இராவணனின் சீதை 35 💖

Start from the beginning
                                    

அவள் பயந்ததைப் போல செய்தியில் *** ரோட்டில் இன்று நடந்த மிகப்பெரிய ஆக்சிடென்டில் ஏசிபி தேவேந்திரனுக்கு பலத்த படுகாயம் அடைதுள்ளார் ...அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்று செய்திகள் ஓடிக்கொண்டிருக்க... அதற்கு காரணம் அவன் தற்போது எடுத்திருக்கும் கேஸ் தான் காரணமா என்று ஒளிபரப்பி கொண்டிருந்தனர்... எதிர்க்கட்சி ஆட்கள் விக்ரமிற்கு சாதகமாக இதெல்லாம் ஆளுங்கட்சியின் வேலை தான் என்று ஒரு பக்கம் கத்தி தங்கள் கட்சிக்கு பேர் வாங்குவதற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்க...

விக்ரமின் தந்தை போராட்டத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்த போலீஸ் படைகளை அனுப்பி கொண்டிருந்தார் ... இந்த செய்தியை பார்த்த மதி பயத்தில் மயங்கி விட ... அவளையே பார்த்துக் கொண்டிருந்த யாஷ் அவளை தாங்கிக் கொண்டான்... இதற்குத்தான் அவன் கிட்ட சொன்னேன் பத்திரமா இரு பத்திரமா இருன்னு ... அவன் இவளை பத்தி நினைக்கவே இல்ல...

இவ்வளவு நாள் பேசாம இருந்து கஷ்டப்படுத்தினான்... இப்போ இப்படி என்று மனதிலேயே புலம்பியவன் ...அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்தான்... எழவே இல்லை.. மீண்டும் மீண்டும் தட்டி பார்க்க அவளிடம் சிறு அசைவுகள் இல்லாததால் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்... இங்கு விக்ரமின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .... அதேபோல் யுகமதிக்கும் இதுவும் ஆகக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தார் சதாசிவம்..

பிள்ளைக்கு என்ன ஆகிவிட்டது என்று கவலை வேறு ... அவனை பற்றி ஒரு தகவலும் இதுவரை வரவில்லை... மீனாட்சி அழுதழுது அவரும் மயங்கும் நிலையில் தான் இருந்தார்... அதில் யுகமதி நிலைமை கேட்டு அனைவரும் மருத்துவமனைக்கு வந்தனர் ... அவளுக்கு ஒன்றும் இல்லை என்று கூறிய பின் மருமகளை அழைத்துக் கொண்டு மீனாட்சி தனது வீட்டிற்கு சென்றார்... யாஷ் அவளுடனே துணைக்கு சென்றான் யாராலும் அவளை இந்த நிலையில் பார்க்க சகிக்க முடியவில்லை...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now