தீயாய் சுடும் என் நிலவு 21

3.1K 140 19
                                    

மிகவும் அதிர்ச்சியாக அமுதனை பார்த்த தீரன்.

"என்ன சொல்றிங்க நீங்க? நான் அடிச்சேனா? அதுவும் மிருதிய? சான்ஸே இல்ல.." என்றான் மிகவும் சாந்தமான அடக்கிய கோபத்தோடு.

"அப்படியா?" என்று அவனை நம்பாத தோரணையில் நெஞ்சிற்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு நின்றான் அமுதன்.

"ஹ்ம்.. அப்படின்னா தி எதுக்கு உங்களை விட்டு போனா தெரியுமா?" என்றான்.

'இல்லை' என்று தீரன் தளர்வாக தலையாட்ட.

"இதுவும் ஒரு முக்கிய காரணம்." என்றான் அமுதன்.

"இல்ல. அப்படி நடக்க வாய்ப்பே இல்ல. மனசால கூட நாம பேசுற வார்த்தையால யாரும் பாதிக்க கூடாதுன்னு நினைக்கிறவன். அதனால தான் என் சோகத்தை கூட வெளிய காட்டாம மிருதிய விட்டு விலகி போனேன். பொண்ணுங்க நம்மளைவிட உடலவலிமை குறைஞ்சவங்களா இருந்தாலும் மனசால நம்மளைவிட நூறு மடங்கு தைரியம் நிறைஞ்சவங்கன்னு நம்புறவன் நான். ஆண்களை படைச்சதே பெண்களை பாதுகாக்க தான்னு ஆழமா நம்புறேன். அபப்டி இருக்கும்போது நான் என் மிருதிய காயப்படுத்துவேணா?" என்றான் தீரன் என்ன சொல்வதென்று தெரியாமல் உணர்ச்சி பெருக்கில்.

அவனின் பேச்சில் வாயடைத்து போய் நின்ற அமுதன்.

"சரி. உங்களுக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா இப்போவே தியை வர சொல்லி கேளுங்க?" என்றான் அமுதன்.

சிறிதுநேரம் அமைதியாக இருந்த அமுதன் அமைதி பெரு மூச்சுவிட்டபடி தனக்குள் உடைந்து போய் துளிர்க்கும் கண்ணீரை துடைக்காமல் அமர்ந்திருக்கும் தீரணை பார்த்தான்.

"இங்க பாருங்க தீரன். உங்ககிட்ட பொய் சொல்லி எனெக்கென்ன ஆகபோகுது? என் தி உங்கக்கூட சந்தோஷமா இருக்கணும் எனக்கு அவ்ளோதான்" என்றான் அமுதன்.

கண்ணீரை துடைத்த தீரன் "இப்போ நான் என்ன செய்யனும்?" என்றான்.

"நீங்க நேரா வீட்டுக்கு போங்க. தி உங்களை உள்ள விடமாட்டா. ஏன்னா உங்கமேல கோபமா இருக்கேன்னு சொல்றதெல்லாம் கண்துடைப்பு. உண்மை என்னன்னா கொஞ்சம் நேரம் உங்ககூட இருந்தாக்கூட எங்க தன் மனசு மாறி உங்ககூட சேர்ந்து வாழ சம்மதிச்சிடுவாளோன்னு அவமேலயே அவளுக்கு பயம்." என்று சிரித்தான் அமுதன்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Kde žijí příběhy. Začni objevovat