தீயாய் சுடும் என் நிலவு 4

3.6K 135 10
                                    

"என்ன சொல்ற மிருதி?" என்றான் தீரன் நம்பாமல்.

"உண்மையை தான் சொல்றேன். உங்க பொண்ணு என்கிட்ட தான் இருக்கா. அதனால, நீங்க அவளை கூட்டிட்டு போய்டுங்க? இனி என்னால பார்த்துக்க முடியாது." என்றாள் மிருதி உள்ளுக்குள் உடைந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்.

"இல்ல... நான் நம்பமாட்டேன். குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க? அதனால தான நீ என்னைவிட்டு பிரிஞ்சிருக்க? அப்புறம் எப்படி என் குழந்தை உயிரோட இருக்க முடியும்?" என்றான் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.

'நான் எதுக்காக பிரிஞ்சிருக்கேன்னு கூட உன்னால யோசிக்க முடியல இல்ல? நீ என்ன பண்ணுவ? உனக்கே தெரியாது அன்னைக்கு என்ன நடந்துதுன்னு?' என்று தனக்குள் புகைந்தவள்.

"இப்போ என்ன சொல்ல வரிங்க? எனக்கு வேற வேலையில்லாம சும்மா உங்களை கூப்பிட்டு பொய் சொல்றேன்னா?" என்றாள் கோபமாக.

"இல்லல்ல... நான் அப்படி சொல்லலை. குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க. அதான் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை. இப்பவும் சரியா புரியலை. பிளீஸ் கோவிச்சிக்காம கொஞ்சம் என்ன நடந்ததுன்னு சொல்றியா?" என்றான் தீரன் தயக்கமாக.

அவனை பார்க்க மிருதிக்கும் பாவமாக தான் இருந்தது. குழந்தை பிறந்ததை கூட அவனுக்கு சொல்லாத பொழுது அவனுக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தவள்.

மெல்ல மூச்சை இழுத்துவிட்டவள், "உண்மை தான். அன்னைக்கு நடந்ததுல எனக்கு அபார்ஷன் ஆனது உண்மை தான். ஆனா, இது தான் என் வாழ்க்கைன்னு ஏதோ நடை பிணமா வாழ ஆரம்பிச்சப்ப தான் எனக்குள்ள குழந்தை இருக்க மாதிரி ஒரு உணர்ச்சி இருந்துகிட்டே இருந்தது. அதே ஸிம்ப்டம்ஸ் இருந்தது. என்னன்னு ஹாஸ்பிடல் போயி பார்த்தப்புறம் தான் தெரிஞ்சது. எனக்கு..." என்று நிறுத்தியவள் அவனை காணாமல் "நமக்கு இரட்டை குழந்தை உருவாகி அதுல ஒரு குழந்தை தான் இறந்ததுன்னு" என்று பேச முடியாமல் நா குழறி அழத்தொடங்கினாள்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now