இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

39.9K 994 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 18 💖

815 25 0
By Anupriya_Arun08

யுகமதியை பார்த்து விக்ரம் கண்ணடித்ததும் அவள் வெட்கத்தில் தலை துணிந்து கொள்ள சுத்தியுள்ள அனைவரும் ஆஆஊஊ என்று கத்தினர்... விக்ரம் நல்லவன் என்று தெரிந்தாலும் யுகமதியிடம் அவன் நடந்து கொண்டது அவருக்கு தவறாகவே பட்டது அகீர் பாய்க்கு... ஆனால் இப்பொழுது அவளது வெட்கம் தான் நினைத்தது தவறு என்று நினைக்க தோன்றியது...

சரி விக்ரம் சட்டையை போட்டுட்டு வீட்டுக்கு வா என் பொண்ணு சாய்ஷா உன்னை பாக்கணும்னு சொன்னா என்று சொன்னவுடன்... கண்டிப்பா பாய் என்று யுகமதி மடியில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் அவளையும் கையோடு அழைத்துக் கொண்டு பாய் இருக்கும் வீட்டிற்கு சென்றான்...

கடற்கரையை ஒட்டி நிறைய வீடுகள்... அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே யுகமதி வந்தால்.. விக்ரம் ஒரு பெண்ணொடு வருவதை பார்த்து அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க ஒரு மாதிரி அசோகரிமாக உணர்ந்தவள் பயத்தில் விக்ரமின் புஜத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்... அவள் பயத்தை உணர்ந்தவன் அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி நான் இருப்பதாக கண்மூடி திறந்தவன் அணைத்து கொண்டு போனான்...

அகீர் பாயின் மனைவி பாத்திமா அவளை என் முகமாக வரவேற்று தண்ணீர் கொடுக்க அவளும் ஒரு சிரிப்புடன் வாங்கி குடித்துவிட்டு அமர்ந்து விட்டாள் ...பொண்ணு அழகா இருக்கு எங்க கிட்ட கூட சொல்லாம கல்யாணம் கட்டிகிட்டியா என்று அவர் குறை பட்டுக்கொள்ள...

அப்படி எல்லாம் இல்லம்மா எனக்கு புடிச்சது அதனால உடனே கல்யாணம் கட்டிக்கிட்டேன்... நாலு நாள் தான் ஆகுது என்று அவன் சொல்ல... என்னமோ என் பையன் கல்யாணத்தை தான் பார்க்க கொடுத்து வைக்கல ...உன் கல்யாணத்தை பார்த்து மனசு சந்தோஷப்படுத்திக்கலாம் என்று நினைத்தேன்.. அதுவும் இந்த அம்மாவுக்கு கொடுத்து வைக்கல டா என்று வருத்தத்துடன் கூறியவர் உள்ளே சென்றுவிட்டார்..

பாய் கண் கலங்க நான் மனசுல நினைச்சது தான் அவளும் சொல்றா... பேசாம ஊரகட்டி ஒரு தடவ கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்க... பாய் இது என்ன விளையாட்டு பொருளை திரும்பத் திரும்ப அவ கழுத்துல கட்டுறதுக்கு... மனசால அவளை நான் எப்பயோ மனைவியா ஏத்துக்கிட்டேன்... இந்த தாலி வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டும் தான்...

இதுக்கு மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ...சுஜால் இல்லை என்றால் என்ன.. உங்க பையன் விக்ரம் உங்க கூட நான் இருக்கேன் என்று கூறியவன் சாய்ஷாவை பார்க்க சென்று விட்டான்... அவர் அமைதியாக இருக்க யுகமதி அவர்கள் பேசுவதிலேயே அவர் மகன் இல்லை என்று உணர்ந்து கொண்டவள் அவர் பாதங்களுக்கு கீழே முட்டி போட்டு அமர்ந்து கொண்டு ...

அவர்தான் சொல்றாங்களே பா வருத்தப்படாதீங்க என்று சொல்ல... என் பையன் இறந்து போ நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா... அப்ப எனக்கு ஆறுதலா இருந்து தோள் கொடுத்தது விக்ரம் மட்டும்தான்... என் பையன் இல்லாத குறையை அவன் தீர்த்துக்கொண்டு இருக்கிறான்...

