இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

39.7K 994 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 20 💖

795 22 2
By Anupriya_Arun08

யுகமதி மயங்கி விழுந்த அடுத்த கணம் தாங்கி பிடித்த யாஷ் ஏற்கனவே இருவருக்கும் விமானத்தில் அடுத்த டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளதால் அவளை தூக்கிக்கொண்டு நேராக மும்பை விமானம் ஏறினான்.. இது சாதாரண மயக்கம் என்று அவனும் அறிந்து வைத்திருந்தான்... நேரடியாக வீடு சென்று எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தவிப்புடன் அவளை தன் கரங்களிலேயே வைத்துக் கொண்டு மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தான்...

ஏற்கனவே அவன் கூறிவிட்டதால் டாக்டர்கள் அவன் வீட்டில் இருக்க வந்ததும் அவளை செக் செய்துவிட்டு சாதாரண மயக்கம் தான் என்று கூறி சென்று விட்டார்கள்... எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தனது வீட்டில் இருந்தே அனைத்தையும் மறந்து சிறு குழந்தை போல் சிரித்திடும் அவள் சிரிப்பு தற்போது அவள் முகத்தில் இல்லை... முற்றிலுமாக அனைத்தும் காணாமல் போனது விக்ரம் ஒருவனால் மட்டுமே என்று நினைத்த யாஷ் அவனை தன் கைகளால் கொலை செய்ய முடிவு எடுத்து விட்டான்... ஆனால் யுகமதியை தனியே விட்டு செல்ல மனம் இல்லாததால் சில அடியார்களை ஏற்பாடு செய்து அவன் கதையை முடிக்க சொல்லி இருந்தான்...

மணி செந்தில் இருவரும் விக்ரமிடம் எவ்வளவோ பேசி பார்த்து விட்டார்கள்... யுகமதி சென்ற நிமிடத்தில் இருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதி காத்தப்படியே வந்தான்.... ஆனால் நிழல் போல சுந்தரபாண்டியனை தொடர்ந்து கொண்டே இருந்தான்... ஏனென்றால் அவளை இவர் ஏதாவது செய்து விடுவார் என்ற காரணத்திற்காக...

அவள் எங்கே இருந்தாலும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்தது ...ஏனென்றால் அவனுக்கென முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கிறது அல்லவா... மனதில் கொண்ட தீராத வெறி வெளியே தெரியாமல் உலா வருகிறான் விக்ரம்... அவன் யுகமதியை உயிர் பிரியும் வரை விடமாட்டான்.... அவள் இப்போது யாஷ் வீட்டில் இருப்பது வரை அறிந்து வைத்திருந்தான்....

அமைச்சர் சுந்தரபாண்டியன் தனிப்பட்ட பங்களா ஒன்றில் மற்ற அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.... என்ன தலைவரே இன்னும் பொண்ணுங்களை அனுப்பி வைக்கல போல... ஒரே குடைச்சல் கொடுக்கிறான் அந்த மும்பைக்காரன் என்ன பண்றது? என்று ஒரு அமைச்சர் கேட்க...கைவசம் இருந்த பொண்ணுங்களையும் தவற விட்டுட்டாங்க இனிமேதான் ஏதாவது ஏற்பாடு பண்ணி அனுப்பனும் என்று புலம்பியவர் ...

விக்ரமிடம் திரும்பி அந்த துப்பாக்கி கண்டைனராவது போய் சேர்ந்திருச்சா என்று கேட்க... அவன் ஆம் என்று தலையசைத்தான்... பேசாம விக்ரம் கிட்டே எல்லா வேலையும் கொடுத்து இருக்கலாம்... அவன்தான் சரியா செஞ்சு முடிக்கிறான் என்று ஒருவர் கூற ...மற்ற அடியாட்கள் அவனை வெறுப்பாக பார்த்தனர்...

இப்பொழுது வந்தவன் அனைத்து வேலைகளும் சரியாக முடியும் போது தான் செய்வது மட்டும் எப்படி இடையூறு ஏற்படுகிறது என்று யோசிக்கத் தொடங்கினர்... என்ன பண்ணுவீங்களோ இன்னும் ஒரு வாரத்தில் எல்லாத்தையும் சரியா முடிங்க... இல்லனா அவங்க கிட்ட நம்ம பதில் சொல்லிட்டு இருக்க முடியாது என்று பேசிய உடன் கூட்டம் கலைந்தது...

விக்ரமை மற்றவர்கள் முறைத்துக் கொண்டு செல்ல அவனோ எப்பொழுதும் போல் தனது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்... என்ன விக்ரம் உன் பொண்டாட்டி என் மருமகன் கூட போயிட்டா போல என்று ஏளனமாக அமைச்சர் சுந்தரபாண்டியன் கேட்க ...தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன் ...என்ன பண்றது அண்ணா இப்ப எல்லாம் கல்யாணம் பண்ணுன பொண்ணுங்க பின்னாடி தான் நாக்கு தொங்க போட்டுட்டு திரிகிறார்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்தான்...

