தீயாய் சுடும் என் நிலவு 9

2.9K 126 10
                                    

"அப்போ உங்க தங்கச்சியோட கண்ணீருக்காக என்னை பலியாக்கிட்டிங்க?" என்றாள் இது வரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட.

"என்னடா மா இப்படி பேசுற? தங்கச்சி பையன் நல்லா படிச்சிருக்கான் நல்ல திறமை இருக்கு, சொந்ததுல கொடுத்தா உன்னை நல்லா பார்த்துப்பான். நீயும் என் பக்கத்துலையே இருப்பன்னு தானம்மா சரின்னு சொன்னேன். ஏன்மா உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். வாடா" என்றார் கலக்கமாய்.

"அப்பா உங்க தங்கச்சிக்காக என்னை நீங்க கல்யாணம் பண்ணி கொடுத்திங்க. ஆனா, அவருக்கு நான் அவர் காதல்ல குறுக்கவந்த விரோதி" என்றாள்.

என்னதான் தீரன் தன்னை விரும்பாவிட்டாலும் தான் அவனை விரும்பியது உண்மைதான். தங்களுக்குள் நடந்தது தங்களுக்குள்ளாகவே இருக்கட்டும் என்று எண்ணியவள் எதையுமே விளக்கமாக கூறவில்லை.

"என்னம்மா சொல்ற?" என்றார் அவளின் அப்பா அதிர்ச்சியாய்.

"அப்பா உங்க எல்லோராலையும் என் வாழ்க்கை  பாழாகிடுச்சு. அதோட..." என்று தேம்பினாள் மிருதி.

"அம்மாடி ஏன்மா அழற? அப்பாகிட்ட வந்துடறா. நான் பார்த்துக்குறேன் உன்னை. நீ எங்கயும் போகவேணாம். அப்பா நானிருக்கேன்டா" என்றார் அவரும் அழுதபடி.

"அதோட என் குழந்தையும் போயிடுச்சு... எனக்கு நீங்க யாருமே வேணாம். என்னை தேடாதிங்க. எனக்கு மனசு சரியானப்புறம் கூப்பிடறேன். அதுவரைக்கும் எனக்கு போன் பண்ணாதீங்க" என்று அழுதுகொண்டே வைத்துவிட்டாள்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் ஒரு நாளும் எந்த விளக்கமும் கேட்டகவில்லை அமுதன்.

அன்று மாலை ஸ்ரீஷாவின் வீட்டில் இருந்தான் அமுதன்.

"ஸ்ரீ ரொம்ப தாங்க்ஸ் டா. எனக்காக மிருதியை உன் கூட தங்க வைக்க சம்மதிச்சு அவளையும் நல்லா பார்த்துகிற." என்றான் அமுதன்.

"நான் தான் உனக்கு தாங்க்ஸ் சொல்லணும் அமுதன். இங்க தனியா இருக்க எவ்ளோ கொடுமையா இருந்தது. அக்கா வந்ததுக்கப்புறம் எனக்கு ரொம்ப அதரவா இருக்காங்க தெரியுமா? உண்மையாவே அவங்க ரொம்ப நல்ல கேரக்டர் பா. அதுவும் இல்லாம நீ அவங்களுக்கு இவ்ளோ இம்பார்ட்னஸ் கொடுக்குறன்னா அவங்க எவ்ளோ முக்கியமானவங்கன்னு தெரியுது பா." என்றாள் ஸ்ரீஷா.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now