இராவணனின் சீதை 19 💖

Start from the beginning
                                    

கைகளில் போட்டிருந்த கட்டில் இருந்து சிறிதாக ரத்தம் கசிய ஆரம்பித்தது... அதை பொருட்படுத்தாமல் உள்ளே குதித்தான்... ஏதோ சத்தம் கேட்க சட்டென விழித்த விக்ரம் அருகில் யுகமதி நன்றாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து போர்வையை எடுத்து போர்த்தி விட்டவன் வெளியே வந்தான்... யாஷும் அந்நேரம் நடுக்கூடத்திற்கு வந்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டனர்...

வேகமாக வந்த யாஷ் அவன் முகத்தில் குத்த இவனும் பலமாக தாக்கினான் ...இந்த சண்டை சத்தத்தில் யுகமதி வேகமாக எழுந்து வெளியே எழுந்து வந்தால்... யாஷ் இங்கே வந்திருப்பதை பார்த்து அதிர்ந்தவள் அவன் உடலில் ரத்த காயங்களை பார்த்து பதற்றத்துடன் தேவ் என்று அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து தள்ளினாள்... இருவரும் சண்டையை நிறுத்துவது போல் தெரியவில்லை ...

கொஞ்சம் நிறுத்துங்கோ என்று அவள் வேகமாக கத்த ... மூச்சு வாங்க இரண்டு பேரும் சண்டையை கைவிட்டனர்... என் கூட வந்துடு ஜானு ... உன்னை கூட்டிட்டு போறதுக்கு தான் நான் வந்து இருக்கேன் என்றான் தேவ் அவள் இரண்டு கன்னத்தையும் பிடித்த படி ... அவன் கையை தட்டி விட்டு தன் புறம் அவளை இழுத்து என் பொண்டாட்டி எங்கேயும் வரமாட்டா என்றான் விக்ரம்...

சினம் கொண்ட யாஷ் அசிங்கமா இல்ல உனக்கு... ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவ மேல கை வைக்கிறதுக்கு என்ன தெரியுமா என்று காரி துப்பியவன்... அவ நான் சொல்றது மட்டும்தான் கேட்பா அப்படித்தானே ஜானு... என் கூட வந்துடு என்று கூறினான் அவளை பார்த்த படி... சொல்லுடி அவன் கூட போறியா என்று விக்ரமும் கத்தினான்... இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு அவள்தான் தவித்தாள் ...

சில நிமிடங்களுக்கு பிறகு அவள் யாஷீன் புறம் நடந்து செல்ல விக்ரம் முற்றிலுமாக உடைந்து போனான்...ஆனால் அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு உனக்கு நான் வேண்டாமா என்று கண்ணாலேயே கேட்க ...அவன் கையை கண்ணீருடன் எடுத்து விட்டவள் யாஷ் அருகில் சென்று ரத்தம் வருது ஹாஸ்பிடல் போகலாம் என்றால்...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now