இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

44.9K 1K 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 3 💖

1.3K 27 0
By Anupriya_Arun08

அமைச்சர் சுந்தரபாண்டியன் அழைத்ததும் வேகமாக அவரது வீட்டிற்கு வந்தவன் அவருக்கும் முன் இருந்த சோபாவில் அமர்ந்தான் ....அமைச்சர் விக்ரமிற்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது ... அவனை அடியாள் போல பார்த்தாலும் நிறைய முறை உயிரை காப்பாற்றியதால் வந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும்... அதனால் சுந்தரபாண்டியன் விக்ரமிடம் தான் எதற்கு அழைத்தோம் என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்....

விக்ரம் உனக்கே தெரியும் எனக்கு ஒரு தங்கச்சி மீனாட்சி இருக்கா அப்படின்னு... என் பொண்ணு மித்ரா கூட அவங்க பையனுக்கு தான் கட்டிக் கொடுக்கிறதா நான் ஆசைப்படுகிறேன்.... என் தங்கச்சி இதுக்கு சரி சொல்லிடுவா ஆனா அவ புருஷன் என்னை பாத்தா ஏதோ ஒரு மாதிரி பார்ப்பாரு என்று மென்று விழுங்கினார்.... தங்கை கணவர் தன்னை ரவுடி அடியாள் போல பார்ப்பதை இன்னொரு அடியாரிடம் சொல்ல அவர் மனம் இடம் கொடுக்கவில்லை...

இப்ப என்னன்னா அந்த பையன் வெளியூரிலிருந்து வந்திருக்கான்... அவனுக்கு கொஞ்சம் பாதுகாப்பு கொடுக்க வேண்டியதா இருக்கு... உனக்கே தெரியும் எனக்கு இப்போ கொலை மிரட்டல் எல்லாம் வந்துகிட்டு இருக்கு அப்படின்னு ....அதனால என் மாப்பிள்ளைக்கு ஒரு வாரம் பாடிகெட்டா நீ போறியா என்று கேட்க... சரி என்ற ஒரு வார்த்தையுடன் அவன் கிளம்பும் அமைச்சரின் மனைவியோ விக்ரம் தம்பி என்ன வந்துட்டு உடனே கிளம்புறீங்க சாப்பிட்டு போகலாம் என்றால்....

வேண்டாம் அண்ணி எனக்கு இப்போ பசியில்லை என்றவன் எங்கே செல்வது என்று இலக்கு தெரியாமல் தனது வீட்டிற்கே வந்தான்.... அது ஒரு பெரிய வீடு நான்கு அறை கீழேயும் மாடியில் மூன்று அறைகளும் கொண்ட பங்களா வீடு தான்.... ஆனால் அங்கு இருப்பது விக்ரம் மட்டுமே.... பாதுகாப்பிற்காக ஆட்கள் யாராவது இருப்பதாக கூறினாலும் அவர்களை அனுப்பி விடுவான்... அவனுக்கு என்று சமைப்பதற்கு ஒரு வயதான பாட்டி மட்டும் அவ்வப்போது வந்து செல்வார்...

தம்பி சாப்பாடு போட்டுட்டீங்களா என்று சாரதா பாட்டி அவன் அருகில் வந்து கேட்க வேணாம் பாட்டி பசிச்சா சாப்பிடுறேன் நீங்க கிளம்புங்க என்றான் ...அடியாளாய் இருப்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை.... சிறுவயதிலிருந்தே தனக்கு நேர்ந்த சம்பவங்களின் அடிப்படையில் தான் இப்படி வந்ததை நினைத்து மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தவன் வெளியே செந்திலின் பேச்சு சத்தத்தில் எட்டிப் பார்த்தான் ...

