இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

39.9K 994 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 17 💖

854 24 6
By Anupriya_Arun08

ஜீவானந்தம் டீஜீபி சதாசிவம் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் பேச்சற்று அமர்ந்திருந்தார் ....ஜீவானந்தம் அதிர்ச்சியானதை பார்த்து லேசாக சிரித்த சதாசிவம் இதை சாதாரணமா தான் சொன்னேன்... உங்க பையன் மேல எனக்கு எந்த தனிப்பட்ட கோபம் இல்ல... நீங்க உங்க பையனுக்கு அடிபட்டிச்சு-ன்னு சொன்னதும் எனக்கு முதல்ல ஞாபகம் வந்தது இதுதான்...

அடிபட்டதற்கு காரணம் என்ன யாருன்னு நான் கண்டுபிடிச்சு சொல்றேன்ன் என்று நிறுத்திவிட்டு...பின் ...நீங்க சொன்ன உங்க மருமக என் பையன் அடி வாங்குனதுக்கு காரணமான அதே பொண்ணு தான என்று கேட்க ...மௌனமாக ஆம் எனும் விதமாக தலையிட்டிர் ஜீவா ...கேஸை சீக்கிரமா முடிச்சு தரேன்... உங்க நம்பர் என்கிட்ட இருக்கு சார்...

அந்த பொண்ணு உங்க பையன் இரண்டு பேரும் பத்திரமா உங்களுக்கு கிடைப்பாங்க... என் மேல நம்பிக்கை வைங்க சார் நீங்க கிளம்பலாம் என்று அவர் சொல்ல... ஜீவானந்தம் தயங்கிக்கொண்டே உங்க பையன் இப்போ எப்படி இருக்காரு என்று கேட்டார் ...அந்த சம்பவம் நடந்ததுக்கப்புறம் அந்தப் பையனோட அப்பா கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு முயற்சி பண்ணினேன் ...

ஆனால் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க... இப்போ உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் சார்... அதை எல்லாம் அப்பவே மறந்துட்டேன் என்று பொறுமையாக கூறினார்.. ஜீவானந்தம் சிறு தலையசைப்புடன் கிளம்பி விட்டார் ....சதாசிவம் கோவத்துடன் அமர்ந்திருந்தார்... தேவ் அடிபட்டதற்கு காரணம் யார் என்பதை அவர் அறிவார்...

ஆனால் ஜீவானந்தத்திற்கு மேலும் கவலை கொடுக்க வேண்டாம் என்று எண்ணி விட்டு விட்டார் ...ஆனால் கண்டிப்பாக நேரில் சென்று தட்டிக் கேட்க வேண்டும் என்று நினைத்தவர் அடுத்த திட்டத்தை யோசித்துக் விட்டு வெளியேறினார்...

இங்கு மதியை அழைத்துக்கொண்டு கோபமாக கிளம்பிய விக்ரம் அவளை தனியாக வீட்டில் விட மனம் வரவில்லை... அமைச்சர் பொருளை கைமாற்றும் படி கூறியிருந்தால் ஹார்பருக்கு அவளையும் சேர்த்து அழைத்து சென்றான்... அங்கு அவர்களுக்கு முன்பாக செந்தில் மணி இருவரும் அகீர் பாயுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்...

விக்ரமே பார்த்ததும் மனம் முழுக்க சந்தோஷத்துடன் வாடா ரொம்ப நாளாச்சு எப்படி இருக்க என்று அவனை அணைத்து கொண்டவர் பாசமாக கேட்க... நான் நல்லா இருக்கேன் பாய் என்று பின்னால் அழுதபடி என்ற யுகமதியை பார்த்து கூறினான்... அப்பொழுதுதான் அவரும் அவளை பார்த்தார்... யார் இந்த பொண்ணு என்று கேட்க... அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் என்னோட பொண்டாட்டி தான் என்று கூறினான்..

சற்று அதிர்ச்சி அடைந்தவர் அவனை தனியாக அழைத்து வந்து என்னடா சொல்ற உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு என்று கேட்டார்.... நடந்ததை சுருக்கமாக கூறினான் விக்ரம் ...அவனது கன்னத்திலேயே அறிந்தவர் ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசமாகிறது தப்பு விக்ரம் ..

