இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

40.1K 995 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 5 💖

980 26 1
By Anupriya_Arun08

மதியை வீட்டிலிருந்து யாஷ் கூட்டிக்கொண்டு முதலில் மாலுக்கு செல்லலாம் என்று நினைத்திருந்தான்... அதையே அவளிடமும் கூற இங்கே வேணாலும் போகலாம் ஆனால் சீக்கிரம் வந்துடனும் என்றால் நிபந்தனையுடன் ...நீ இதுக்கு ஒத்துக் கொண்டதே போதும் என்று அவள் தாடையை பிடித்துக் கொஞ்சி விட்டு பாடிகார்டிடம் ஒரு மாலின் பெயரை சொல்லி அங்கு போக சொன்னான் ....

உங்க மாமா பெரிய ஆள் தான் போல உனக்காக பாடிகார்ட் எல்லாம் அரேஞ்ச் பண்ணி தரார் என்று மதி சொல்ல... பின்ன இருக்காதா அவரோட பதவிக்கு நிறைய எதிரிங்க வராங்க... அவங்க தங்கச்சிக்கும் தங்கச்சி பையனுக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு இப்படி பண்ணி இருப்பாரு என்றான் வெளியே பார்த்துக் கொண்டு...

அவன் கைகளை யுகமதி பிடித்துக் கொண்டு உனக்கு ஏதாவது ஆபத்து வந்து இருக்கா என்றால் கண்ணில் கலவரத்துடன் ....அட என்னை யாரு தாக்க போறாங்க எனக்கு அந்த அளவு எதிரியும் கிடையாது என்றான் மதியிடம்... அந்த நேரத்தில் முன் சீட்டில் இருந்த பாடிகார்ட் ஸ்டேரிங்கை அழுத்தமாக பிடித்து பிரேக் போட மதியும் யாஷும் அந்த திடீர் செய்தால் முன் சீட்டில் முட்டிக்கொண்டனர்...

தலையை தேய்த்தபடியே என்ன ஆச்சு என்றான் யாஷ் அந்த பாடிகாட்டிடம் ...அவன் திரும்பி பார்த்து ஆடு குறுக்க வந்துட்டு என்றான்... அவன் கூறியதைக் கேட்டு யாஷ் சரி என்று மதி இடம் திரும்ப அவளோ அந்த பாடிகார்டை பார்த்து பயந்து அமர்ந்திருந்தால்... ஆம் அங்கு அமர்ந்திருந்தது சாட்சாத் விக்ரமே தான்...

அவனை இங்கு எதிர்பாராத மதி பயத்தில் விழிக்க யாஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு ஒன்னும் ஆகலையே என்று நெத்தியை தேய்த்து விட்டான்...ஒன்னும் இல்ல என்றால் பயந்தபடியே.. அவளை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்தவன் இப்ப வண்டிய எடுங்க என்றான் விக்ரமிடம் ...பின்னால் யுகமதியை பார்த்தபடியே கோபம் பொங்க வண்டியை இயக்கினான் விக்ரம்....

யாஷ் மற்றும் அவளுடைய தந்தையிடம் மட்டும்தான் அவள் இயல்பாக இருப்பாள்.... இவ்வளவு நேரம் இருந்து இயல்பு நிலை மாறி அவனை கண்டதும் ஒரு பதற்றம் மனதில் ஒட்டிக்கொண்டது ...தனக்கு எதுவும் நடந்தாலும் யாஷிக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று அவனுடைய கரத்தை கட்டியமாக பிடித்துக் கொண்டாள்...

விக்ரமின் சிவந்த வழிகள் வேறு அவளை அச்சுறுத்தியது ...ஒரு வழியாக மால் வந்துவிட இருவரும் அங்கு இறங்கினர்... பின்னாலே விக்ரம் சற்று இடைவெளியை விட்டு இருவரையும் தொடர்ந்தான்... முதல்ல நீ போட்டிருக்க தாவணியை மாத்திட்டு எனக்கு புடிச்ச மாதிரி ஒரு டிரஸ் எடுத்து தரேன் அதையே போட்டுக்கணும் என்று கூற ....அவனுடன் இருக்கிற வரைக்கும் அதையே போட்டுக் கொள்ளலாம் என்று அவளும் சரி என்றால்....

