இராவணனின் சீதை 37 💖

Comincia dall'inizio
                                    

அவளை இதற்கு மேலும் கவலை அடைய விட கூடாது என்று முடிவெடுத்தவன் பாய்ந்து தன் இடது கையால் அவளை அணைத்துக் கொண்டான்... என் முன்னாடி அழுகாதடி மாமி என்று அவள் தலையை தடவி கொடுக்க .. நீங்க என்கிட்ட கோபப்படாதீங்கோ விக்ரம் எனக்கு ஏதோ பண்றது என்றால் ... அவளை தன்னை நோக்கி பார்க்க செய்தவன் அது என்ன விக்ரம்.. மதியம் இந்திரன்னு கூப்பிட்டே என்று அவன் குறும்பாக கேட்க ...

அது ஏதோ ஞாபகத்தில் சொல்லி இருப்பேன் என்றால் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்துக் கொண்டு... அது எப்படி டி மனசுல இருக்கிறது தான் வாயில வரும் என்று அவன் வம்பிழுத்து கொண்டு முத்தம் கொடுக்க வந்தான்.... அடிபட்டு இருக்கு கம்முனு போய் படுங்கோ... மாத்திரை போட்டுட்டீங்கல என்று கேட்க... ஆம் என்றான்... அவனை விட்டு அவள் தள்ளி படுக்க வலது கையில் தான் அடிபட்டு இருக்குடி... இடது கையும் நெஞ்சும் உனக்காக எப்போதுமே காத்திருக்கு என்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தூங்கினான் ...

காலை யாஷ் மற்றும் விக்ரமிற்க்காக மதி மித்ராவுடன் சமைத்துக் கொண்டிருக்க எழுந்து வந்த விக்ரம் ஷோபாவில் அமர்ந்திருந்த தேவ்வுன் அமர்ந்து கொண்டான் ....இருவருக்கும் அவள் காப்பி எடுத்து வந்து கொடுக்க இருவரும் ஒரே கப்பில் கை வைத்தனர்... அது என்னோடது என்று யாஷ் பிடுங்க ...அது என்னோடது என்று விக்ரம் பிடுங்கினான்.. அதான் ரெண்டு இருக்குல தனித்தனியா எடுத்துக்கிட்டா என்னவாம் என்று மதிக்கூறியவுடன் ...

ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே மறுபடியும் மற்றொரு கப்பில் கை வைத்தனர்... தலையில் அடித்துக்கொண்டு இருவருக்கும் தன் கையாலே காப்பியை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றால்... அவள் சென்றவுடன் மாறி மாறி முறைத்துக் கொண்டனர் ... அதன் பிறகு வந்த நாட்களில் கூட இருவரும் ஒரு நாள் கூட சண்டையிடாமல் இருக்க முடியவில்லை... அவளுக்கு முன் இதுவும் நிகழாதது போல் காட்டிக் கொள்பவர்கள்... அவள் அந்த இடத்தை விட்டு நீங்கி விட்டாள் அவ்வளவுதான் வாய் சண்டை நீண்டு கொண்டே இருக்கும் ...

இராவணனின் சீதை 💖Dove le storie prendono vita. Scoprilo ora