வா.. வா.. என் அன்பே - 37

Start from the beginning
                                    

சில மாதங்களுக்கு முன் அவனுடைய தயாரிப்பு நிறுவனத்தில் , வேந்தன் அவன் கதையை கொண்டு வந்து மேனேஜரை சந்திப்பதற்காக காத்திருந்தான். அப்பொழுது , அலுவலகத்திற்குள் வேகமாக நுழைந்த சரண்.. வேந்தனை கண்டு விட..

" டேய் , வேந்தா.. என்ன இங்க உட்கார்ந்திருக்க.. நேரா என் ரூமுக்கு போய் வெய்ட் பண்ண வேண்டியதான.. வாடா.. ", என்று தோளோடு அணைத்துக் கொண்டே சென்றவன்.. " டேய் , உன் தங்கச்சி புருஷன்டா.. அந்த நினைப்பு உனக்கும் இருக்குற மாதிரி தெரியலையே.. உட்காரு..  என்ன  ஆஃபீஸ்க்கு வந்திருக்க.. ", என்று நிதானமாக கேள்வி கேட்டவனின் இயல்பான நடவடிக்கை.. பெரிதும் ஈர்த்தவனாய்..

" தாமரை எப்படி இருக்கா ஸார்..", என்றான்..

" ஏன்டா.. உங்க குடும்பத்தில வீட்டு மாப்பிள்ளைய.. ஸார்ன்னு தான் கூப்பிடுவீங்களா..", என்று சிரிப்போடு கேட்க.. அவனே பெரிதும் தடுமாறினான்..

" அப்படி இல்லை.. ", என்று சங்கடத்தோடு முனங்கியவனை.. அதிகம் கலவரப்படுத்த விரும்பாமல்..

" அவ நல்லா இருக்கா.. சரி சொல்லு.. வீட்டுக்கு வராம.. இங்க என்ன பண்ற..",

" இல்ல.. என் கதைய.. சொல்றதுக்காக.. வெயிட் பண்ணீட்டு இருந்தேன்.. ",

" ஓ.. சரி.. ஒரு நிமிஷம்.. ", தன் உதவியாளனை அழைத்து.. அன்றைய நாளுக்கான அட்டவணையை கேட்டவன்.. அனைத்தையும் ஒரு மணி நேரம் ஒத்தி வைக்க கூறிய பின்..

"வேந்தா.. ஒரு மணி நேரம் போதுமில்லை..", என்று அவனிடம் கேட்டறிந்து சொல்ல.. வேந்தனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.. இவனா திருமணத்தன்று.. அந்த ஆட்டம் போட்டது என்று.. எப்படியோ , தங்கையின் கஷ்டக்காலம் தீர்ந்தால் போதும் என்று நினைத்தவன் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான் . 

அதன் பின் அவன் கூறிய கதையில் இருவரும் கவனம் செலுத்தியவர்களாக.. வேந்தன் விவரித்த விதமும்.. அதன் கதைக் கருவும் மிகவும் நன்றாகவே இருக்கவே , மிகவும் பிடித்துப் போனது அவனுக்கு..

" ம்.. நல்லா இருக்கு.. யாரை டிசைட் செஞ்சு இருக்க.. ",

" ம்.. மான்சி.. இதுக்கு ஏப்டா இருப்பாங்க ஸார்..",

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now