அவனுடைய இடத்தில் இருந்து எப்போ விக்ரம் வேலை பார்க்கிறான் ...அவன் ஆரம்பித்து வைத்து வேலையை விக்ரம் தான் முடிக்க போறான் என்று கண் கலங்கி கூறியவர் ...நீங்க ரொம்ப நாள் சந்தோஷமா இருக்கணும் டா என்று தலையில் கை வைத்து கூறினார்...

அப்பொது தன் மகளுடன் வந்த விக்ரமை பார்த்துவிட்டு ... என் பொண்ணு சாயிஷா நான் இல்லனா கூட இருந்திடும் விக்ரம்னா ரொம்ப செல்லம் என்று சாயிஷாவை பார்த்து கூறினார்... ஏனோ விக்ரமின் கையை பிடித்துக் கொண்டு வரும் சாயிஷாவை பார்த்ததும் சிறு பெண் என்றாலும் பொசசிவ் எட்டிப் பார்த்தது மதிக்கு..

அவள் வந்தவுடன் யுகமதியை கட்டிக்கொண்டு எனக்கு இந்த அண்ணியை ரொம்ப புடிச்சிருக்கு என்று இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டாள்... கள்ளம் கபடம் இல்லா அன்பில் அவளை அப்பொழுதே யுமதிக்கு பிடித்து விட்டது... வீடு முழுவதும் சுற்றிக்காட்டியவள் அவளுக்கு வாங்கி வைத்த தோடு மணி போன்ற அனைத்தையும் யுகமதிக்கு எடுத்துக் கொடுக்க வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவள் கையில் வைத்து திணித்தாள் ...

விக்ரம் அனைத்தும் ஒரு புன்னகையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தான்... பாத்திமா இருவருக்கும் உணவு எடுத்து வரவா என்று கேட்டவுடன் வேண்டாமா ரெண்டு பேருமே சாப்பிட்டாச்சு என்று விக்ரம் கூறிய உடன்.. மதியிடம் திரும்பியவர் தம்பிக்கு கடல் மீனா ரொம்ப பிடிக்கும் அடிக்கடி சமைச்சு போடு... சும்மாவே உன் பின்னாடி சுத்துவான்.. இப்படி சமைச்சு போட்டா உன் கை பக்கத்தில வெளியே போகவே கூடாதுன்னு தோணணும் சரியா என்று சிரிக்க...

அவள் விழித்தால்... விக்ரம் ,அம்மா அவ ஒரு ஐயர் வீட்டு பொண்ணு ..அவளுக்கு அதுலாம் பிடிக்கவே பிடிக்காது என்று சொன்னவுடன்... அச்சோ இது தெரியாம போச்சுடா என் பையனுக்கு கவுச்சி இல்லாம சாப்பாடு இறங்காதே ...அப்போ அப்போ சாப்பிட பர்மிஷன் கொடு மா அவனுக்கு என்று சொல்ல... சரி என்னும் வகையில் தலையை அசைத்தால் ...இருவரிடமும் சொல்லிக் கொண்டு மீண்டும் கடற்கரை அருகில் அழைத்து வந்தான் ....

கடலில் அவள் கால்கள் நனைய நின்று கொண்டிருக்க இவனோ ஒரு படகின் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் .. சுனாமி வருவதற்கு முன் ஒரு அமைதி இருக்குமே அதுபோல அவள் அமைதியாக இருப்பது போலவே அவன் கண்களுக்கு தெரிந்தால்... சுனாமியே வந்தாலும் கல்லுல கட்டுன அணை மாதிரி நிற்பேனே தவிர உன்னை விட்டு போக மாட்டேன் டி மாமி என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...

