்துக் கொண்டே வெளியேறினான் ...பள்ளிக்கு கிளம்பும் நேரம் ஆகிவிட மெதுவாக கிளம்பி வெளியே வந்தால்... அங்கு யாஷ் லதாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களின் நோக்கி சென்றாள்...

எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க அக்கா ...நான் ஓடி வந்துடுறேன் என்று லதாவிடம் கூறியவன் யுகமதியை அழைத்துக் கொண்டு சென்றான்... என்ன ஆச்சு நேத்துல இருந்து முகமே சரியில்ல என்று அவன் கேட்க ....அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்சம் அசதியா இருந்தது... லேட்டா எழுந்ததுனால மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு என்றாள் மழுப்பலாக....

ஏதோ மறைக்கிற டி என்கிட்ட... சீக்கிரமா சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லு என்றான் ...ஆனால் கண்டிப்பாக அவனிடம் கூற வேண்டும் என்ற கட்டளை அதில் மறைந்திருந்தது ..அவளை பள்ளியில் விட்டுவிட்டு அவன் வண்டியை எடுத்ததும் விக்ரம் உள்ளே நுழைந்து இருந்தான்... அவனைப் பார்த்ததும் வேகமாக அவள் உள்ளே செல்ல அவளிடம் கட்டாயப்படுத்தி பேச விரும்பாதவன் வண்டியை யாஷீன் ஜானகி கன்ஸ்ட்ரக்ஷனுக்கு திருப்பி இருந்தான் ...

அங்கும் இங்கும் ஆட்கள் பரபரப்பாக சுற்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.. ரிசப்ஷன் பெண்ணிடம் யாஷ் தேவ்வை பார்க்க வேண்டும் என்று தேவேந்திரன் கேட்டதும் ...அவள் உடனடியாக அவனுக்கு அழைத்து விட்டால் ...எதற்காக போலீஸ் என்ன பாக்கணும் என்று யோசித்தவன் அவனை உள்ளே அனுப்புமாறு கட்டளையிட்டான்....

உள்ளே நுழைந்த தேவேந்திரனை பார்த்து முதலில் குழம்பியவன் பின் அடையாளம் கண்டு கொண்டு அவனை நோக்கி அடிக்க வர ....நான் சொல்றத முதல்ல கேளு... நீயும் உன் பிரண்டு மாதிரி அவசரப்பட்டு முடிவு எடுக்காத என்றான்... அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் சட்டையை பிடித்திருந்தான் தேவ்... என் ஜானு உன்னால எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா... சுட்டு போட்டா கூட திரும்ப வர என்று அவனை அடுக்க சென்றான்..

இந்த விஷயத்தை போட்டு யாரை நம்ப வைக்க பாக்குற என்று தேவ் கேட்க... இதுதான் உண்மை... அது வேஷம் என்றான் தேவேந்திரன்... நீ சொல்றதெல்லாம் கேட்க நான் என்ன முட்டாளா என்று கேட்க... ஒரு முட்டாளா இருந்தா கண்டிப்பா கேக்க மாட்டான் ஆனா அறிவாளியா இருந்தா இவன் ஏதோ சொல்ல வரான்னு புரிஞ்சிருக்கும் என்று அவன் நக்கலாக சொன்னான் .... யாஷ் முதல் முறையாக நிதானத்துடன் அவன் கூறியதை கேட்கலாம் என்று முடிவெடுத்தான்...

அவனை விட்டுவிட்டு தனது நாற்காலியில் அமர்ந்தான் யாஷ்... என்ன வேணும் உனக்கு.... ஆனா என் ஜானுவை மட்டும் கேட்காதே என்று அவன் கூற... என் பொண்டாட்டியை நான் என் உன்கிட்ட வந்து கேட்க போறேன்... எனக்கு வேணும்னா நானே எடுத்துப்பேன் ....இது அந்த பிரச்சனை இல்லை உன் மாமா அமைச்சர் சுந்தரபாண்டியன் பத்தினது என்று அவன் கூறியதும்..

