இராவணனின் சீதை 💖

By Anupriya_Arun08

45.1K 1K 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... More

இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 37 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 1 💖

3.8K 32 3
By Anupriya_Arun08

அந்த அக்ரஹாரத்தின் நடுவில் இருந்த வீட்டின் முழுக்க உறவினர்கள் கூட்டமாக நிறைந்து இருந்தது... வீட்டின் நடுவில் ஒரு பெண் சடலத்தை வைத்து புதிதாக வாங்கிய சேலையை போற்றி தலையின் மேல் விளக்கேற்றி வைத்து சுற்றி பெண்கள் கூட்டம் அழுது கொண்டு இருந்தார்கள்....

அவள் கணவன் கண்ணீர் வற்றி கை குழந்தையுடன் அவளை பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்... இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை குழந்தையின் அழு குரல் வரவேற்றது...

அவரது அன்னையிடம் என்ன ஆச்சு அம்மா பாப்பா என் அழுகுறா என்று கேட்க பிஞ்சு குழந்தை எதுக்கு டா அழுகும் ... தாய் பாலுக்கு ஏங்கி அழுது என்ன செய்ய வேந்தா என்று பர்வதம் சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டு கேட்டார்....

வைதேகி இறப்பு இருவரையும் பெரிதும் வாட்டியது... மருமகள் என்ன சொன்னாலும் முகம் சுளிக்காமல் பொறுமையாக செய்து மகள் இல்லாத குறையை அல்லவா ஈடு செய்தால்...

குழந்தையை நன்றாக தான் இருவரும் வளர்த்தனர்... வேந்தன் ஒரு அரசு பணியில் உதவி ஆய்வாளராக உள்ளார்... மகளுக்கு யுகமதி என்று பெயர்‌ வைத்து அன்புடன் வளர்த்தார்.. ஆனால் அவளை வேந்தன் மனைவி விருப்ப பட்ட பெயரான ஜானகி அல்லது ஜானு என்று தான் அழைப்பார்... அவளுக்கு இரண்டு வயதில் பர்வதம் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கை ஆனார்...

உறவினர்கள் அனைவரும் வேந்தனுக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சொல்ல முதலில் மறுத்தவர் அவர் தாயின் உடல் நிலையை கவனிக்கவும் யுகமதியை பார்த்து கொள்ள அவருக்கு ஒரு ஆள் தேவை பட்டது ... அதனால் அவர் சரி என்று சொல்லி விட அடுத்த மாதத்திலே சாவித்திரி என்ற உறவு பெண் ஒருவளை மணமுடித்து வைத்தார்கள்...

முதலில் பாசமாக இருப்பது போல இருந்தவள் நாளுக்கு நாள் சிடு சிடு என்று விழுந்தார்... அவளுக்கு யுகமதியை சற்றும் பிடிக்க வில்லை ... கணவரிடம் பேச சென்றாள் அங்கு பசை போல அவரிடம் ஓட்டி கொண்டு இருக்கும் மதியை பார்க்க கோபமாக வரும் அவளுக்கு...

சிறிது நாட்களில் பர்வதம் இறந்து விட்டார்... அதன் பின்னர் ஆனது தான் கொடுமை... வேந்தன் அலுவலகம் சென்று விட்ட பின் அந்த வீட்டின் வேலைக்காரி யுகமதி தான்... நான்கு வயது யுகமதி எதுவும் தெரியாமல் தன் சித்தியின் சொல்லே வேதவாக்காக பின்பற்றுவாள்...

வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை அவள் திட்டி செய்யச் சொல்லி ஏவுவாள்... அவளும் அதையே அப்படியே பின்பற்ற அவளது தந்தை ஏன் இப்படி செய்ய சொல்கிற சின்ன குழந்தை தானே என்று கேட்டால் ...சின்னக் குழந்தையானாலும் பொம்பள புள்ளைங்க இப்போதிலிருந்து சொல்லிக்கொடுத்து வளர்த்தால் தன் சரி பட்டு வரும் என்று அவரது வாயை அடித்து விடுவாள் சாவித்திரி...