உன்னை நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா... நமக்கு எந்த சாபம் கிடைத்தாலும் அதில் இருந்து தப்பிக்க வழி உண்டு... ஆனா பெண்பாவம் பொல்லாதது என்று கூறினார்... எனக்கு புரியுது பாய் ஆனா நான் வேணும்னே பண்ணல என்று அவருக்குப் புரியும்படி நடந்ததை விளக்கினான்.... அந்த பரதேசி உனக்கு அந்த மருந்து கொடுத்தானா என்று கண்கள் சிவக்கக் கேட்க... அவனை கொன்னுட்டேன் என்று இவன் முடித்து வைத்தான்...

நல்லது தான் செஞ்சிருக்க ... அப்புறம் அந்த பொண்ணை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்று சிரிப்புடன் பாய் கேட்டார்... ரொம்பவே பிடிக்கும் ஆனால் நான் பண்ணுது தப்புங்கிறதுனால என்னாலயும் அவ கிட்ட சாதாரணமா பேச முடியல ...அவ என்ன மொத்தமா வெறுக்க ஆரம்பிச்சிட்டா என்று வருத்தத்துடன் கூறினான்....

யுகமதி அழுத முகத்தை பார்த்து செந்தில் அவள் அருகில் சென்று என்ன ஆச்சு மதி... நான் எல்லாம் கூட இருக்கேன் அழுகாத என்று அவளை தேற்றினான்... கடல் காற்று உடலில் தழுவி செல்ல மனம் சற்று லேசானது போல் மதி உணர்ந்தால்... செந்திலிடம் தலையை அசைத்து விட்டு அந்த இடத்தை சுற்றிலும் நோக்கினால்....

கடல்... ரம்யமான இரவு நேரம்... குளிர் காற்று உடலை ஊசி போல் துளைக்க கையை கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.... இருவதிற்கும் மேற்பட்ட அடியாட்கள் அவர்களை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.... அனைவரும் யுகமதியை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருக்க பாய் விக்ரம் இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.... மணி செந்தில் இருவரும் அவளை சகஜமாகும் பொருட்டு பேசிக் கொண்டிருக்க விக்ரம் மனம் நிம்மதி கொண்டது...

இங்க பாருங்க இந்த பொண்ணு நம்ம விக்ரம் ஓட பொண்டாட்டி என்று அகீர் பாய் கூற அனைவரும் விக்ரமிற்கு வாழ்த்து கூறினார்கள்... யுகா இங்க வா என்று விக்ரம் அவளை அழைக்க... போகலாமா வேண்டாமா என்று மனது நினைத்தாலும் அவன் அழைப்பை ஏற்று கால்கள் அவனை நோக்கி சென்று கொண்டிருந்ததை தடுக்க முடியவில்லை அவளால்...

அவளை தோளோடு அணைத்தவன் பயப்படாதே இது நம்ம இடம் என்று அவள் காதில் கிசுகிசுத்தான்... அண்ணே சாப்பாடு எல்லாம் ரெடி ஆயிடுச்சு சாப்பிட போலாமா என்று ஒருவன் கேட்க... செந்தில் மணி இருவரையும் அழைத்து மதியுடன் அனுப்பி வைத்தான்... இங்கு பாயிடம் என்னென்ன பொருட்கள் அனுப்ப வேண்டும் என்று கேட்டு அதை துரிதமாக கணக்கிட்டு போட்டோ எடுத்துக் கொண்டவன் ...ஹார்பர் ரவியிடம் சென்று பொருட்களை வாங்கி அதை கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்து திரும்பினான்...

மதிக்கு செந்தில் மற்றும் மணி அருகில் இருப்பதால் மற்றவர்களை பார்த்து பயம் வந்தாலும் இவர்கள் இருக்க இதுவும் செய்ய முடியாது என்று நம்பிக்கையில் அவர்களுடன் சென்றாள்... இது மாதிரி வாழ்நாளில் ஒரு நாள் வரும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை... தெரியாதவர்கள் முன் அதுவும் தான் மட்டும் ஒரு பெண் இருபதிற்கும் மேற்பட்ட ரவுடிகள் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தாலும் ஏதோ தைரியத்தில் அங்கு இருந்தால் ...