நீ அவனோட அடியாள் தானே ...அந்த ஆள் பத்தி உனக்கு தெரியாதா ...அதான் செத்துட்டானே என்று கோவமாக கூற... அவன் எங்க செத்தான் அவனை நான் தானே அடிச்சு கொன்னேன் என்று கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்து யாஷை பார்த்தான்... என்ன உளறுற நீ... அந்த ஆள் தான் விஷம் சாப்பிட்டு செத்துப் போனாரு என்றான் ... ஏனென்றால் அவன் தானே மித்ராவிடம் கொடுத்து அனுப்பியது...நெருக்கு நேர் மோத ஆசை தான் இருந்தாலும் அவன் உயிர் ஜானுவுக்கு எந்த வித அவப்பெயரும் வராமல் இருக்கவே இப்படி செய்தான்....

தேவா சிரித்துக் கொண்டு அதெல்லாம் ஒரு செட்டப்... அந்த ஆளுக்கு என்ன தைரியம் இருந்தா ஏன் யுகாவை கடத்திட்டு போய் கொலை பண்ண நினைச்சிருப்பாரு... அந்த ஒரு காரணத்துக்காக எட்டு நாள்... எட்டு நாள் சோறு தண்ணி இல்லாம அடிச்சு வச்சு சித்திரவதை பண்ணி என் கையால கொன்னேன் என்றான் வெறி மின்னும் கண்களால்....

ஒரு நிமிடம் யாஷ் தனக்கு எதிரே அமர்ந்திருந்த விக்ரமை பார்த்து ஆடிவிட்டான்... என்ன சொல்ற எதுக்காக அவர நீ கொலை பண்ணனும் ...அவரோட விசுவாசமான அடியாள் நீ தானே... அவர் மேல எனக்கு உன்னை விட வெறி அதிகம்... ஏன் உயிருக்கு உயிரான ஜானகியை கொலை பண்ண பார்த்து இருக்கான் என்று அவனும் அவரை கொல்ல முடியாது வெறியில் கைகளை மூடி திறந்தான்...

உனக்கும் சேர்த்து அவரை நான் பழி வாங்கிட்டேன்னு தான் நினைச்சுக்கோ... அந்த ஆள் ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாது ...இத்தனை நாள்ல எவ்வளவோ அப்பாவி பொண்ணுங்கள கடத்தி வெளிநாட்டுக்கு வித்திருக்கான்... கடைசி நேரத்தில் எல்லாத்தையும் கண்டுபிடித்து மித்ரா ஓட உதவியோடு சில பெண்களை மட்டும் நான் காப்பாத்தி இருக்கேன்...

யுகமதியை நான் காப்பாற்றி என் வீட்ல வைத்தது கூட அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான்... அவ எத்தனையோ முறை தப்பிக்க முயற்சி பண்ணா அத்தனையும் மீறி அவ வெளியில வராத மாதிரி பார்த்துகிட்டேன்... கடைசியில் அமைச்சர் கையும் களவுமாக சிக்க வைக்கிற நேரத்தில இவ காணாம போயிட்டா... எனக்கு இருந்த வெறிக்கு அந்த அமைச்சர பத்தின ஆதாரத்தை வெளியிட்டு அவர் அரெஸ்ட் பண்ண போனேன்...

அதுக்குள்ள நீ ஒரு அவசரப்பட்டு அந்த ஆளுக்கு வெஷம் வச்சுட்ட... அவர காப்பாத்தி என் கையால அவரு உயிரை எடுத்து எவ்வளவு வேலை தெரியுமா எனக்கு என்று அவன் சலித்து கொண்டே சாய்ந்தமர.... அவன் கூறியதைக் கேட்டு இவன் கூறுவது உண்மைதானா என்ற ரீதியில் பார்த்துக் கொண்டே இருந்தான் யாஷ்... எல்லாம் சரி... உன்னோட சுயநலத்துக்காக நீ பேர் புகழ் வரணும் என்பதற்காக அமைச்சரை பிடிச்ச ...