நானே பாப்பா டிச்சரை பார்த்து விட்டு வரேன் மா என்று தாயிடம் கூறிவிட்டு தொலைபேசியை அணைத்து வைக்க வெளியே விக்ரம் வருவதைப் பார்த்து தங்கச்சி ஸ்கூலுக்கு போயிட்டு வரட்டுமா அண்ணா என்று கேட்க சரி என்று சொல்லி அவன் திரும்பியதும் செந்தில் இந்த ஸ்கூல் டா என்றான் ....

அந்த பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்துல ஒரு பெரிய ஸ்கூல் இருக்குல அது அண்ணா என்றான் ....காலையில் தான் மிரட்ட சென்ற பெண்ணும் அதே ஸ்கூலில் வேலை செய்வதை நினைத்து எனக்கு வீட்டுக்குள்ள இருக்க கடுப்பா வருது அதனால நானும் வரேன் என்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டான்... அண்ணனுக்கு மனசு சரியில்ல போல என்று எதுவும் கேட்காமல் செந்தில் வண்டியை எடுத்தான்....

ஏன் செந்தில் காலையில லேட்டா வந்த என்று கேட்க வீட்டில கொஞ்சம் வேலை அண்ணா அதான் என்றான்.... பிறகு எதுவும் பேசாமல் பள்ளிவாசலில் நிறுத்தினான்... அவன் தங்கை அந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறாள்... பிரணிதா வகுப்பு தான் அவளும்....

யுகமதி மனதில் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக அதை எல்லாம் காதில் வாங்கி மனசு வருத்தப்படும் என்று எதையும் சிந்திக்காமல் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் அமர்ந்திருந்தால்.... என்ன யுகமதி ஸ்கூல்ல உள்ள எல்லாரும் உன்ன பத்தி பேசிட்டு இருக்காங்க ....அதெல்லாம் நீ மனசுல எதுவும் எடுத்துக்காதடி...

அவங்களுக்கு பேச மட்டும் தான் தெரியும் என்று ஆதரவாய் அவர் கையை நித்யா பிடிக்க... வருத்தத்துடன் ஒரு சிரிப்பை உதிர்த்தாள் இது எப்பொழுதும் நிகழ்வது தானே என்பது போல் ... யாஷ் தான வந்தது என்று நித்யா கேட்டதும் ஆமா என்று தலையை அசைத்தாள்... ஈவினிங் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கான்...

சித்தி என்ன சொல்லுவாங்கன்னு பயமா இருக்குடி என்றாள் பயந்து குரலுடன் அவள் சொல்ல ....பேசாம நான் இன்னைக்கு லேட்டா போறேன் முடிஞ்ச அளவு ஒரு ஆறு மணிக்குள்ள நீ வீட்டுக்கு வர பாரு என்று நித்யா தனது தோழிக்காக கூறினாள்... எனக்காக ஏண்டி நீ லேட்டா போற சீக்கிரம் போ என்று சொல்ல ...அடியே உனக்காக இது கூட நான் செய்ய மாட்டேன்னா... பக்கத்து வீடு தானே நான் சீக்கிரம் போனா உன் சித்தியும் கண்டுபிடித்துவிடும் டி மாமி என்று அவள் தாடையை பிடித்து ஆட்ட...

அவள் சிரித்துக்கொண்டே மாமி சொல்லாத என்றால்... அப்புறம் ஐயர் ஆத்து பொண்ணு மாமி சொல்லாம என்ன சொல்றது என்றால் வழக்கமான கிண்டலுடன்.. அவள் முறைத்துக் கொண்டே தனது வகுப்பிற்கு செல்ல நித்தியாவும் தனது வகுப்பிற்கு சென்று விட்டாள்... சாயந்திரம் பள்ளிவிட்டதும் பிரணித் பிரணிதாவிடம் இன்று வர தாமதமாகும் என்று கூற ...