யாஷோட மாமா இப்படி பண்ணிட்டாரு அவங்க மனசு உறுத்தாமல் இருக்குமா.... இந்த ரவுடி நல்லவனா கெட்டவனா... எல்லாரும் இவனை நல்லவன் மாதிரி காட்டுவதால் நம்ம கண்ணுக்கும் அது மாதிரி தெரியுதா ...பொண்ணுங்களுக்கு உயிராய் இருக்கிறது கற்பு...அதையே அவன் எடுத்துட்டான் ...ஆனா அதனால மட்டும் அவனை கெட்டவன் என்று சொல்ல முடியுமா...

இல்ல நம்ம கிட்ட நடிக்கிறானா என்று பலவிதமாக குழம்பி விட்டால் யுகமதி.... ஆனாலும் அவள் உள் மனது அவனை நம்பி தான் பாரேன் ...அவன் காதல் உனக்கு புரியவில்லையா என்று கேள்வி எழுப்ப ..முதலில் யாஷை பற்றி நினைப்போம் இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிப்போம்.. அவனை விட்டு சென்று விட்டால் சிறிது காலத்திலேயே தன் மீது உள்ள ஆசை எல்லாம் அவனுக்கு மறந்துவிடும் என்று அல்பமான யோசனைகளுடன் கடலில் கால் நினைத்துக் கொண்டிருந்தாள்...

ரொம்ப யோசிக்காத டி மாமி... யோசிச்சு யோசிச்சு தலைவலி தான் வரும் ...இந்த அமைதியான சூழ்நிலையில் சந்தோஷத்தை மட்டும் பாரு என்று விக்ரம் சொல்ல ....அவனை ஒருமுறை பார்த்துவிட்டு திரும்பி விட்டாள்... அவனுக்கு இன்னமும் வேலைகள் மிச்சம் இருக்க... எனக்கு வேலை இருக்கு யுகா வரியா என்று கேட்க மீண்டும் அந்த ரவுடிகள் இருந்த கும்பலுக்கு அழைத்து வந்தவன் மணி செந்திலிடம் அவளை விட்டுவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான்....

முதலில் இருந்த பயம் இப்பொழுது அவளுக்கு இல்லை... இத்தனை நாள் ரவுடிகள் என்று கேட்டாலே பயப்படும் மதி இத்தனை பேருக்கு மத்தியில் ஒரு குடும்பத்துடன் இருப்பதைப் போலவே நினைத்துக் கொண்டிருந்தாள்... அனைவரும் கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்... அப்போது ஒருவன் அண்ணனை நான் முதல்ல நான் எங்க பார்த்தேன் தெரியுமா அண்ணி என்று ஆரம்பித்தான் ...

அவள் எங்க என்பது போல் பார்க்க... வைன் ஷாப் வாசல்ல ...ஸ்கூல் போறேன்னு சொல்லிட்டு வைன் ஷாப்புக்கு போயிட்டேன். ..அண்ணன் செவில்ல நாலு கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பிட்டாரு.... அப்புறம் நிறைய புத்திமதி சொன்னார்... அதனால தான் படிச்சு முடிச்சுட்டு இப்ப வேலை தேடிட்டு இருக்கேன்...

அதுவரைக்கும் அண்ணனுக்கு சின்ன சின்ன வேலை செஞ்சு கொடுப்பேன் ..என்ன பார்த்தாலே திட்டுவாரு ஆனா நான் தான் இங்க வந்து இவங்க கூட சேர்ந்துட்டேன் என்று சொல்ல... படிக்கிற வயசுல படிக்கணும் அப்பதான் வாழ்க்கையில பெரிய இடத்துக்கு போக முடியும்... உங்க அம்மா அப்பா எல்லாம் எவ்வளவு கனவு கண்டிருப்பாங்க... இந்த மாதிரி ரவுடியா இருக்கியே அதனால என்ன பிரயோஜனம் சொல்லு ...

உயிருக்கு உத்திரவாதம் இருக்குமா என்று மதி கேட்க ...இதே தான் எங்க அண்ணனும் சொல்லும் அதனாலதான் அண்ணனுக்கு உன்னை பிடிச்சிருக்கு போல அண்ணி என்று அவன் சொன்னதும்... சரியா சொன்னடா பாபு... எங்க அண்ணனுக்கு பொண்ணுங்க விக்கிற தொழிலும் போதை கடத்துறதும் பிடிக்கவே பிடிக்காது அண்ணி..