மதிக்கு ஆறு வயதாக இருக்கும்போது சாவித்திரி கர்ப்பம் தரித்தார்... இப்பொழுது அவளுக்கு இன்னும் வசதியாக போனது கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி பாத்திரம் விளக்குவது... தண்ணீர் பிடிப்பது என்று அவளை அதிக வேலை வாங்கினால்... ஏன் சில நேரம் கால்களை கூட பிடித்து விடுவாள் ...வேந்தன் இருக்கும்போது அவளே வேலை செய்வது போல காட்டிக் கொள்பவள் அவர் அலுவலகம் சென்றவுடன் மதியை வேலை வாங்குவாள்... ஏதாவது தவறு செய்துவிட்டால் அடிப்பது சூடு வைப்பது கூட உண்டு.... அதையும் தனது தந்தையிடமிருந்து மதி மறைத்து விடுவாள்....

சாவித்திரிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது ...ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை ...அவர்களுக்கு ப்ரணித் பிரணிதா பெயரிட்டனர்... அவர்கள் இருவருமே தனது அக்காவின் மீது மிகுந்த பாசம் உடையவர்கள்...தாய் அவளை கண்டித்தாலும் இருவருமே தனது அக்காவின் மேல் மிகுந்த பாசத்துடன் இருந்தனர்... அப்படியே வேந்தனின் குணம் இருவருக்கும்... சாவித்திரி கூட சில பொழுது தான் பெற்ற பிள்ளைகள் எப்படி அவள் மீது பாசம் வைத்து வருகிறது என்று நினைத்துக் கொள்வார் ...இருந்தாலும் மதியை சித்திரவதை செய்வது மட்டும் நிறுத்தவில்லை...

வருடங்கள் ஓடியது சிறு வயது மதி இப்பொழுது 22 வயது இளம் பெண்ணாக மாறிவிட்டாள் ...முன்பெல்லாம் வேந்தன் இல்லாதபோது திட்டிய சாவித்திரி நாட்கள் செல்ல செல்ல அவர் முன்னேவே மதியை அடிப்பது திட்டுவது வேலை வாங்குவது என்று செய்தால்... வேந்தன் கண்டித்தாலும் அவ அம்மா இருந்து செய்ய சொன்னா செய்வாள் அல்லவா என்று அவர் வாயை அடைத்து விடுவார் ...

மதி ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலைக்கு சென்றால்... மற்றும் அக்கம்பக்கத்து சிறுவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தால் ...அதில் வரும் காசைக் கூட அப்படியே தனது சித்தி சாவித்திரி இடம் ஒப்படைத்து விடுவாள்... அவளுக்கு முக்கியமாக ஏதாவது வேண்டுமென்றால் மட்டுமே அவரிடம் இருந்து காரணத்தைக் கூறி விட்டு வாங்கிக் கொள்வாள்... அதற்கும் 1008 புலம்பல் புலம்புவாள் ...யார பாக்க போறா இப்படி மினுக்கிக் கொண்டு போறா என்று கோவமாகப் பேசுவார்...

மதி அமைதியாக இருந்தது கொள்வாள்... ஆனால் அவளது தங்கை பிரணிதா வயசான காலத்துல நீயே மாசத்துக்கு ஒரு ட்ரெஸ் வாங்குற அக்கா என்ன அப்படி பண்ணினா ... நீ வாய மூடிகிட்டு காசு குடுமா இல்ல அப்பாகிட்ட சொல்லி வாங்கி தர வேண்டியதாக இருக்கும் என்று மிரட்டுவாள்... பிரணித் பிரணிதா இருவரும் இப்பொழுது பதினோராம் வகுப்பில் பயின்று வருகின்றனர் அதே பள்ளியில்தான் வேலை செய்கிறாள் மதி..