காரணம் விக்ரம் மனைவி என்று மனதில் வந்து தைரியமாக இருக்குமோ... அவன் கட்டிய தாலிக்கு எத்தனை சத்தியா என்று தனது நெஞ்சில் வருடிக் கொண்டிருந்த தாடியை தன்னை அறியாமல் தொட்டுப் பார்த்தால்... ரவுடிகள் வட்டமாக அமர்ந்து பிரியாணியை வெட்டிக் கொண்டிருந்தார்கள்... மணி செந்தில் இருவரும் அருகில் சற்று தள்ளி மதி அமர்ந்தால்...

ஒருவன் பிரியாணி தட்டை அவளிடம் நீட்ட... தங்கச்சி சைவம் டா ...எங்க அக்ரஹாரத்திலே ரொம்ப ஆச்சாரமானது அவங்க குடும்பம் என்று யுகமதியை பார்த்து செந்தில் கூற ... விக்ரம் அண்ணன் ஒரு ஐயர் ஆத்து பொண்னையா கட்டிட்டு வந்து இருக்கு ...நாங்க வேற பிரியாணி மட்டும் தானே செஞ்சோம் ....அண்ணி உங்களுக்கு வேற என்ன சாப்பிடு வேணும் என்று ஒருவன் கேட்க... இவர்களால் இப்போது புதிதாக எதுவும் செய்ய முடியாது... அதுவும் சாப்பிட அமர்ந்து விட்டால் எழ கூடாது என்று தந்தை கூறியது நினைவு வர..

நீங்க சாப்பிறதே கொடுங்கோ என்றாள் சற்று அச்சத்துடன்... அண்ணி நான் சொல்லி தரேன் பிரியாணி சாப்பிட...இங்க இருந்து உக்காருங்க என்று பாசமாக மட்டொருவான் அழைக்க... மணியோ அண்ணி நான் கொண்டு வந்து தருகிறேன்... முதல் தடவை சாப்பிட்டு பாரு அப்புறம் நீயே நினைச்சாலும் சாப்பிடுவதை தடுக்க முடியாது என்று அவளை கையைப் பிடிக்க அமர வைத்தான்....

உண்மையாகவே மணி அவளை ஒரு சிறு குழந்தை போல் நடத்திக் கொண்டிருந்தான்... இத்தனை நாள் யாஷ் மற்றும் தன்னிடம் உரிமையாக நடந்து கொண்டிருக்கும்போது மணியும் அந்த வரிசையில் சேர்ந்து கொண்டாள்... பிரியாணியை ருசி பார்த்தால் முதல் முறையாக... இது மட்டும் எப்படி எவ்ளோ டேஸ்டா இருக்கு என்று அவள் கேட்க...

அது என்னமோ தெரியல சட்டில கோழியை கொட்டுனதும் இவ்வளவு ருசி வந்துவிட்டது என்று ஒருவன் சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்... எங்க ஆத்துல வகை வகையா காய்கறி குழம்பு கூட்டு செய்வா ஆனா அதுல இவ்வளவு ருசி வரமாட்டேங்குது என்று அவள் சொன்னதும்... என்ன இருந்தாலும் அசைவம் அசைவம் தான் மாமி ஒழுங்கா சாப்பிடுங்க என்று ஒருவன் கிண்டல் செய்ய ....மதி தன்னை மறந்து சிரித்துக் கொண்டே சாப்பிட்டால் ...

அந்நேரம் அங்கு வந்த விக்ரம் என்னடி மாமி ...அன்னைக்கு சைவ ஹோட்டலுக்கு தான் போவேன் ...ஹோட்டலில்ல கால் கூட வைக்க மாட்டேன்னு திட்டின... இன்னிக்கு பிரியாணியை வெட்டு வெட்டுன்னு வெட்டுற என்று கேலியாக கூற ...அவனை முறைத்தவள்... செந்திலோ அண்ணா சும்மா இரு என்றதும் சாப்பாட்டை பார்த்தால் மதி... அதில் பாசமாக மணி இலகுவான சதை பகுதி கரியை அவளுக்கு தனியாக எடுத்து வைத்திருந்தான்... அதை வாயில் போட்டுக்கொண்டு மென்று கொண்டே திரும்பியும் விக்ரமை பார்த்தால்...