அக்கா நாங்க பாத்துக்கிறோம் நித்யா அக்காவும் எங்க கிட்ட எல்லாமே சொன்னா... அதனால நீ பயப்படாதே யாஷ் மாமா ரொம்ப கோவமா இருக்காரு... அவரும் பாவம் தானே என்றால் பரணிதா... பொய் சொல்றது என்ன புதுசா அந்த அம்மாவை நாங்க பார்த்துக்கிறோம் நீ சந்தோஷமா இரு அக்கா என்றான் பிரணித் அக்கறையாக ....அவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த வீட்டில் அவள் படும் கஷ்டம் அவள் வாங்கும் பேச்சுக்கள் எல்லாம் ...

வெளியே வருவதற்கு முன்பே செந்தில் யுகமதியை பார்த்துவிட்டு மதி என்று அழைத்துக் கொண்டே அருகில் வந்தான்... இங்கு என்ன செந்தில் அண்ணா பண்றீங்க பாப்பாவ பாக்க வந்தீங்களா என்றால் இவளும் ...அவள் வெள்ளந்தியான பேச்சு அவனை எப்போதும் போல் ஈர்க்க ஆமா மதி பாப்பா ஒழுங்காவே படிக்கிறது இல்லன்னு அம்மா வருத்தப்படுது... எங்க குப்பத்தில் இருக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் நீ தான் படிப்பு சொல்லித் தர கொஞ்சம் அவளையும் பாத்துக்க ..என்ன ஏதுன்னு அவகிட்ட நீ பேசு என்று செந்தில் கூறியதும்..

கவலைப்படாதீங்க அண்ணா நான் பார்த்துக்கிறேன் என்றாள் எப்பொழுதும் போல் புன்னகையுடன் ...சரி மதி நான் கிளம்புறேன் உன்ன பாக்க தான் இம்புட்டு தூரம் வந்தேன்... எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன் என்று அவன் திரும்ப... செந்தில் அண்ணா ஒரு நிமிஷம்... உங்க அம்மா பாப்பாவ நினைச்சு கவலைப்பட்டதை விட உங்கள நினைச்சு தான் ரொம்ப எப்போதும் புலம்புவாங்க...

அவாளுக்கு என்ன விருப்பம் இருக்க போகுது நம்ம பெத்த புள்ளை நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போகணும்னு நினைக்கிறது ஒரு சாதாரண தாயோட மனசு தானே ...அவங்க விருப்பத்தை நிறைவேத்தாம இப்படி ரவுடி மாதிரி நீங்க போறது நல்லா இருக்கா... இதை ஏன் நான் சொல்றேன்னு கூட உங்களுக்கு கொஞ்சம் கோவம் வரலாம் ..ஆனால் உங்கள என் அண்ணா போல தான் பார்க்கிறேன் அதனால சொன்னேன் நான் தப்பா எடுத்துக்காதேள் என்றால் மெல்லிய குரலில் ...

அச்சோ உன்னைய நான் தப்பா எடுத்துக்க போறேன் நீயும் எனக்கு தங்கச்சி மாதிரி தானே ...ஆனா இப்போதைக்கு என்னால வேற நல்ல வேலை தேட முடியல மா... கண்டிப்பா சீக்கிரம் வேற வேலை தேடு முயற்சி பண்றேன் என்று அவன் சென்று விட சிறிது நேரம் கழித்து யுகமதி வெளியே வந்தாள்... இவர்கள் உரையாடலை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் செந்தில் வண்டியில் ஏறியதும் உன் தங்கச்சியை பார்க்கல என்று கேட்க ...

இல்லன்னா நான் மதி பாப்பாவ தான் பார்க்க வந்தேன்... என் தங்கச்சி அந்த பிள்ளை கிட்ட தான் டியூஷன் படிக்குது நல்லா சொல்லிக் கொடுக்கும் ...அதனால் தான் அதை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போலாம்னு வந்தேன் என்று வண்டியை திருப்பினான்... மேலும் அந்த புள்ள ரொம்ப நல்ல மனசு உள்ள புள்ளை அண்ணா... ஆனா அவங்க வீட்லதான் அது செருப்பு போல நடத்துவாங்க ..தங்கமான மனசு உள்ள புள்ள என்று விக்ரம் கேட்காதது தெரிந்தும் இவ்வளவு நாள் மனதில் உள்ள குமுறல்களை கொட்டினான்...

