தீயாய் சுடும் என் நிலவு 46

1.7K 63 19
                                    

'அவரை எப்பவோ மன்னிச்சாலும் என் உயிரே போக போகுது இதுல அவரிடம் மீண்டும் தன் அன்பை முழுதும் கொட்டி வாழ ஆரம்பித்தபின், என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் மாமா ... நான் இல்லாமல் போனால் எப்படி தாங்குவார்?' என்றே மனதை கல்லாக்கி கொண்டு தீரனை இத்தனை நாள் தள்ளி வைத்திருந்தாள் மிருதி.

ஆனால், இன்றோ.. அவன் தன்னிடமே எதுவும் கூறாமல் தன் உடல் நிலையை சீராக்கிவிட்டு, இன்று அவள் காணவேண்டும் என்று துடிக்கும் நேரத்தில் கண்முன் வராமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறான் என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியும் அவனை காண வேண்டும் என்று மேலும் ஏங்கி தவித்திருந்தாள்.

அவனும் இவளுக்கு சளைத்தவன் அல்ல என்று வெளிப்படையான அன்பை மறைத்து உருகி கொண்டிருந்தானென்பதை பேதையவள் அறிய வாய்ப்பில்லையே...

"தீரன். நாளைக்கு திய டிஸ்சார்ஜ் செய்யலாம்னு சொல்லிட்டாங்க" என்றான் அமுதன் அலைபேசியில்.

மனம் பூரித்து போனாலும் வெளிக்காட்டி கொள்ளாமல், "ஒஹ்! அப்படியா தீரன்? ரொம்ப நல்லது. பார்த்து பத்திரமா டிஸ்சார்ஜ் செஞ்சு அவங்க வீட்டுல விட்டுடுங்க." என்றான் தீரன்.

"எ..ன்.ன சொல்றிங்க தீரன்?" என்றான் காதுகளில் சரியாக விழவில்லையோ என்று.

"அவங்க வீட்ல சேப்பா கூட்டிட்டு வந்து விட்ருங்க அமுதன். எனக்கு நிறைய வேலையிருக்கு நான் வைக்கவா?" என்று வைத்துவிட்டான்.

ஸ்ரீஷாவிடம் இதை கூறியவன், "மிரு கண்ணு முழிச்சதுலர்ந்து இவன் ஆளே சரியில்ல. ஒன்னும் புரியலை." என்றான் கவலையாக அமுதன்.

"எல்லாம் சரியாகிடும்பா. மாமா அக்கா மேல அளவுகதிகமா லவ் வச்சிருக்காங்க. விடு.. ஏதோ கோபம். நிச்சயம் சீக்கிரம் சரி ஆகிடும்" என்று சமாதானம் கூறினாள் ஸ்ரீஷா.

இத்தனை நாள் தான், வரவில்லை இனியாவது வருவான். வந்து டிஸ்சார்ஜ் செய்து தன்னையும் கூட்டி செல்வான் என்ற மங்கையின் கனவில் மண்ணள்ளி போட்டான் மன்னனவன்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Tempat cerita menjadi hidup. Temukan sekarang