என்ன முறைப்பு என்று அவள் அருகில் குனிந்து விக்ரம் கேட்க... அண்ணே தங்கச்சிக்கு சாப்பிட தெரியல நாங்க எல்லாம் பேசி பேசி சரி பண்ணிட்டோம் என்று ஒருவன் சொல்ல... அப்படியா மாமி உங்க தோப்பனார் இந்நேரம் இதெல்லாம் பார்த்திருந்தா நெஞ்சு வெளியே வந்து இருக்கும் இல்ல என்று அவன் திரும்ப கேலியாக கேட்க ...எரிக்கும் பார்வை அவனை பார்த்தவள் சாப்பாட்டை எடுத்து அவன் வாயில் அடைத்தால்...

நானே சொல்லணும் நினைச்சேன் அண்ணனுக்கு சாப்பாடு ஊட்டி விட சொல்லி ஆனா நீங்களே ஊட்டி விட்டுட்டீங்க என்று ஒருவன் சொன்னதும்... அப்பொழுதுதான் உணர்ந்தால் தன் கையால் அவனுக்கு உணவை அள்ளி வாயில் அடைத்ததை... அங்கு தனக்காக ஒருவன் உயிருக்கு போராடி திரும்பி வந்திருக்கிறான்...

தான் இங்கு இவர்களுடன் கூத்தடிப்பதை நினைத்து மனம் கவலை கொண்டவள் சாப்பாட்டை சாப்பிடாமல் அமர்ந்து விட்டால்... விக்ரம் அவள் மனநிலையை உணர்ந்து அவளது தட்டை வாங்கி மிச்சம் இருந்ததை சாப்பிட்டான்... அண்ணி போதுமா என்று ஒருவன் கேட்க ...கண்ணீர் வழியும் முகத்தை யாருக்கும் காட்ட விரும்பாமல் குனிந்த படியே வேண்டாம் என்று தலையசைத்தாள்...

என்ன ஆச்சு தங்கச்சி என்று செந்தில் பாசமாக கேட்க... ஒன்னும் இல்ல என்று அவள் எழுந்து அருகில் உள்ள போட்டின் மேல் சாய்ந்து நின்று கொண்டாள்.... மற்றவர்கள் சாப்பிட்டவுடன் அமர்ந்து குழுவாக பேசிக் கொண்டிருக்க விக்ரம் யுகமதியிடம் வந்தான்... அமைதியான அந்த இரவை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை ....ஆனால் அழுகை நின்று விட்டது...

இந்நேரம் யாஷ் கண் விழித்திருப்பானா என்று அவள் யோசிக்க ....யுகா என்று அழைத்தபடி விக்ரம் வந்து நின்றான்... என்னை கொஞ்ச நேரம் கூட நிம்மதியாக இருக்க விட மாட்டியா என்று அவனை திரும்பி பார்க்காமலே கேட்டாள்... நீ என்ன விலகி போறதா நினைச்சு நெருங்கிகிட்டு இருக்க ....அது உன் மனசுக்கு தான் புரியல என்று மனதோடு நினைத்தவன் ...ஒரு பிரச்சனையும் இல்லை டி நீ வேடிக்கை பாரு என்றான்...

நீண்ட அமைதிக்கு பின் யாஷை இப்படி பண்ணதுன்னு யாருன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் என்று அவன் கூறியதும் வேகமாக திரும்பி அவனை பார்த்தால்... யார் என்று கேள்வி அவள் கண்ணில் தேங்கியிருந்தது... சொன்னா நம்புவியானு தெரியல அமைச்சர் தான் என்றவன் கடலை நோக்கி பார்த்தான்....

அவர் ஏன் தேவ்வை கொலை பண்ண முயற்சி பண்ணனும்... அவரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க தானே நினைக்கிறார் என்று அவள் கேட்டாள்... உண்மைய சொல்லணும்னா யாரோ அவரை பத்தி எதிரா ஆதாரம் திரட்ட முயற்சி பண்ணி இருக்காங்க அப்படின்னு தெரிஞ்சுகிட்டு கொலை பண்ண ஆள் அனுப்பி இருக்காரு ...ஆனா சொந்த மருமகனே அடிபட்டது தெரிஞ்சும் துடித்து போயி ஹாஸ்பிடல் ஒக்காந்து இருக்காரு என்று பொறுமையாக அவன் கூறியதும்...

