இராவணனின் சீதை 20 💖

Start from the beginning
                                    

விக்ரமிடம் திரும்பி அந்த துப்பாக்கி கண்டைனராவது போய் சேர்ந்திருச்சா என்று கேட்க... அவன் ஆம் என்று தலையசைத்தான்... பேசாம விக்ரம் கிட்டே எல்லா வேலையும் கொடுத்து இருக்கலாம்... அவன்தான் சரியா செஞ்சு முடிக்கிறான் என்று ஒருவர் கூற ...மற்ற அடியாட்கள் அவனை வெறுப்பாக பார்த்தனர்...

இப்பொழுது வந்தவன் அனைத்து வேலைகளும் சரியாக முடியும் போது தான் செய்வது மட்டும் எப்படி இடையூறு ஏற்படுகிறது என்று யோசிக்கத் தொடங்கினர்... என்ன பண்ணுவீங்களோ இன்னும் ஒரு வாரத்தில் எல்லாத்தையும் சரியா முடிங்க... இல்லனா அவங்க கிட்ட நம்ம பதில் சொல்லிட்டு இருக்க முடியாது என்று பேசிய உடன் கூட்டம் கலைந்தது...

விக்ரமை மற்றவர்கள் முறைத்துக் கொண்டு செல்ல அவனோ எப்பொழுதும் போல் தனது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்... என்ன விக்ரம் உன் பொண்டாட்டி என் மருமகன் கூட போயிட்டா போல என்று ஏளனமாக அமைச்சர் சுந்தரபாண்டியன் கேட்க ...தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன் ...என்ன பண்றது அண்ணா இப்ப எல்லாம் கல்யாணம் பண்ணுன பொண்ணுங்க பின்னாடி தான் நாக்கு தொங்க போட்டுட்டு திரிகிறார்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்தான்...

ஆனால் யாஷை பற்றி அப்படி கூறுவதிற்கு அவனுக்கு துளியும் எண்ணம் இல்லை என்பதே உண்மை... தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன் அவ இப்பவும் என் பொண்டாட்டி தான் உங்க மருமகன் வீட்ல ஒரு கெஸ்ட்டா இருக்கா என்று கூறினார் விக்ரம்... அவன் இவ்வளவு கோபப்படுவான் என்று அறியாத அமைச்சர் சரி கோபப்படாதே ஏதோ ஒரு ஆதங்கத்தில் பேசிட்டேன்...

என்னை இருந்தாலும் என் பொண்ணு கட்டி கொடுக்கணும் இல்ல என்று சமாளிப்பாக அவர் பேச வீடு வந்ததும் இறங்கி விட்டார் ....மணி விக்ரமின் கோபத்தை பார்த்து அண்ணன் இந்த ஆள் பேசுவதற்கு பேசாமல் அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துவிடலாம் என்று சொல்ல ...கொஞ்ச நாளா அங்க இருக்கட்டும்... என்னிடம் இருப்பதை விட யாஷிடம் இருப்பது இப்போதைக்கு மிகவும் நல்லது என்று யோசிக்க முடிவெடுத்திருந்தான்....

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now