அதனால்தான் அந்த அமைச்சர் நம்பிக்கையான ஆளா அண்ணனை கூடவே வெச்சி இருக்காரு... அந்த ஆளு எவ்வளவு தப்பான தொழில் பண்ணாலும் அண்ணனை மற்ற பொருள் கை மாத்துற வேலைக்கு மட்டும் தான் அனுப்புவார்... இல்ல அண்ணனோட கோவத்துக்கு முன்னாடி அமைச்சர் எல்லாம் சும்மா...

சிவனோட மூன்றாவது கண் திறக்கிற மாதிரி அண்ணன் கண்ணாலே எல்லாரும் எரிச்சிடுவாரு என்று சொல்ல... மீண்டும் விக்ரமின் மேல் உள்ள மதிப்பு உயர்வது போலவே அவள் மனதில் தோன்றியது... அனைவரும் தங்கள் வாழ்க்கையை பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள்... அப்போது ஒருவன் நீங்க யாரையும் லவ் பண்ணலையா என்று கேட்க ...

மதி ஸ்கூல் விட்டா வீடு ...வீடு வீடா ஸ்கூல் இது மட்டும் தான் அதோட பிழைப்பு... இல்லை என்றால் அவங்க சித்திக்காரி மண்டைய புடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுடும் என்று செந்தில் சொன்னதும் ...அப்ப அண்ணியை உனக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்க ....அவ கிட்ட தான் என் தங்கச்சி டியூஷன் போனா என்றான் செந்தில்....

அண்ணி நீ வாத்தியாரா என்று ஒருவன் கேட்க ...ஆமாம் என்று தலையசைத்தும்.... அய்யய்யோ எனக்கு வாத்தியார் அப்படினா அலர்ஜி என்று இரண்டு அடி பின் தள்ளி அமர்ந்து கொண்டான் ...அவள் புடவையை தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு அவன் மண்டையில் கொட்ட... வாத்தியாருன்னு சொன்னா கோவம் வருது என்று அனைவரும் கேலி செய்ய ...ஆளுக்கு இரண்டு கொட்டு வைத்தவள் செந்திலின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்...

அவர்களுடன் பேசுவதில் மணி ஆனதே தெரியவில்லை.... திரும்பவும் விக்ரம் வந்தான் யுகா வீட்டுக்கு போகலாமா என்று கேட்க சரி என்று தலையசைத்தாள்... மணி 12க்கு மேல ஆயிட்டு இப்ப வீட்டுக்கு போகணுமா அண்ணா என்று கேட்க... அப்பொழுதுதான் மணி இவ்வளவு ஆகிவிட்டதா என்று அதிர்ச்சி அடைந்தால் மதி... ஏனென்றால் இவ்வளவு நேரம் அவள் வெளியில் இருந்ததே கிடையாது...

நான் பாத்துக்குறேன் நீங்க கிளம்புங்க என்று கூறிய விக்ரம் குளிரில் நடுங்கும் அவள் உடலை பார்த்துவிட்டு சற்று தூரம் வந்ததும் தான் போட்டிருந்த சட்டையை கழட்டி அவள் கையில் கொடுத்தவன் போட்டுக் கொள்ளுமாறு சொன்னான்... அவளும் குளிர் எடுக்கவும் அதனை போட்டுக் கொண்டு வண்டியில் அமர்ந்து விட்டால் ....

கடற்கரை சாலையில் வண்டி மிதமான வேகத்தில் செல்ல கண்ணை மூடி அந்த தருணத்தை ரசித்துப்படியே வந்தால் மதி ...எதிரே டிஜிபி சதாசிவம் வண்டி வர இவன் வண்டியை நிறுத்தி விட்டான்... யுகமதி போலீஸ் ஜிப் பார்த்ததும் விக்ரமை பிடிக்க வந்திருப்பார்கள் என்று நினைத்து பயத்தில் அவன் கையைப் பிடித்துக் கொண்டால்...