ஆனால் யாஷை பற்றி அப்படி கூறுவதிற்கு அவனுக்கு துளியும் எண்ணம் இல்லை என்பதே உண்மை... தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன் அவ இப்பவும் என் பொண்டாட்டி தான் உங்க மருமகன் வீட்ல ஒரு கெஸ்ட்டா இருக்கா என்று கூறினார் விக்ரம்... அவன் இவ்வளவு கோபப்படுவான் என்று அறியாத அமைச்சர் சரி கோபப்படாதே ஏதோ ஒரு ஆதங்கத்தில் பேசிட்டேன்...

என்னை இருந்தாலும் என் பொண்ணு கட்டி கொடுக்கணும் இல்ல என்று சமாளிப்பாக அவர் பேச வீடு வந்ததும் இறங்கி விட்டார் ....மணி விக்ரமின் கோபத்தை பார்த்து அண்ணன் இந்த ஆள் பேசுவதற்கு பேசாமல் அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துவிடலாம் என்று சொல்ல ...கொஞ்ச நாளா அங்க இருக்கட்டும்... என்னிடம் இருப்பதை விட யாஷிடம் இருப்பது இப்போதைக்கு மிகவும் நல்லது என்று யோசிக்க முடிவெடுத்திருந்தான்....

இங்கு யுகமதி முழித்ததும் எங்கே இருக்கிறோம் என்று பயத்தில் அறையை சுற்றி பார்த்தால்... யாரோட வீடு இது எனக்கு ஒன்னும் இல்லையே என்று தனது ஆடையை பார்த்து மெதுவாக எழுந்து வெளியே வந்தால்.... ஹாலில் கண்ணை மூடி இரண்டு கைகளையும் சோபாவில் விரித்து இரண்டு பக்கமும் வைத்து சாய்ந்த அமர்ந்திருந்தான் யாஷ்...

அவளுக்கு பயத்தில் வேர்வை சுரக்க அவன் முன் வந்து நின்று தேவ் என்று அழைத்த நொடி... பேசாத ஜானு என்று ஒரு அதட்டல் போட்டான்... அதில் அவள் பயத்தில் துள்ளி இரண்டடி பின்னே நகர... தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன் என்னை நீ மிருகமா மாத்துற ...உன்னை காப்பாத்த நான் ஓடி வந்தா நீ திரும்பத் திரும்ப அதே தப்பு பண்ணிட்டு இருக்க...

நான் செத்துப் போய் இருந்தா கூட இந்த மாதிரி தான் பண்ணி இருப்பியா என்று அவன் கேட்க... ஓடிவந்து அவன் வாயை பொத்தியவள் இப்படி எல்லாம் பேசாதே... என்னால் உன் குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் அப்படி பண்ணிட்டேன் என்ற அவள் கூறிய நொடி... இதுவரை இருந்த பொறுமை பறந்து அவள் கன்னத்திலேயே ஒரு அறிவைத்தான்....

எப்போதுல இருந்து என் குடும்பம் உன் குடும்பம்-ன்னு பிரிச்சு பேச ஆரம்பிச்ச டி... சின்ன வயசுல இருந்து அப்படியா நம்ம பழகி இருக்கோம் என்று அவன் கண்ணீருடன் கேட்க ....என்னை மன்னிச்சிடு தேவ் என்று அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்... அவனால் அவள் மீது கோபத்தை காட்ட முடியவில்லை...

அவள் கன்னத்தில் தனது ஐவிரலும் பதிந்து இருக்க அதற்கு ஆயில்மெண்ட் போட்டு விட்டவன் ...இனிமேல் ஒரு நொடி கூட என்னை பிரிந்து இருக்கவே கூடாது... அது தான் உன்னோட தண்டனை என்று கூறியவன் சாப்பாட்டை எடுத்து வந்து ஊட்டி விட்டான் ...அவளும் அமைதியாக சாப்பிட்டால்... நீயும் சாப்பிட்டு இருக்க மாட்ட தானே என்று அவனுக்கும் ஊட்டி விட்டாள்...

போய் அந்த ரூம்ல படு ....அங்க சோபாவில தான் நானும் தூங்குவேன் இனிமே எப்படி தப்பிச்சு போறேன்னு பார்க்கிறேன் என்று அவன் கோபமாக கூறி சோபாவில் படுத்துக்கொள்ள அவளோ சிரித்துக் கொண்டே அந்த அறையில் படுத்து தூங்கினால்... மனதில் விக்ரம் பற்றிய பயமும் சற்று இருக்க தான் செய்தது...அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளும் பழக்கம் உள்ள யுகமதி எழுந்து விட அவனும் எழுந்து விட்டான்...