அவள் குழப்பத்துடன் இதெல்லாம் எதுக்கு நீ என்கிட்ட சொல்ற ...நீ யாஷுக்கு எதிராக தானே இருக்கணும் என்று அவள் கேள்வி எழுப்பினால் ...எனக்கு எதிரியா இருக்கிறதுக்கு ஒரு தகுதி வேணும் ...அது அவன் கிட்ட இல்ல... என் எதிரி யாருன்னு யாருக்குமே தெரியாது என்று கண்கள் சிவக்கக் கூறியவன் ....அவனுக்கும் உனக்கும் இருக்கிறது வெறும் நட்பு பாசம் இதெல்லாம் கடந்த ஒரு பந்தம் ...

அது கண்டிப்பா காதல் கிடையாது உங்கள ரெண்டு நாள் பாத்து எனக்கே அது நல்லா புரிஞ்சுது ...அதனாலதான் என் மனசுல இருக்குற காதலை வெளிப்படையா உன் கிட்ட சொன்னேன்... நான் சொன்ன விதம் வேணா உனக்கு தப்பா இருந்திருக்கலாம்... ஆனா என் மனசுல இருக்குறத மறைத்து எனக்கு பேச தெரியாது என்று கூறியவன் குரலில் இருந்த கம்பீரமும் திமிரும் இப்பொழுதும் குறையாமல் மிரட்டும் தோனியில் தான் இருந்தது ...

பதவிக்காக யாரை வேணா என்ன வேணா பண்ணலாமா என்ற கேள்வி அவள் மூளையில் வந்தது... விக்ரம் கூறிய காதல் என்ற வார்த்தை அவள் மனதில் முழுவதும் இப்பொழுது சூழ்ந்தது ...

என்னை ஏன் உனக்கு பிடிக்கணும் ...ஊர்ல உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா... என் வாழ்க்கையில நான் சந்திக்காத பிரச்சனையே இல்ல ஆனா கடவுள் எனக்கு மட்டும் திரும்பத் திரும்ப எல்லா ரூபத்திலும் பிரச்சினையே தரார் என்று அவள் கண்ணில் விரத்தியின் காரணமாக கண்ணீர் வழிந்தது... விக்ரம் பதில் கூறாமல் அவளை அணைத்துக் கொண்டவன் நீ அழுகாத பாக்கும்போது எனக்கு கட்டிப்பிடிச்சு ஆறுதல் படுத்தனும் தான் தோணுது...

உன் கூட இருக்கும் போது உன்னை நெருங்கும் போது உன் உடம்ப அடியனும்னு எனக்கு எண்ணம் வந்தது இல்லை... உன் மனசை அடையனும்-ங்கற எண்ணம் மட்டும் தான் என் மனசுக்குள்ள இருந்தது... உன் விருப்பம் இல்லாம உன் கற்ப எடுத்தது தப்புதான்... நான் சுயநினைவு அப்போ இல்ல ...நீ நம்பலனாலும் அதான் நிஜம்..

உண்மையா சொல்லுறேன் உன்னை சீண்டி பார்க்க தொணும்... உன் பக்கத்தில் இருக்கும் போதும் என் உணர்வுகள் தோண்டப்படுவது உண்மைதான்... ஆனால் உன்னை முழுசா எடுத்துக்கணும்னு நான் நினைச்சதே இல்லடி மாமி என்றான் ஆழ்ந்த குரலில்... அவன் கண்களில் தனக்கான காதலை கண்டால்... அவன் அணைப்பிலிருந்து அவளுக்கு விடுபட தோன்றவில்லை ...

யாஷிடம் எப்பொழுதும் தாய்மை உணர்வை கண்டிருக்கிறாள் ...ஆனால் அதையும் தாண்டி விக்ரமிடம் இப்பொழுது அவள் மனம் சற்று சாய ..அவள் மூளையோ வேண்டாம் அவன் ஆபத்தானவன் என்று உரைத்தது... மனது மூளை இரண்டிற்கும் செவிமடுக்காதவள் அப்படியே உறைந்து நின்றால் ...