ஆனால் விக்ரம் அவன் சொல்லிக் கொண்டு வந்ததை அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டவன் எப்பொழுதும் போல் பதில் எதுவும் பேசாமல் இருந்தான்... நீங்க ஏதோ ஒரு பொண்ணு பார்த்து மிரட்டணும் அப்படின்னு சொன்னதா மணி சொன்னான் யார் அந்த பொண்ணு என்று செந்தில் கேட்க... அதற்கான அவசியம் இனி இல்லை ...நீ வண்டிய நேரா அந்த ரவுடி கஜா வீட்டுக்கு விடு என்று சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்... அவனை பொறுத்தவரை எனது வேலை முதலில் முடிய வேண்டும் என்று நினைப்பவன் ..மற்ற எதுவுமே இரண்டாம் பட்சம் தான்...

மதி வெளியே வந்ததும் அவளிடம் வண்டியை கொண்டு நிறுத்தினான் தேவ்... போகலாமா என்று வண்டியில் அமர்ந்தபடி கேட்க... கார் எங்க எதுக்காக இந்த வண்டி என்றால் மதி... எனக்கு அதுல போனா நல்ல பீலே வரல ...வா நம்ம இதுல போகலாம் என்றான் சிரித்தபடியே... உன்னை திருத்தவே முடியாது தேவ் என்று அவன் பின்னால் அமர்ந்து கொண்டாள்...

சரி எங்க போறனது கொஞ்சம் சொல்லேன் என்று அவள் கேட்க... அதெல்லாம் சர்ப்ரைஸ் என்று வண்டியை வேகமாக ஓட்டினான்... கொஞ்சம் பொறுமையா தான் போயேன் என்று அவன் தோளை பற்றிக்கொள்ள... அவளது இன்னொரு கையை பிடித்து முன்னோக்கி எடுத்தவன் லைஃப்ல கொஞ்ச நேரத்தை கூட வேஸ்ட் பண்ண விரும்பல ...உன் கூட இருக்கிற நிமிஷத்தை சந்தோஷமா கழிக்கணும்... நீ வேற எதுவும் யோசிக்காமல் சந்தோஷமா இந்த நிமிசத்தை அனுபவி என்றான் அவள் மனதை படித்தது போல ...

சரிங்க தலைவரே என்று அவள் சிரித்துக் கொண்டே அவன் வண்டி ஓட்டும் அழகை எப்பொழுதும் போல் ரசிக்கத் தொடங்கினால் ...இவர்கள் இருவரும் ஜோடியாக செல்வதை விக்ரம் பார்வை வெறித்தது .. ஆம் அவனும் அந்த ரோட்டில் தான் செந்திலுடன் பயணித்து கொண்டிருந்தான் ....செந்தில் எதேர்ச்சியாக திரும்பி மதியை பார்த்து விட்டு அந்த தம்பி ரொம்ப நல்ல தம்பி...

எங்க தெருவுல கூட சொல்லுவாங்க இந்த தம்பி மதியை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ படும் கஷ்டம் எல்லாம் தீர்ந்து ராணி மாதிரி வச்சுப்பான்னு... அதுக மனசுல என்ன இருக்குனு தான் இப்போ வரைக்கும் எனக்கு தெரியல... ஆனா ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு இல்ல அண்ணா என்றான் செந்தில்... விக்ரம் அந்த பக்கம் திரும்பி இருந்ததால் அவன் என்ன நினைக்கிறான் என்று செந்திலால் யோகிக்க முடியவில்லை...

எப்பொழுதும் போல் அவன் பேசிக்கொண்டு வர விக்ரம் அந்த பொண்ணுக்கு ஆண்டவன் என்ன எழுதி இருக்கானோ அது படி கண்டிப்பா நடக்கும் செந்தில் என்றான் விட்டேதியாக... ஆமாண்ணே கண்டிப்பா நல்லதே நடக்கும் என்று செந்தில் கூறியவன் அந்த அடியார் கெஜா வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் .....