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவனை காட்டிக் கொடுப்பாள் என்று அவன் நினைக்க ...அவளோ அவனுடன் ஒன்றிய படி நிற்பதை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான் ...டிஜிபி வேகமாக இறங்கி வந்தவர் இந்த பொண்ணு நீ கடத்திட்டு வந்துட்டேன்னு இவளோட மாமா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு...

ஒழுங்கா மரியாதையா அந்த பொண்ண அனுப்பிவை என்று விக்ரமிடம் அவர் கத்த.... என் பொண்டாட்டியை யாரு கூடயும் அனுப்பி வைக்க முடியாது... அப்படி நினைச்சா அவங்க உடம்புல உயிர் இருக்காது என்று கூறியவன் அவரிடம் ஒரு ஏளன புன்னகையை சிந்தி விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் ...

அமைச்சர் அடியாள் என்ற திமிர் என்று மனதில் நினைத்த அவர் ஒன்றும் செய்ய இயலாது கையாலாகாத சூழ்நிலை நினைத்து தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டார்.... இங்கு மதி கேட்கலாமா வேணாமா என்று நினைத்து பின்னர் சட்டை இல்லாம வரீங்க உங்களுக்கு குளிரலையா என்று யுகமதி மெலிதான குரலில் கேட்க ....அவன் சிரித்துக் கொண்டே இதெல்லாம் பழகி போச்சு என்றான் ...

ஆனால் அவள் கேட்க நினைத்தது அது அல்லவே ... மீண்டும் அவனிடம் ரோட்ல யாராவது பார்க்க மாட்டாங்களா என்று சிறிதான தைரியத்தை வர வைத்துக் கொண்டு கேட்க ...உனக்கு யாராவது என் உடம்ப பாப்பாங்கன்னு பயமா இருக்கா என்று வண்டியை நிறுத்திவிட்டு அவளை பார்த்து கேட்டான் ...வேகமாக இல்லை என்ற தலை ஆட்டியவள் அப்பொழுதுதான் உணர்ந்தால் இரவு நேரத்தில் அவ்வளவாக யாரும் இருக்க மாட்டார்கள் என்று...

வீடு வந்ததும் அவள் இறங்கி அவனை பார்க்க கதவை எல்லாம் சாத்தி கொண்டு உள்ளே வந்தான் ...அனைவரும் இருக்கும்போது இல்லாத பயம் இவனிடம் தனியாக இருக்கும்போது திரும்பி வந்து கொண்டது... பயத்தில் அவள் ஹாலிலேயே நிற்க உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் வா என்று அவளை தங்களின் அறைக்கு அளித்து சென்றான்...

கட்டிலில் அவள் அமர வைத்து ஏதாவது சாப்பிட்டுறியா என்று கேட்க வேண்டாம் அங்கு சாப்பிட்டதே எனக்கு போதும் என்றாள்... ஏன் மாமி என்னை உனக்கு புடிக்கல..... இதுவே நான் படிச்சு முடிச்சுட்டு உன்னுடைய யாஷ் போல வேலையில இருந்தா உனக்கு என்ன புடிச்சிருக்குமா என்றான் ஏக்கமான குரலில்....

இல்லை என்று அவளுக்கு சொல்ல வாய்வரை வார்த்தை வந்தது.... ஆமாம் என்று சொல்ல மனது சுத்தமாக வரவில்லை ...இடைப்பட்ட மனநிலையில் சிக்கித் தவித்தாள் ...அவள் மௌனமாக இருப்பதை பார்த்து என்னை ஏத்துக்கிறியா என்று அவன் கேட்க... அவள் விழித்தால்... என்ன ஏத்துக்கணும் என்று கேட்க ...அவளை நிற்க வைத்தவன் அவள் புடவையை கழட்ட ஆரம்பித்தான்...

அவள் பயத்தில் தடுக்க முயற்சிக்கும் போது புடவையை தூக்கி ஓரத்தில் எறிந்துவிட்டு அவளை கட்டிலில் தள்ளி அவள் இதழை முற்றுகையிட்டான்... இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் உள்ளே அரக்கன் திரும்ப வந்து விட்டானா என்று நினைத்தவள்... அவனை அடித்தும் நகங்களை வைத்து கிறியும் பார்த்தால்... அவனிடமிருந்து விடுபட முடியவில்லை....

