தீயாய் சுடும் என் நிலவு 17

2.8K 142 14
                                    

                           17

"ஹிம்.. அதெல்லாம் இருப்பேன். நீ எது பண்ணாலும் அக்காவோட எதிர்காலத்தை ஞாபகத்துல வச்சிக்கிட்டு யோசிச்சு பண்ணு அமுதா. அவ்ளோதான் நான் சொல்வேன்." என்றாள் ஸ்ரீ.

"நிச்சயமா ஸ்ரீ. அதுக்காக தான் நான் அவரை பார்க்க போறேன். இனி அவ நல்லா இருக்கணும்." என்று சிரித்தான்.

மறுநாள் அமுதன், மிருதி, குழந்தை என்று மூவரும் தீரணை சந்திக்க சென்று கொண்டிருந்தனர்.

"பேபி" என்றது தனது சின்ன சிறிய பிஞ்சு குரலில் குழந்தை.

"என்ன டார்லிங்?" என்றான் அமுதன் சிரித்தபடி.

"நா...ம்... எ...த போ...தோம்... ?" என்றாள் மிதிஷா.

மிதியின் குழந்தை மிருதியின் முதல் எழுத்து தீரனின் முதல் எழுது என்று சேர்த்து மிதிஷா என்று வைத்திருந்தாள் மிருதி.

மிதிஷாவை சில நொடி நோக்கியவன் மிருதியை பார்த்து, "அம்மா சொல்லுவாங்க டார்லிங். எனக்கும் தெரியலை" என்றான் அமுதன் கிண்டலாய் சிரித்து.

அமுதனை முறைத்த மிருதி.

"மிதி குட்டி.. நாம இப்போ அப்பாவை பார்க்க போறோம்" என்றாள் ஒரு பெருமூச்சை விட்டு.

அம்மாவையே பார்த்து கொண்டிருந்த குழந்தை, "ஹை... அப்பாவை பா..த போ..தோம்.. " என்றது கை தட்டி.

அவளை ஒரு நொடி வியப்பாய் பார்த்த இருவரும் பின் மெல்லிய புன்னகைத்தனர்.

அவர்களுக்கு முன்னே கூறிய நேரத்திற்கு முன் வந்து நின்றிருந்தான் தீரன்.

தீரனின் அருகில் செல்ல செல்ல மிருதிக்கு இதயம் வேகமாய் துடிக்க படப்படப்போடு முன்னேறினாள்.

அவளின் பரிதவித்து புரிந்தாலும் தன் தோழியை கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை.

"ஏய் தி! எதுக்கு இப்படி டென்சன் ஆகுற? உன் புருஷன் தான? ரிலாக்ஸ்.. உன்னை ஒன்னும் முழுங்க போறதில்லை." என்றான் அமுதன்.

"வாய மூடுடா எருமை. கிண்டல் பண்ற நேரமா இது?" என்று அவனிடம் கிசுகிசுத்தாள்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now