நிறைய ஆடைகளை பார்த்தான் யாஷ் எதுவும் அவனுக்கு பிடிக்காமல் போக ஒரு மிடி எடுத்து அவளிடம் கொடுத்தான்... அடர் கருப்பு நிற பாவாடையும் மேலே தங்க நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் கலந்து இருந்தது அதன் மேல் சட்டை .... துணியை மாற்றிக் கொண்டு வர அவளுக்கு அம்சமாக இருந்தது... ரொம்ப அழகா இருக்க என்று அவளுடன் சில பல செல்பிகளை எடுக்க விக்ரம் இருவரையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்...

அவன் முகத்தில் என்ன பாவனை இருக்கிறது என்று மதியால் தெரிந்து கொள்ள முடியவில்லை ...யாஷிடம் இயல்பாக பழக முடியவில்லை... விக்ரமின் குறுகுறு பார்வை அவனை எப்படி தவிர்த்து விட்டு யாஷுடன் பேசுவது என்று குழம்பினாலும் யாஷ் மதியை நன்றாக புரிந்து வைத்திருந்தமையால் அவள் சிறு முகம் வாடினாலும் கண்டுபிடித்துக் கொள்வான் என்று தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள முயற்சித்தால்....

அடுத்ததாக ஒரு ரெஸ்டாரன்ட் இருக்க அங்கு அழைத்து சென்றான்... விக்ரமையும் எதிரில் அமர சொல்ல இப்பொழுது விக்ரம் மற்றும் யாஷ் இருவருக்கும் இடையில் மதி அமரும்படி ஆனது ...யாஷ் அவளுக்கு பிடித்தவையே ஆர்டர் செய்து சிறிது எடுத்து வைக்கவும் சிறிது ஊட்டி விடவும் செய்தான்... அவளும் இது சாப்பிட்டு பாரு தேவ் என்று அவனுக்கு ஊட்டி விட விக்ரமின் கை ஒரு நிமிடம் நின்றது ...

அதன் பிறகு விக்ரமுக்கு உணவு இறங்கவில்லை ....அவனுக்கே இது எல்லாம் புதியதாக தோன்றியது... தான் வந்த வேலையை மட்டும் பார்ப்போம் எதற்காக இந்த பெண்ணிடம் கோபம் கொள்கிறோம் என்று மனம் யோசித்தாலும் எப்பொழுதும் போல இயல்பாக இருக்கவே முயற்சித்தான்... அமைச்சர் சுந்தரபாண்டியன் இடையே ஒரு முறை போன் செய்து யாஷி பற்றி கேட்க அவன் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் ...அவனுக்கு பாதுகாப்பாக நான் தான் கார் ஓட்டி வந்தேன் என்று விக்ரம் சொன்னதும்...

சரி பத்திரமா பார்த்துக்கோ விக்ரம்.. உன்ன நம்பி தான் இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கேன் என்றார் அவரும்... ஆனால் அவள் மதியுடன் வந்ததை விக்ரம் கூறவில்லை... இருவரும் பழகுவது அவருக்கு தெரியுமா என்ற கேள்வி விக்ரம் மனதை குடைந்தாலும் அவர்களுடன் அவர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் கூடவே பாதுகாப்பாக சென்றான்...

ஜானு இங்க பாரு இந்த வளையல் அழகாய் இருக்குல்ல என்று ஒரு கடையில் வளையலை வாங்கி அணிவித்து விட்டான்... மற்றும் ஒரு கடையில் அவளுக்காக இரண்டு சுடிதார் வாங்கி கொடுத்தான்... இப்படியாக அவளுக்காக அவன் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டே வர போதும் யாஷ் என்று அவள் கூறினாலும் அடுத்தடுத்து அவளுக்காக என்ன வாங்கலாம் என்று யோசித்துப்படியே வந்தான் ...

என்ன யோசனை இதுக்கு மேல ஏதாவது வாங்கினால் அவ்வளவுதான் என்று அவனை மிரட்ட ...உனக்கு எவ்வளவு வாங்கி கொடுத்தாலும் என் மனசு அடங்கல... நான் சம்பாதிக்கிறது எல்லாமே உனக்காக மட்டும் தானே என்றான் காரில் அமர்ந்தபடியே... உனக்கு அப்படி என்னதான் வேணும் என்கிட்ட கேளு... எனக்கு உன் ஆசையை வாயால் சொல்லி வாங்கி கொடுக்கணும்...எனக்காக கொஞ்சம் சொல்லு என்று கேட்க ...