அன்று காலை 6 மணி எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்ட மதி தனது அன்றாட பணிகளை செய்ய கிளம்பினாள்... அதுதான் பாத்திரம் விளக்குவது சமைப்பது என அனைத்தையும் செய்து முடித்துவிட்டு விளக்கேற்றி சாமி கும்பிட்டு... தனது அறைக்கு சென்று ஒரு சாதாரண காட்டன் புடவையும் கையில் ஒரு சின்ன கருப்பு வாட்ச் இன்னொரு கையில் இரண்டு கண்ணாடி வளையல்... அவள் தாய் அவளுக்காக விட்டு போன சின்ன ஜிமிக்கி காதில்... வகிடெடுத்து சிவிய தலை அவள் இடையை தாண்டியிருக்கும்... நெற்றியில் ஒரு சின்ன கருப்பு பொட்டு அதுதான் மதி ...

வெளியே கிளம்பி வந்தவள் தனது தம்பி தங்கைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தந்தையை அழைத்தாள்... இதோ வரேன் ஜானகி என்று சொல்லியவர் அவள் எடுத்து வைத்த சாப்பாட்டை உண்டு விட்டு கிளம்பிவிட்டார்... பிரணித் பிரணிதா உடன் மதியும் பள்ளிக்கு சென்று விட்டாள்...அங்கு சென்று விட்டால் அவளது மனம் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்... க்ரஸில் முதுகலை பயில்கிறாள் அதுவும் அவ்வப்போது அவள் சித்தி குத்தி காட்டுவாள் எதுக்கு இவ்வளவு படிக்க வைக்கனும் அதுக்கு எவனுக்காவது கட்டி கொடுக்கலாமே என்று...

ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை மதி... அவளது வேலை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும் ..அந்த பள்ளியில் அவளை பிடிக்காத மாணவர்களே கிடையாது வகுப்பில் அனைத்திற்க்கும் சிறு சிறு உதாரணம் கூறி அவர்களை சிரிக்க வைத்து பாடம் நடத்துவாள்.. அவளுக்கு அப்படி கற்று தருவதில் அலாதி பிரியம்... அக்காவை போல பாசமாக இருக்கும் அவளை அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்...

அன்றைய வகுப்பு முடிந்து மாலையில் கிளம்ப தனது தம்பி தங்கைகளுக்காக பேருந்தில் நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தாள்... பள்ளிக்கு சில அடி தூரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவள் அருகில் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க ஒரு ஆள் கையில் வேட்டுபட்டு உயிரை காப்பாற்றி கொள்ள இரத்தத்துடன் ஓடிவந்து சரியாக யுகமதின் காலுக்கு அருகில் விழுந்து விட்டார்...

கீழே விழுந்தவரை கவனிக்காமல் அவரை துரத்தி வந்தவனை பார்த்தாள் ...முகம் முழுக்க தாடி செக்கசிவந்த இருந்தான்... கண்ணில் கொலைவெறி ...கீழே விழுந்தவனை தூக்கி அவன் கையில் வைத்த பளபளக்கும் அருவாளை வைத்து வெட்டி விட்டான்... அவ்வளவுதான் அவரது உயிர் பிரிந்துவிட்டது...

இதைப்பார்த்த யுகமதி அம்மா என்று அலற அவளது கையில் வைத்திருந்த நோட்டும் பேப்பர் கட்டுகளும் கீழே விழுந்தன... காதைப் பொத்திக் கொண்டு கண்ணை மூடி அங்கேயே கால்களை மடக்கி அமர்ந்து விட்டால் ...அவளை திரும்பிப் பார்த்தவன் கையில் உள்ள அருவாளை அவளை நோக்கி எச்சரிப்பதை போல காட்டி இரண்டு முறை ஆடியவன் கீழே இறந்து கிடைத்தவரை காட்டிவிட்டு சென்றான் .... அவளது முகத்தை மனதில் நன்றாக பதியவைத்து கொண்டு ஒரு ஜீப்பில் ஏறி சென்று விட்டான்...

பிரமை பிடித்தவள் போல் அமர சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் கூடிவிட்டது... பள்ளி விடும் நேரம் என்பதால் நிறைய பெற்றோர்களும் அந்த வழியில் செல்பவர்கள் அனைவரும் கூடிவிட்டனர்...