ஆனா எதுக்காக நடுவுல என் ஜானுவை இழுத்த ...அவ வாழ்க்கையை நாசமாக்கி இந்த நாள் வர அவளுக்குன்னு இருந்த ஒரு சின்ன சந்தோஷத்தையும் எடுத்துட்ட... இப்போ அந்த குழந்தை வேற என்று நிறுத்தியவன்... குழந்தைக்காக மறுபடியும் அவளை நெருங்க முயற்சி பண்ணாத என்றான் எச்சரிக்கும் விதமாக....

நான் என்ன பைத்தியமா... அவ என்னைக்கு உன் வீட்டை விட்டு வெளியேறினாலோ அன்னையிலிருந்து ஒவ்வொரு நாளும் என் கண்காணிப்பில் அவ இருந்துட்டு இருக்கா... ஒவ்வொரு நாளும் அவளை நான் என்னோட உயிர் போல கண்ணுல வச்சு பாத்துகிட்டு இருக்கேன் ....இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அவ தனியா இருக்கறதா நினைச்சுட்டு இருக்கா... ஒவ்வொரு நாளும் ராத்திரி அவளுக்கு துணையா அவ வீட்டு வாசல் நான் காவல் காத்திருக்கேன் நாய் மாதிரி....

இதெல்லாம் அவ மேல வச்ச காதலுக்காக மட்டும் தான் என்று நிறுத்தி.... அப்புறம் உனக்கு என்னை அடையாளம் தெரியலையா ... காலேஜ்ல ஒருத்தன் அவகிட்ட தப்பா நடந்தது முயற்சி பண்ணுனான்னு அடிச்சியே.... யார் அவர்கிட்ட தப்பா நடந்துகிட்டானு கூட தெரியாம காப்பாத்த வந்த என்னை போட்டு அடிச்சிட்ட.... இதுல நீ எங்க உண்மையான அவளுடைய எதிரியை பார்த்து அவளை காப்பாற்ற போற என்று அவன் நக்கலாக கேட்க....

வாய மூடு அப்பவே நினைச்சேன் உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு... இப்பதானே தெரியுது... என்கிட்ட வந்து பேசின வரைக்கும் போதும் ஜானு முன்னாடி போய் நிக்காத... அவ பழசை நினைச்சு வருத்தப்படுவது கூட நான் விரும்பல என்று அவன் கூறியதும் ...பாஸ் நான் என் வைஃப் கிட்ட பேசி ரொமான்ஸ் பண்ணிட்டு தான் இங்க வந்து இருக்கேன்... அவ என்னை ஏத்துக்க கொஞ்சம் முயற்சி பண்ணுவா..

ஆனா எல்லாத்துக்கும் உன்னை நினைச்சு பயம்... அவளை நீ தப்பா நினைப்பன்னு பயம்...என்னை நீ ஏதாவது பண்ணிடுவியங்கிற பயம்... என் மேல உள்ள லவ்வ கூட அவ அதனால மறைச்சு வைக்கிறா என்ற விக்ரம் சோர்ந்து சொல்ல.... கண்டிப்பா அவ உன்னை லவ் பண்ணவே இல்ல ....எனக்கு உறுதியாக தெரியும்.... அவ மனசு மாத்த நீ முயற்சி பண்ணாத என்றான் கட்டுக்கடங்காத கோபத்துடன்...

அப்போ நான் என்ன பண்றது... நீ உன் குடும்பம்னு கொஞ்ச நாள்ல போயிருவ... என் பொண்டாட்டி மட்டும் புள்ளைய வச்சுக்கிட்டு தவிக்கணுமா ...அவளுக்கு உயிருக்கு உயிரா நான் இருக்கேன்... மூன்று வருஷம் அவளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிட்டேன்... இந்த ஏழு மாசமா அவளுக்கே தெரியாம அவ கூட இருந்து கவனித்துக் கொண்டேன்... ஆனா கண்ணுக்கு முன்னாடி காட்டுற உன் பாசம் அவளுக்கு பெருசா இருக்கு...

உன்கிட்ட என்னோட யுகாவை கூட நான் கேட்க வரல... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ வராத... உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் வரமாட்டேன் ... நீ என்னை சுட்டது கூட அவ மேல உள்ள பாசத்துல தான்... அதனால் மட்டும் தான் உன்மேல எனக்கு கோவம் கூட வரலை... அவள கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த தான் ஆசைப்பட்டேன்... நடுவுல என் சூழ்நிலை சரி இல்லாமல் அவ கிட்ட தப்பா நடந்துகிட்டேன்...