சிறிது நேரத்தில் அவள் இதழிலிருந்து தன் இதழை பிரித்தவன் ...என்னால கண்ட்ரோல் பண்ண முடியல அதனால சின்னதா ஒரு முத்தம் மட்டும் கொடுத்து விட்டேன் என்று அவள் கழுத்து வளைவில் நீண்ட முத்தம் வைத்தவன் அவளை அணைத்து படுத்திக் கொண்டான்.... இதுக்கு சாரி சொல்ல முடியாது டி யுகா ...இது கூட இல்லாமல் போனா சத்தியமா மிருகமா மாறிடுவேன் ... புரிஞ்சிக்க டி மாமி என்று நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு தூங்கி விட்டான்..

இது எந்த மாதிரியான காதல் என்று அவளால் உணர முடியவில்லை... புடவை இல்லாமல் வெற்றியடையில் அவன் கைகள் இறுக்கமாக பற்றி இருந்தன... அவள் கூச்சத்தில் நெளியும் போதெல்லாம் அவன் இறுக்கம் கூடிக் கொண்டே போனது ...சற்று நேரம் பொறுத்து பார்த்தவள் அவன் தூங்கி விட்டதை உணர்ந்து ஏழ முயற்சித்தாலும் தூக்கத்திலும் தள்ளி போகாத மாமி என்று உளறினான் ...சற்று நேரத்தில் அலைந்த தலைப்பில் அவளும் உறங்கி விட்டாள்...

ஹாஸ்பிடல்...
அதிகாலை 3 மணி அளவில் யாஷ் கண் விழித்தான்... அங்கு அமர்ந்திருந்த ஜீவானந்தம் மீனாட்சி சுந்தர பாண்டியன் மூவரும் அவன் அருகில் வந்தனர் ...தம்பி ஏம்பா இப்படி பண்ண... வண்டியை பார்த்து ஓட்டிட்டு வந்திருக்கக் கூடாது என்று ஜீவானந்தம் மீனாட்சி இருவரும் அழுதனர்... அந்த லாரி காரணை உண்டு இல்லைன்னு பண்ணியாச்சு... இனிமே உனக்கு எதுவும் பிரச்சனை இல்லை நீ நல்லா இருக்க என்று சுந்தரபாண்டியனும் தன் பங்கிற்கு கூறினார் ....

அவனோ ஜானு என்று அவன் முணுமுணுத்தப்படி கை காலை அசைத்து பார்த்தான்...சுத்தமாக அசைக்க முடியவில்லை இருந்தும் வலியை பொறுத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவன்... எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்று எழுந்திருக்க சுத்தமாக அவனால் முடியவில்லை...

உன்னை இரண்டு வாரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க என்று அவன் தாய் கூறியதும் கோபம் கொண்டவன் வேகமாக டிரிப்ஸ் கொண்டிருந்த ஊசியை கழட்டி எறிந்து விட்டு கால் வலியும் பொறுத்துக் கொண்டு வேகமாக தன் அறையை விட்டு வெளியேறினான்... இதை யாரும் எதிர்பார்க்கவில்லை அவன் பின்னாலேயே போக அவன் கோப விழிகளை பார்த்து தயங்கி நின்று கொண்டார்கள் ...

டேய் இராவணா உனக்கு என் கையால தாண்டா சாவு என்றவன் தனது டிரைவரிடம் காரை எடுக்க சொன்னான்... அவன் வந்து இறங்கிய இடம் விக்ரம் யுகமதியை அடைத்து வைத்திருக்கும் அவனது வீடு... இதை அறியாமல் விக்ரம் அவளை நிம்மதியாக அணைத்துக் தூங்கி கொண்டு இருந்தான்...

Continue Reading

You'll Also Like

18.3K 1.6K 43
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
59.1K 2.4K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
72.2K 3.4K 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
67.2K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...