அந்த கூட்டத்தை தள்ளிய படி வந்த ஒருவன் பயத்தில் உடல் நடுங்க அமர்ந்துள்ள மதியின் தோளில் கை வைத்தான்... அவள் அழுதுகொண்டே நிமிர்ந்து பார்த்தாள்... அது அவன் தான் ... அவளின் உயிர்... அவளின் நம்பிக்கை ... அவளின் பலம் மற்றும் பலவினம்..

உதடுகள் துடிக்க அவனை கட்டி கொண்டு அழுதாள்... சற்று நேரத்திற்கெல்லாம் பிரணிதா பிரணித் வந்து விட அவர்களிடம் நடந்ததை கூறியவன் அவளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் அவர்களை கவனமாக செல்லவும் கூறினான் தேவ் என்கிற யாஷ் தேவ் ...

அருகில் இருந்த காபி ஷாப் அழைத்து சென்றவன் அவள் சற்று பயம் தெளிந்து அமைதியானதும் காஃபியை நீட்டினான்... குடித்து முடித்ததும் அவளிடம் ஜானு நீ இப்படி பயந்தால் உன்னை தனியா எப்படி விட்டுட்டு போக முடியும்... கண்டிப்பா நான் போக மாட்டேன் என்று அழுத்தமாக சொன்னான்..

ஐய்யோ யாஷ் என் இப்படி சின்ன பையன் போல பண்ணுற ... நேரில் கொலை செய்யறது பார்த்து பயம் வராதா சொல்லு... என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்...அப்பா தம்பி தங்கை சித்தி இருக்காங்க... மாமா கஷ்ட பட்டு உன்னை கண்வின்ஸ் பண்ணி ஊருக்கு அனுப்பி வைக்கிறார்...அங்க நீ ஆரம்பித்த கம்பெனி பத்தி யோசிக்காமல் பேசாத உன்னோட ஃப்ரெண்ட்ஸ் உழைப்பும் இருக்கு...நீ இப்படி பண்ணினா எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கும் என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டால்...

அவளின் சோகமாக முகத்தை பார்த்தவுடன் அவனுக்கு கவலை அளிக்க அவள் தாடையை பிடித்து தன் பக்கமாக திரும்பியவன் ... எனக்கு போக இஷ்டம் இல்லை ... உனக்காக போறேன் கண்டிப்பா சில மாசத்துல உன்கிட்ட வந்துடுறேன் ... ஏற்கனவே இரண்டு வருசமா தனியா உன்னை விட்டது வலிச்சது இப்போ நீ படுற கஷ்டத்தை பார்க்க சுத்தமான முடியல...நீ நம்ம வீட்டுக்கு வா அம்மா அப்பா உன்னை பார்த்துப்பாங்க ... அவங்களும் உன்னை எத்தனை வருசமா கூப்பிடுறாங்க உன்னோட பிடிவாதத்தை விடு ஜானு பிளிஸ் என்று கொஞ்ச ...

அவளோ இடது வலமாக தலையை ஆட்டியவள் என்னோட அம்மா இருந்து கண்டிச்சா ஏத்துப்பேன் அதுபோல சித்தி சொல்லுறதும் கேட்டுப்பேன் என்று சொல்ல ... உன்னை திருத்த முடியாது போடி என்று சொன்னவன் அவளை அக்ரஹாரத்தின் தெரு முனையில் விட்டு திரும்பி விட்டான்...

இங்கு அந்த கொலை செய்த ஆள் சென்ற ஜீப் அமைச்சர் சுந்தரபாண்டியன் வீட்டிற்கு நுழைந்தது... ஜீப் சத்தத்தை கேட்ட சுந்தரபாண்டியன் வீட்டிற்குள் இருந்து வேகமாக வெளியே வந்தார் ...சந்தோஷமாக எதிரே வந்த அவனை கட்டித்தழுவினார்... ரொம்ப பெருமையா இருக்கு விக்ரம் என் கூட்டத்தில் ஒரு கருப்பு ஆடு இருந்திருக்கு பாரு.,.