எனக்கு என்ன வேணும் என்று யோசித்தவள் கோயிலுக்கு போகலாமா என்றால் ...அடி போடி உன் கிட்ட போய் கேட்டேன் பாரு என்று செல்லமாக கோபித்துக் கொண்டவன் விக்ரமிடம் கோவிலுக்கு செல்ல சொன்னான்... கோயிலில் இறங்கி கடவுளை மனமாற வேண்டியவள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற வேண்டினாள்...

பின் என் யாசுக்கு எந்தவித வருத்தமும் எப்போதும் வரக்கூடாது ...அவனை நல்லா பாத்துக்கோ என்று அவனுக்காக தனியாக ஒரு வேண்டுதல் வைத்துவிட்டு கிளம்பினால் ...அந்த கோவில் அர்ச்சகர் இருவரிடமும் குங்குமம் விபூதி கொடுக்க யாஷ் வாங்காததை பார்த்து ஜானு அர்ச்சகரியிடம் அவனுக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டு தன் கையாலே அவனுக்கு வைத்து விட்டால்... எனக்கு இதெல்லாம் பிடிக்காது உனக்கு தெரியும் இல்ல என்றான்... ஆனால் எனக்காக நீ வச்சிப்பன்னு தெரியும் என்றாள் இவளும்...

அன்று முழுவதும் ஊர்சுற்றி விட்டு வீடு திரும்ப மாலை 7 மணி ஆகிவிட்டது ....வரும் வழியிலே ஒரு கடையில் நிறுத்தி காலை அணிந்து வந்த பாவாடை தாவணி அணிந்தவள் அவன் வாங்கிக் கொடுத்த உடையை பத்திரமாக எடுத்துக் கொண்டால்... வீடு வாசல் வரை வந்தவன் அவள் கையை பிடித்துக் கொண்டு பேசாம நம்ம வீட்டுக்கு வந்துட்டேன் ப்ளீஸ் ....

ஏதோ நரகத்தோட வாசல்ல உன்னை விட்டுட்டு போற மாதிரியே பீல் ஆகுது... உன் கூட நான் இருக்கும்போது உனக்கு எப்படி இருக்குன்னு எனக்கு தெரியல... ஆனா நரகமோ சொர்க்கமோ உன் கூட இருக்கும்போது எனக்கு சந்தோஷம்தான்... என்ன தள்ளி மட்டும் வைக்காதே நாளைக்கும் இதே மாதிரி காலைல வந்து நிப்பேன்... எனக்காக தயாராகி இருக்கனும் என்றவன் அவள் நெற்றியில் இதழ் ஒட்டி சிறிதாக அவளை அணைத்து விட்டு உள்ளே அனுப்பி வைத்தான்...

இவ்வளவு நேரம் மற்றதெல்லாம் மறந்து இயல்பாக இருந்தவன் யாஷ் மதிக்கு முத்தம் கொடுத்ததை பார்த்து கோபத்தில் ஸ்டேரிங்கில் ஒரு குத்து விட்டு தலையை வெளியே திருப்பிக் கொண்டான்... அவனுக்கு மட்டும் இதெல்லாம் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை ...ஒரே காரில் அமர்ந்திருந்ததால் இது எல்லாம் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது ....

மதி வீட்டிற்குள் நுழையும்போது அவளது சித்தி சாவித்திரி பாவம் போல முகத்தை வைத்து ...வா மதி களைப்பா வந்துருப்ப இரு உனக்கு நான் ஏதாவது ஜுஸ் போட்டு கொண்டு வரேன் என்று திரும்பியவர்... காஸ்ட்லியான ஜூஸ் வாங்கி குடித்து இருப்பீங்க நம்ம வீட்ல என்ன இருக்கு என்று கூத்தலாக பேசியவர் இங்கே சாப்பிடுவியா இல்ல வெளியே சாப்பிட்டு வந்துட்டியா என்று கேட்டால்...

ஏன் சித்தி இப்படி பேசுறீங்க நைட்டுக்கான சாப்பாடு நானே சமைக்கிறேன் நீங்க காலையிலிருந்து வேலை செஞ்சிட்டு இருந்துருப்பிங்க கொஞ்சம் உட்காருங்க என்று வேகமாக உள்ளே சென்று உடையை மாற்றிக்கொண்டு இரவு உணவு சமைத்தால்.... காலையிலிருந்து தனது சித்தி எந்த ஒரு பாத்திரத்தையோ இல்லை வீட்டு வேலைகளையோ செய்யாமல் வைத்து இருப்பதை உணர்ந்தவள் அனைத்தையும் செய்து முடித்தல்...