நான் என்னைக்கும் அதை நியாயப்படுத்தவும் மாட்டேன் ...என் பொண்டாட்டி என் குழந்தைன்னு சந்தோஷமா வாழ மட்டும் தான் நான் ஆசைப்படுகிறேன்... அதை நீ தடுக்க முயற்சி பண்ணாத... அவளும் உன்னால மட்டும்தான் என்னை ஏத்துக்க தயங்குறா என்று கூறி அவனைப் பார்த்தவன்...அப்புறம் நாளைக்கு வளைகாப்பு இருக்கு என் வைஃப் கிட்ட இந்த புடவையை கொடு என்று அவளுக்கான எடுத்த சேலையை மேஜை மீது வைத்து விட்டு தேவேந்திரன் வெளியே சென்று விட்டான்...

இங்கு யாஷ் சிந்தனையில் ஆழ்ந்தான்... விக்ரம் அவனைப் பற்றி கூறிய உண்மைகளை யோசித்துப் பார்த்தான்.... அவன் பக்கம் நியாயம் இருப்பதை போலவே தோன்றினாலும் ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... என்னை இருந்தாலும் நான் ஜானு பக்கம் தான் ...அவ கிட்ட பேசி ஒரு முடிவு எடுக்கணும் ... என்கிட்ட ஏன் அவனை பத்தி மறைக்கனும் என்றவன் வேலையை அப்படியே விட்டுவிட்டு அவளுக்கு அழைத்தான்...

சொல்லு தேவ் எதுக்கு இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க என்று மதி கேட்டதும் ....உடனடியாக உன் ஸ்கூல் வாசலுக்கு வா ...நான் வெயிட் பண்றேன் என்று கூறினான் ...எதற்காக இவ்வளவு அவசரம் என்று அவள் கேட்க அவன் போனை கட் செய்து விட்டான்... வயிற்றைப் பிடித்தபடி மெதுவாக வாசலுக்கு வர அவளுக்காகவே காரில் காத்திருந்தான் ...அவள் வந்ததும் கதவை திறந்து விட்டு அமர வைத்தவன் வண்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்...

என்ன ஆச்சு தேவ் எதுக்காக இப்ப வர சொன்ன.... ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு என்று கேட்க... அந்த விக்ரம் உன்ன வந்து பார்த்தானா என்றான் அழுத்தமாக...அவன் கேள்வியில் அதிர்ந்த மதி இ...இல்ல இல்ல ...அவன் தான் செத்துப் போயிட்டானே... நீ தானே சுட்டுக்கொன்னு சொன்ன என்றால் திணறியபடி ...பொய் சொல்லாத ஜானு என்று ஸ்டேரிங்கில் குத்தினான்... என்கிட்ட ஏன் பொய் சொல்ற....

நீ நேத்துல இருந்தே ஒரு மாதிரியா இருக்கும்போதே நினைச்சேன்.. இன்னைக்கு அவன் என்ன வந்து பார்த்தான்... என்ன என்னமோ சொன்னான்.. எனக்கு அவன் பேசுறது முக்கியம் இல்லை... நீ சொல்லு அவனை வரும்புறியா என்று காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளை பார்த்து கண்கள் சிவக்க கேட்டான் ...

அவளிடம் பதில் இல்லை ... அவன் உயிரோடு இருக்கான்னு உனக்கு தெரியும் தானே என்று கேட்க... ஆம் என்ற தலை அசைத்தவள் இது நானே எதிர்பார்க்கல. நீ என்ன தப்பா நினைக்காத தேவ் என்று அழுகையுடன் அவன் கையை பிடிக்க முயற்சித்தால்... அவள் கையை உதறியவன் நீயே என்னை ஏமாற்றுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல ஜானு என்றான் முகத்தில் வேதனையை காட்டியபடி...

Continue Reading

You'll Also Like

153K 3.7K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
93.4K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
89.5K 5.2K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...
204K 8.5K 81
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ...