தீயாய் சுடும் என் நிலவு 37

1.2K 58 10
                                    

வானம் ஏனோ போர்வை போர்த்தி கொண்டு இருளெனும் பாயை விரித்திட, தன் கைகடிகாரத்தை பார்த்த தீரன், "அடடா! மணி பத்தாகிடுச்சே.. பாப்பா சாப்பிட்டுருப்பாளா?" என்று யோசித்து கொண்டே அமுதனுக்கு போன் செய்தான்.

"அமுதன்! சாரி மீட்டிங் முடிய லேட் ஆகிடுச்சு. பாப்பா என்ன பண்றா? என்னை கேட்டு அழுதாளா? சாப்பிட்டாளா?" என்று படப்படப்பாய் கேள்விகளை அடுக்கி கொண்டே போக, எதிர்முனையில் கலகலவென்று சிரித்தான் அமுதன்.

"பொறுமை பொறுமை தீரா. ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறிங்க? உங்க பொண்ணு என் டார்லிங். அதை மறந்துறாதிங்க. உங்களை விட அவளை எப்படி ஹாண்டல் பண்றதுன்னு எனக்கு நல்லா தெரியும்." என்று புன்னகைத்தான்.

"அதுவும் கரெக்ட் தான்." தீரனும் சிரிக்க.

"திஷா இன்னைக்கு முழுக்க ரொம்ப நல்லா விளையாடினா, சாப்பிட்டா இப்போ தான் தூங்க வச்சேன். " என்றான்.

"சாரி அமுதா. உங்களுக்கு வேற எங்களால சிரமம்" என்றான் தீரன்.

"அட நீங்க வேற.. என் டார்லிங்கை பார்த்துகிறது எனக்கு சிரமமா? அவ அவங்க அம்மாகூட இருந்ததைவிட என்கூட தான் அதிகமா இருந்திருக்கா. " என்றான் அமுதன்.

"நான் இனி தான் கிளம்பனும். இன்னும் அரைமணி நேரம் ஆகும். " என்றான் தீரன்.

"சரி தீரா. நீங்க சாப்பிட்டிங்களா?" என்றான் சந்தேகமாய்.

"இல்ல இனி தான்" என்றான்.

"சரி. பார்த்து பத்திரம் வாங்க" என்று வைத்தான் அமுதன்.

கடையை பூட்டி கொண்டு இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருக்க, ஏற்கனவே இருளில் இருந்த வானம் பொத்துக்கொண்டு மழையை பொழிந்தது.

"அடடா! இன்னைக்குன்னு பார்த்து காரை நிறுத்திட்டு பைக்ல வந்தேன். இன்னைக்கு பார்த்து இந்த மழை பெய்யுதே? " என்று புலம்பியபடி மிருதியின் ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான்.

வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தவள் தீரன் தொப்பலாய் நனைந்து வருவதை பார்த்து மனம் பதற டவலுடன் ஓடி வந்தாள்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now