என்னோட நம்பிக்கையான விசுவாசி நீ ஒருத்தன்தான் என்று அவர் சொல்ல... அவனும் கம்பீரம் மாறாமல் புன்னகைத்தான் உங்களுக்காக என்ன வேணா பண்ணுவேன் அண்ணா கவலைப்படாதீங்க என்றவன் அங்கு தோட்டத்தில் போடப்பட்ட நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்... சுற்றிலும் அவர்களது அடியாட்கள்... அனைவர் முகத்திலும் சந்தோஷம் அவர்கள் பகையாக நினைத்த ஆள் இறந்து விட்டார்... அதனால் வந்த சந்தோஷம் ...

இந்த சந்தோஷத்தை நாம கொண்டாடனும் இல்லையா விக்ரம் என்ற அமைச்சர் தனது தொலைபேசியை எடுத்து யாருக்கோ தொடர்புகொண்டார் ....எதிர்முனையில் அழைப்பு எடுத்ததும் வணக்கம் டிஜிபி ஐயா என் ஆள் ஒருத்தனை நடுரோட்டில கொலை செஞ்சிருக்காங்க... ஆளுங்கட்சி ஆளு மேல கை வைக்க யாருக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு கொலை செஞ்சது யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிங்க என்று கூறியவர் போனை வைத்துவிட்டார்...

எதிரேயிருந்த விக்ரமை பார்த்து சிரித்து விட்டு உள்ளே சென்றார்... ஆனால் விக்ரமிற்க்கு நினைவு தான் வெட்டியபோது பயந்த அந்தப் பெண்ணை சுற்றியே இருந்தது ...யார் அவள்? அவளை பார்க்கும் போது தன் மனம் சஞ்சல பட்டது ஏன் ? இதுவரை இப்படி நிகழ்ந்தது இல்லையே என்று யோசித்தான்... அருவாளை கண்டதும் அவள் மீன் போன்ற கண்கள் பதறி பயந்த அந்த கண்கள் தன்னை ஈர்ப்பது போல உணர்ந்தான்....

கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் அல்லவா!! இருந்தாலும் முகத்தை பாறையைப் போல் இருக்கமாக வைத்து அந்த தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்... தனது அடியால்களில் மணியை அழித்தவன் வீட்டிற்கு போகலாம் என்று கூற உடன் இருக்கும் மணி செந்தில் ரவி மூவருடன் தனது வீட்டிற்கு கிளம்பிவிட்டான்...

இங்கு டிஜிபிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது ...காரணம் அவருக்கு தெரியும் அந்த அமைச்சர் தான் தனது அடியாட்களை வைத்து அவர் கட்சியில் இருக்கும் ஒரு தொண்டனை கொலை செய்தது என்று... கட்சிக்குள் நடக்கும் சிறு சண்டை சச்சரவுகள் வெளியே அவர் காதுக்கு கசிந்து கொண்டுதான் இருந்தது... ஆனால் இந்த மரணம் அவர் எதிர்பார்க்காதது .... கொலை செய்தவனே போன் செய்து ஆதாரத்தை கண்டுபிடிக்க சொல்லுமளவுக்கு வந்துவிட்டதா என்ற‌ கோபத்தில் மேஜையை ஒரு தட்டு தட்டி விட்டு ...இன்ஸ்பெக்டரை அழைத்து அந்த கேசை விசாரிக்குமாறு சொல்லியவர் ஆத்திரத்தில் அமர்ந்திருந்தார் டிஜிபி சதாசிவம்...

-------------------------------------------------------------
இந்த கதை வேறு தளத்தில் போட்டிக்கு எழுதியது ... உங்களுக்கும் பிடிக்கும் படிச்சிட்டு கமெண்ட் லைக்ஸ் கொடுக்கவும் 😊☺️☺️.... தினமும் பதிவி பண்ண முயற்சி பண்றேன் 💖

Continue Reading

You'll Also Like

176K 6.7K 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்ன...
205K 8.6K 81
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ...
333K 9.6K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...
96.8K 3.5K 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில்...