இராவணனின் சீதை 5 💖

Magsimula sa umpisa
                                    

விக்ரமின் சிவந்த வழிகள் வேறு அவளை அச்சுறுத்தியது ...ஒரு வழியாக மால் வந்துவிட இருவரும் அங்கு இறங்கினர்... பின்னாலே விக்ரம் சற்று இடைவெளியை விட்டு இருவரையும் தொடர்ந்தான்... முதல்ல நீ போட்டிருக்க தாவணியை மாத்திட்டு எனக்கு புடிச்ச மாதிரி ஒரு டிரஸ் எடுத்து தரேன் அதையே போட்டுக்கணும் என்று கூற ....அவனுடன் இருக்கிற வரைக்கும் அதையே போட்டுக் கொள்ளலாம் என்று அவளும் சரி என்றால்....

நிறைய ஆடைகளை பார்த்தான் யாஷ் எதுவும் அவனுக்கு பிடிக்காமல் போக ஒரு மிடி எடுத்து அவளிடம் கொடுத்தான்... அடர் கருப்பு நிற பாவாடையும் மேலே தங்க நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் கலந்து இருந்தது அதன் மேல் சட்டை .... துணியை மாற்றிக் கொண்டு வர அவளுக்கு அம்சமாக இருந்தது... ரொம்ப அழகா இருக்க என்று அவளுடன் சில பல செல்பிகளை எடுக்க விக்ரம் இருவரையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்...

அவன் முகத்தில் என்ன பாவனை இருக்கிறது என்று மதியால் தெரிந்து கொள்ள முடியவில்லை ...யாஷிடம் இயல்பாக பழக முடியவில்லை... விக்ரமின் குறுகுறு பார்வை அவனை எப்படி தவிர்த்து விட்டு யாஷுடன் பேசுவது என்று குழம்பினாலும் யாஷ் மதியை நன்றாக புரிந்து வைத்திருந்தமையால் அவள் சிறு முகம் வாடினாலும் கண்டுபிடித்துக் கொள்வான் என்று தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள முயற்சித்தால்....

அடுத்ததாக ஒரு ரெஸ்டாரன்ட் இருக்க அங்கு அழைத்து சென்றான்... விக்ரமையும் எதிரில் அமர சொல்ல இப்பொழுது விக்ரம் மற்றும் யாஷ் இருவருக்கும் இடையில் மதி அமரும்படி ஆனது ...யாஷ் அவளுக்கு பிடித்தவையே ஆர்டர் செய்து சிறிது எடுத்து வைக்கவும் சிறிது ஊட்டி விடவும் செய்தான்... அவளும் இது சாப்பிட்டு பாரு தேவ் என்று அவனுக்கு ஊட்டி விட விக்ரமின் கை ஒரு நிமிடம் நின்றது ...

அதன் பிறகு விக்ரமுக்கு உணவு இறங்கவில்லை ....அவனுக்கே இது எல்லாம் புதியதாக தோன்றியது... தான் வந்த வேலையை மட்டும் பார்ப்போம் எதற்காக இந்த பெண்ணிடம் கோபம் கொள்கிறோம் என்று மனம் யோசித்தாலும் எப்பொழுதும் போல இயல்பாக இருக்கவே முயற்சித்தான்... அமைச்சர் சுந்தரபாண்டியன் இடையே ஒரு முறை போன் செய்து யாஷி பற்றி கேட்க அவன் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் ...அவனுக்கு பாதுகாப்பாக நான் தான் கார் ஓட்டி வந்தேன் என்று விக்ரம் சொன்னதும்...

இராவணனின் சீதை 💖Tahanan ng mga kuwento. Tumuklas ngayon