தீயாய் சுடும் நிலவு -39

1.3K 72 4
                                    

"இந்த பிசாசுங்க என் உயிரை இப்படி எடுக்குதுங்களே? என்ன பண்றது?" என்று கவலையாய் தீரனின் நெற்றி முடியை கோதியவள் தன் கணவனின் தோற்றத்தை ஒரு சில நிமிடங்கள் தன் விழிகளுக்குள் படம் பிடித்துக்கொண்டாள்.

காலிங் பெல் சத்தம் கேட்கவும் தீரனுக்கு நன்றாக போர்த்திவிட்டு வாசலுக்கு சென்றாள்.

"ஸ்ரீஷா போன் பண்ணிருந்தா. அவங்க மாமாக்கு ரொம்ப காய்ச்சல்னு வீட்டுக்கு வர சொன்னா" என்றாள் ஒரு இளம்பெண்.

நிம்மதி பெருமூச்சுவிட, "வாங்க!" என்று தீரன் இருந்த அறைக்கு அழைத்து சென்று காண்பித்தாள்.

"இவருக்கு நீங்க என்ன வேணும்?" என்ற மருத்துவரை ஒரு முறை பார்த்துவிட்டு, ' இப்போ இது தேவையா?' என்று மனதிற்குள் திட்டினாலும், "இவர் என் ஹஸ்பண்ட்." என்றாள் தெளிவாக.

"ஒஹ் ஓகே. மாமா தனியா இருக்காங்க. யாரும் பார்த்துகிறதுக்கு இல்லன்னு ஸ்ரீ சொன்னா அதான் கேட்டேன்." என்று தீரனை பரிசோதித்துவிட்டு, "பீவர் ரொம்ப அதிகமா இருக்கு. மழைல நனைஞ்சாரா?" என்று கேட்டார்.

"ஆமா.. நேத்து நைட் மழைல நனைஞ்சாரு." என்றாள் மிருதி.

"கொஞ்சம் இல்ல... ரொம்ப நேரம் மழைல நனைஞ்சிருக்காரு. ட்ரிப்ஸ் போடணும். இன்னைக்கு முழுக்க கூட இருந்து ரொம்ப கவனமா கவனிச்சுகனும். முடியுமா இல்ல ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போய்டலாமா?" என்றார் டாக்டர்.

பதறியவள், "இல்ல கூட இருந்து நானே பார்த்துக்குறேன். இங்கயே  போடுங்க" என்றாள் மிருதி.

"ஹ்ம். நீங்க பார்த்துப்பிங்க. ஆனா என்னால இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஒன்னு செய்யலாம். அதுவும் ஸ்ரீ என்னோட பிரென்ட் அதான். ட்ரிப்ஸ் முடிய போறதுக்கு கொஞ்ச நேரம் முன்ன போன் பண்ணுங்க. சின்ஹா பக்கத்துல தான் என் ஹாஸ்ப்பிட்டல் இருக்கு. நான் நர்ஸ் ஒருத்தங்களை அனுப்புறேன். அவங்க செக் பண்ணிட்டு எனக்கு சொல்லுவாங்க. " என்றாள்.

"சரி டாக்டர். ரொம்ப நன்றி"

"இருக்கட்டும். " என்று தீரனுக்கு ட்ரிப்ஸ் போட்டு பின், "இவருக்கு கஞ்சி, பால், இட்லி கொடுங்க. காரம் வேண்டாம்" என்று சென்றுவிட்டாள்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now