இராவணனின் சீதை 6 💖

Start from the beginning
                                    

நான் போய் கிளம்புறேன் என்று குளித்து முடித்துவிட்டு அவன் வாங்கி கொடுத்த உடையே போட்டுக் கொண்டால் ....அவனுக்கு தன்னால் சிறிய சந்தோஷம் கிடைக்கும் என்று நினைத்தால் கூட அதை மதி செய்து முடிப்பாள் ....ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயத்திலேயே அனைத்தையும் மனதிற்குள்ளே போட்டு புதைத்து விடுவாள்....

இன்றும் அவளது சித்தி ஏளனமாக ஏதேதோ பேசிக் கொண்டே தான் இருந்தால் ...எப்பொழுதும் போல் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொண்டு வேலைகளை செய்து முடித்தவள் வெளியே கார் சத்தம் கேட்டவுடன் தனது தந்தையிடமும் சித்தியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டால் ...ஆமா ஊர்ல இல்லாத மகாராணி துரை வந்து கூப்பிட்டதும் போறது பாரு என்று சித்தியின் பேச்சு காதில் விழுந்தாலும் அதை சட்டை செய்யாது கிளம்பி விட்டால்...

இன்றும் டிரைவர் சீட்டில் விக்ரம் இருந்தான்....பின்னால் தேவ் முகம் எல்லாம் பல்லாக அவளைப் பார்த்து சிரித்தான் ....அவள் உள்ளே அமர்ந்ததும் வாவ் ஜானு இந்த டிரஸ் உனக்கு நான் நினைச்சதை விட சூப்பரா இருக்கு என்றான்.... நானும் உனக்காக தான் போட்டுட்டு வந்தேன் உனக்கு புடிச்சிருக்கு தானே என்றால் அவளும் சிரிப்புடன்...
கண்டிப்பா எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு என்றவன் இன்னைக்கு எங்க போகலாம் என்று கேட்க எனக்கு தெரியலையே என்றால்...

உனக்கு என்ன தான் தெரியும் என்று குறைப்பட்டுக் கொண்டவன் இருவரும் சேர்ந்து மதுரையில் உள்ள சில முக்கிய இடங்களுக்கு சுற்றிவிட்டு மதியம் உணவு உண்ண ஒரு செட்டிநாடு ஹோட்டலுக்கு அழைத்து சென்றான் .... தேவ் இது நான்வெஜ் ஹோட்டல் நான் வெஜிடேரியன் என்றால் மெலிதான குரலில்... எனக்கு தெரியும் ஆனாலும் எனக்கு வேணுமே என்றான் சிறு பிள்ளை போல...

இங்கே தயிர் சாதம் அது மாதிரி ஏதாவது கிடைக்குமான்னு கேட்டு சொல்லு என்று மதி கேட்க அவனும் உள்ளே போய் கேட்டுக் கொண்டு வந்தான்... எல்லாமே கிடைக்குமாம் நீ வந்து உட்காரு என்று அவளை அமர்த்தி விட்டு விக்ரமிற்கும் தன்னைக்கும் நான் வெஜ் ஆர்டர் செய்தவன்... அவளுக்காக அவளுக்கு பிடித்த தயிர் சாதத்தையும் மாங்காய் ஊறுகாவையும் ஆர்டர் செய்தான்...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now