ஆபீஸ்க்கு கிளம்ப போறேன்... இந்த டிரஸ் நீயும் போட்டுட்டு கிளம்பு என்று அவளிடம் கூற... நான் எதுக்கு நீ போயிட்டு வா என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு... நேத்து நான் சொன்னது ஞாபகம் இருக்குல ஜானு.. நான் எங்க இருக்கனோ அங்க தான் நீயும் இருக்கணும் என்றவன் ...ஒரு லாங் பிராக் மற்றும் அழகிய வேலைப்பாடு கொண்ட சட்டையை எடுத்து வைத்தவன் வேறொரு அறைக்கு குளித்து கிளம்ப சென்று விட்டான்...

இவள் சற்று நேரம் யோசித்தவள் அவன் கொடுத்த ஆடையை போட்டுக் கொண்டு கிளம்பி வந்தால்... அழகான பொம்மை போல் காட்சியளித்தவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன் என் குட்டி ஜானும் திரும்ப வந்துட்டா என்றான் சிரிப்புடன் ...அவளோ நான் பெரிய பொண்ணு என்று உதட்டை சுழித்து சொல்ல ...அவள் தலைமுடியை கலைத்து விட்டவன் கையைப் பிடித்து தனது காரில் ஏற்றினான் ...

அவர்களை சுற்றி மூன்று கார் பின் தொடர்ந்தது ...ஒரு பதினைந்து மாடி கட்டிடத்திற்கு முன் வண்டியை நிறுத்தியவன் அவள் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்... ஆபீஸில் நுழைந்ததும் அனைவரது கண்ணும் அவர்கள் இருவரை தான் நோக்கியது.... ஏனென்றால் யாராவது ஒரு பெண் ஐந்து நிமிடம் தனது அறையில் நின்றால் கூட அவர்களை எரிக்கும் பார்வை பார்ப்பவன்..

இன்று ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு முகம் முழுக்க சிரிப்புடன் வருபவனை பார்த்து உண்மையாவே இவன் அழகன் தான் என்று மனமாற அவனை ரசித்துக்கொண்டிருந்தனர் ....அவனோ யாரையும் கண்டுகொள்ளாது தனது அறைக்கு சென்றவன் தனது நாற்காலியில் அவளை அமர வைத்துவிட்டு மற்றொரு நாற்காலி போட்டு அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்...

அவனது அசிஸ்டன்ட் மீட்டிங் இருப்பதாக வந்து கூற ...ஓகே வரேன் என்றவன் தனது வேலைகளை சற்று கவனித்தான் ...ஆனால் மதிக்கு கடுப்பாக இருக்க அந்த அறையில் உள்ள சிறு சிறு பொருட்களையும் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ...மீட்டிங் நேரம் வந்து விட அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான் ...பேசாமல் கையில ஒரு விலங்க போட்டு கூட்டிட்டு போ அதுதான் சரியா இருக்கும் அவள் சொல்ல...

முடிஞ்சா அதையும் பண்ணுவேன் வாயை மூடிட்டு வா என்று மீட்டிங் ஹாலிற்கு அவளை அழைத்துக் கொண்டு சென்றான்... இவள் ஏன் இங்கு என்பது போல் மற்ற அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்க்க... அது அவளுக்கு அசௌகாரியமாக தான் இருந்தது ... அவளை தனது நாற்காலியில் அமர வைத்துவிட்டு மற்றவர்களை பார்த்து குட் மார்னிங் ...இது ஜானகி ...ஜானகி அண்ட் கோ ...இந்த கம்பெனி இவங்க நேம் -ல தான் ஸ்டார்ட் பண்ணினேன் ... பிகாஸ் என்னோட உயிர் இவ என்று கர்வமாக கூறினான்... மற்றவர்கள் முகத்தில் ஈடவில்லை...

பின்னர் யாஷ் அன்றைய மீட்டிங் பற்றி பேச ஆரம்பித்தான்... இவங்கதான் அந்த ஜானகியா என்று மற்றவர்கள் அவளை பார்த்தனர்... அழகிய பார்பி பொம்மை போல அவளும் அமர்ந்திருந்தால்... யாஷ் அவள் அருகில் நாற்காலி போட்டு அந்த மீட்டிங் பற்றி பேச ஆரம்பித்தான்....

மீட்டிங் கால் மணி நேரம் கூட கடந்திருக்காது ஆனால் அதற்குள் அவளுக்கு தூக்கம் கண்ணை சொருக அப்படியே படுத்து தூங்கி விட்டாள்... அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்க்கவும் யாஷ் குனிந்து அவளை பார்த்தான் .... அவன் ஜானு தூங்குவதை பார்த்து சிரிப்புடன் தலையை தடவிக் கொண்டே தனது மீட்டிங்கை தொடர்ந்தான் ...

கமெண்ட் லைக்ஸ் கொடுக்கவும் ❤️❤️

Continue Reading

You'll Also Like

152K 451 3
Highest Rank in Romance #2 on 07|06|17 & 08|06|17. #1 on 09|06|17 to 12|06|17 & 22|06|17 & 9|07|17 & 10|07|17 காதல் சுகம...
2.4K 316 9
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
59K 3.4K 29
ஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்க...
185K 8.6K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...