இராவணனின் சீதை 7 💖

Start from the beginning
                                    

வந்ததும் அவனின் ஜானுவை கேட்க அவனின் வீட்டிலே அவள் இருந்ததும் தான் மனம் நிம்மதி அடைந்தது ....அவனை அதட்டி மிரட்டி ஊருக்கு அனுப்பி வைக்க பார்க்க அவன் கண்டிப்பாக என் ஜானுவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என பிடிவாதமாக நின்றான்...சுந்தரபாண்டியன் அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே மென்மையான குரலுடன் தம்பி உங்க அப்பா உங்க நல்லதுக்காக தானே சொல்கிறார் ...கொஞ்ச நாள் இருந்துட்டு திரும்ப வந்துருங்க ....ஏதோ டூர் போன மாதிரி நினைச்சுக்கோங்க என்றார்..

மாட்டேன் என்றான் பிடிவாதமாக....அவன் கையில் அவனது ஜானு ...ஏதோ கோழி தன் குஞ்சை பருந்திடமிருந்து காப்பாற்றுவது போல் அணைத்து பிடித்து இருந்தான் ...இப்பொழுதும் பேசாமல் விட்டுவிட்டால் அவன் இன்னும் எந்த நிலைக்கு செல்வானா என்று பயந்த யுகமதி அவன் சட்டையின் காலரை பிடித்து இழுத்தாள் ...

என்ன என்ன ஜானு இன்னும் பயமா இருக்கா என்று அவள் தடையை தடவி அப்படியே கேட்க ...இல்ல எந்த பிரச்சனையும் வரக்கூடாது உனக்கு... கோபமும் குறையனும் அதுக்காக நீ கொஞ்ச நாள் மட்டும் ஊருக்கு போயிட்டு வா என்று சொன்னால் யுகமதி... ஆனால் அவன் இல்லை உன்னை விட்டுட்டு நான் எப்படி போறது பேசாம நீயும் என் கூட வா என்று அவன் சொல்ல...

சுந்தர பாண்டியன் இவங்க ரெண்டு பேரையும் பிரிக்கலாம் என்று பார்த்தால் அந்த புள்ளையும் கூட்டிட்டு போய்விடுவான் போலயே என்று தந்திரமாக யோசித்தவர்... இப்போதைக்கு அந்த பிள்ளைக்கான பாதுகாப்பு கொடுத்து இங்கே நாங்கள் வைத்திருக்கிறோம் ...உன் மேல தான் தம்பி கேஸ் இருக்கு... அவளை யாருமே பாக்கல... பொம்பள புள்ள வெளியே தெரிஞ்சா அவமானமா போயிடாது அந்த பொண்ணுக்கு என்று கேட்க ...

தன்னால் அவள் பெயர் கெட கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே யாஷ் வெளியூர் போக சம்மதித்தான்... உடனே ஜீவானந்தம் அவனது மேல்படிப்பிற்காக அவனை பாம்பே அனுப்பி வைத்தார் ...சிறிது நாட்கள் இருந்து விட்டு வரலாம் என்று நினைத்து தான் சென்றான் இதோ 3 வருடம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான் ....மறுபடியும் ஏதாவது பழைய படி நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று யுகமதி இப்பொழுது அமைதியாக இருந்தாள்..

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now