பிரணித் பிரணிதாவை பார்த்து காலையிலிருந்து இந்த அம்மா பக்கத்து வீட்டு எதிர் வீடுன்னு ஒரு வீடு இல்லாம பேசிட்டு ...இப்ப அக்கா வந்ததும் என்ன நடிப்பு நடிச்சது என்று தனது அம்மாவை பற்றி தங்கையிடம் கூற... அவர்களை பற்றி தான் நமக்கு தெரியுமே இருந்தாலும் இந்த அக்கா ரொம்ப பொறுமை... என்கிட்ட ஏதாவது பேசி இருந்தது என்றால் அவ்வளவு தான் என்றால் அவளும்... அவர்களால் பேச மட்டும் தானே முடியும்...

மதி வந்ததும் அவளிடம் நாளைய தேர்வு பற்றி பேசிக் கொண்டிருக்க இருவருக்கும் சற்று நேரம் பாடம் கற்பித்தவள் தூங்குவதற்கு அறைக்கு வர 11 மணி ஆகிவிட்டது ...யாஷ் வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு அழைத்தான் ஆனால் அவள் எடுக்காமல் போக அவள் எப்போது அழைப்பாள் என்று காத்துக் கொண்டிருந்தான் ....

11 மணிக்கு அறைக்கு வந்து போனை பார்த்ததும் பத்து முறை யாஷ் அழைத்திருப்பது தெரிய உடனடியாக அழைத்தால் ...முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவன் எவ்வளவு நேரம் வெயிட் பண்றது என்றால் சிணுங்கிக் கொண்டே... நீ இன்னும் தூங்கலையா தேவ் என்று செல்லமாக கண்டிக்க ...உன் கிட்ட பேசாம எப்படி தூங்குவது என்றான்...

இன்னைக்கு முழுக்க உன் கூட தான் இருந்தேன் நீ ஆசைப்பட்ட மாதிரி ...நல்ல பையனா சீக்கிரம் போய் தூங்கு என்றால் சிரித்துக் கொண்டே... கண்டிப்பா நீயும் சீக்கிரம் தூங்கு நாளைக்கு பார்க்கலாம் என்று போனை வைத்துவிட்டு அவன் தூங்கி விட ...மதியும் இன்று நடந்த இன்பமான விஷயங்களை மனதில் நினைத்துக் கொண்டே தூங்கிப் போனால்....

ஆனால் இவர்களுக்கு இடையில் இருந்த ஒருவன் அவன் வீட்டு மொட்டை மாடியில் பாக்ஸிங் செய்து கொண்டிருந்தான்.... அது கிழிந்து அதில் உள்ள மண் வெளியே கொட்டியும் வெறியடங்காதவன் திரும்பத் திரும்ப அதை குத்திக் கொண்டே இருக்க அதன் முழு மனதும் கீழே கொட்டியதும் கையில் இருந்த க்ளவுசை தூக்கி எறிந்தவன் வெறி தீரும் அளவுக்கு கத்தினான்...

ஏன்.. ஏன் ..ஏன்.. அந்த பொண்ணு பாத்து மட்டும் என் மனசு தடுமாறுவது ஏன்... இது மாதிரி இருந்தா என் தொழிலுக்கே தப்பா‌ போய்டும்... அதுவும் இல்லாம இன்னொருத்தவன் விரும்புற பொண்ணை நான் ஆசைப்படலாமா என்று அவன் மனம் யோசிக்க.. அவ்வளவு நல்லவனா நீ ...நீ ஒரு கொலைகாரன் தானே என்று இன்னொரு மனம் கேள்வி கேட்டது...

தலைக்குள் ஏதேதோ ஓட யாஷ் மதியை அணைத்தும் முத்தம் கொடுத்தது மீண்டும் மீண்டும் கண் முன் வந்து போக தனது அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினான் விக்ரம் ...அவனது மூளையும் மனதும் அவளை சுற்றிக் கொண்டு வர யாஷ் ஜானு ஜானு என்று அவளை கூறியது காதினூல் வந்து கேட்டுக் கொண்டே இருக்க இரண்டு காதையும் பொத்திக்கொண்டு மெத்தைக்கு கீழே அமர்ந்தான்....

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் மூளையில் நேற்று செந்தில் அவளை யுகமதி என்று கூறியது நினைவு வர அவன் வாய் மெதுவாக யுகா என்று அவனையும் மீறி முனுமுனைத்தது....

Continue Reading

You'll Also Like

85.9K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
40.8K 1.7K 22
கணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...
20.9K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
111K 3K 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்...