அவள் கைகள் அவனை அணைக்கவில்லை... அவனும் எதிர்பார்க்கவில்லை... அவளை அவன் புரிந்து கொண்டான்... அவன் மனது உணர்ந்தது அவளுக்கு தன் காதல் புரிந்தது என்று... இப்பொழுதுதான் குற்ற உணர்ச்சியில் இருந்து அமைதி அடைந்தது அவன் மனம்... வா போகலாம் ரொம்ப குளிர்ல நிக்காத என்று கையோடு அழைத்து வந்தான்...

மற்றவர்கள் குஸ்தி வித்தை போல் செய்து கொண்டிருக்க செந்தில் மணி அருகில் அமர்ந்த விக்ரம் கண்களாலே யுகமதியை அமர சொன்னான்... குஸ்தி போட்டி ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தது... என்ன விக்ரம் அமைதியா உட்கார்ந்துட்ட வந்து சண்டைய போடு என்று ஒருவன் கத்த மற்றவர்களும் ஆம் என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்...

இங்கு என்ன நடக்கிறது என்று மதி பயந்து விழித்தால்... அண்ணி இப்ப பாருங்க அண்ணன் எப்படி சூப்பரா சண்டை போடுதுன்னு என்று மணி விசில் அடித்து சட்டையை கழட்டி போட்டுட்டு போ அண்ண என்று செந்தில் மணி இருவரும் கத்தினர்... யுகமதியை பார்த்து சிரித்தவன் பயப்படாத மாமி என்று தோலை தட்டி விட்டு சட்டையை கழட்டி அவள் மடியில் போட்டு எழுந்து நின்றான் குஸ்தி வீரன் போல்...

எதிரே நின்றவன் மாமிசம் மலை போல் இருந்தான்... இவர் எப்படி அவனை அடிப்பார் என்ற ரிதியில் இவள் நிமிர்ந்து பார்க்க எய்ட் பாக்ஸ் வைத்து கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் அம்சமாக செக்க சிவந்த நிறத்தில் நின்றிருந்தான் விக்ரம்...

கடல் காற்று அவன் மீது மோதும் போது தலையில் அடங்காத கேசங்கள் அங்கும் இங்கும் அலைபாய முகத்தை முற்றிலுமாக மறைத்திருந்த தாடிக்குள் இருந்த அவனது சிறிதாக தெரிந்த சிவந்த இதழ்கள் என அவனை அங்குலம் அங்குலமாக பார்த்துக் கொண்டிருந்தால் மதி ...அவள் பார்வை உணர்ந்து சட்டென அவனை திரும்பிப் பார்த்து ஒற்றை கண்ணை அடித்து விட்டு இரண்டு கைகளாலும் மணலை அள்ளி தேய்தவன் எதிரே வந்தவனே நோக்கி பாய்ந்தான்...

அவனும் இவனுக்கு சலிக்காதவன் போல் பாய்ந்து பிடிக்க ...இருவரும் கட்டிப்பிடித்து மணலில் உருண்டனர் மாறி மாறி அடித்து பிடித்து உருண்டனர்...மதி பயத்தில் அவளையும் அறியாமல் ஐயோ போதும் ணா என்று கத்த அவன் காதில் கேட்கவில்லை.... இறுதியில் விக்ரமே ஜெயித்தான்... அப்போது அங்கு வந்த பாய் என்ன விக்ரம் உடம்புல காயம் என்று நேற்று இரவு மதி அவன் நெஞ்சில் ஏற்படுத்திய காயத்தை பார்த்து கேட்க...

காதல் காயம் பாய் என்று அவனது யுகாவை பார்த்து கண்ணடித்தான்... அனைவரும் அவனைப் பார்த்து சிரிக்க மதி முதல் முறை அவன் வார்த்தையில் முகம் முழுவதும் வெட்கத்தால் சிவந்து தலையை தாழ்த்தினால்.... விதி இவர்களை பார்த்து அவ்வளவு சீக்கிரம் சேரவிடுவேனா என்று சிரித்தது...👿

Continue Reading

You'll Also Like

175K 5.2K 31
இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு
72.2K 3.4K 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
111K 3K 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்...
152K 451 3
Highest Rank in Romance #2 on 07|06|17 & 08|06|17. #1 on 09|06|17 to 12|06|17 & 22|06|17 & 9|07|17 & 10|07|17 காதல் சுகம...