தேவ் வீட்டின் முன் வண்டியை நிறுத்திவிட்டு அவளை உள்ளே அழைத்தான் ...அவள் கண்கள் கண்ணீருடன் அவனுக்கு முன் உள்ளே ஓடினாள் ....உள்ளே ஜீவானந்தம் மீனாட்சி உடன் பேசிக் கொண்டிருக்க யுகமதியை பார்த்தவுடன் அடடே என்ன இன்னைக்கு அதிசயம்... என் மருமகள் வீட்டுக்கு வந்து இருக்கா என்று மீனாட்சி அவளை அணைத்துக் கொள்ள.... பின்னால் வரும் மகனை பார்த்தவர் இவன் இருக்கிற வரைக்கும் கண்டிப்பா அடிக்கடி இந்த வீட்டு பக்கம் மதியை பார்க்கலாம் என்றார் கேலியாக... ஆனால் அதுவும் உண்மைதான் என்று அனைவரும் அறிவர்..

விடுங்க விடுங்க என் ஜானுவை... இங்கே வா ஜானுமா என்று அவர்கள் அமர்ந்திருந்த எதிர் சோபாவில் அவளுடன் அமர வந்தவன் தனது சட்டை பையில் இருந்து ஒரு பிளாட்டினம் செயினை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட்டான்... இதுக்காக இதெல்லாம் என்று மதி கீழே குனிந்து பார்க்க அதில் "Y" என்று எழுத்து பதித்த டாலர் இருந்தது ...

நான் ஊருக்கு போனதுக்கு அப்புறமும் உனக்கு ஏதாவது மனசு வருத்தமா இருந்தா உன் கூட நான் இருக்கிறேன் அப்படிங்கிற நம்பிக்கை உனக்கு வரனுங்கிறதுக்காக என்னோட சின்ன பரிசு என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் ....அவளுக்கு உண்மையில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது....

பாசத்திற்காகவும் அன்பிற்காகவும் அவள் ஏங்கி தவிக்கிறாள் என்று அவனுக்கு தான் தெரியுமே.. அவளைத் தோலோடு அணைத்துக் கொண்டவன் ஜானு என் முன்னாடி நீ எதுக்காகவும் கவலைப்படாதே என்னால் அதை தாங்க முடியாது என்றான்... சரிடா நீ உன் பாசமலைய அப்புறம் பொழிஞ்சுக்கோ புள்ள நல்லா இளைத்து போய் வந்திருக்கு நான் போய் சாப்பாடு கொடுக்கிறேன் என்று யுகமதியை அழைக்க... நானும் வரேன் அம்மா என்று அவளுடனே அமர்ந்து சாப்பிட்டான் ...

நீண்ட நாள் கழித்து நிறை மனதுடன் உணவு உண்டு திருப்தி அவள் முகத்தில் தெரிய ஜீவானந்தம் மகனை நினைத்து பெருமை கொண்டார்.... இங்கேயே யுகமதியை அழைத்து வர அவருக்கும் விருப்பம் தான் கண்டிப்பாக அவள் விருப்பப்பட மாட்டாள் என்ற காரணத்திற்காகவே விட்டு வைத்திருக்கிறார் ...வேந்தனிடம் அவப்பொழுது மதியை பற்றி கேட்டு தெரிந்து கொள்வதிலும் அவளுக்காக அவளுக்கே தெரியாமல் நிறைய வாங்கி வைத்திருப்பதும் மீனாட்சியை தவிர வேறு யாருக்கும் தெரியாது...

Continue Reading

You'll Also Like

152K 5.2K 65
Ithu thaan ennoda first story... Love & family
176K 6.7K 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்ன...
153K 6.6K 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியா...
39.3K 2K 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வர...