இராவணனின் சீதை 3 💖

Start from the beginning
                                    

நானே பாப்பா டிச்சரை பார்த்து விட்டு வரேன் மா என்று தாயிடம் கூறிவிட்டு தொலைபேசியை அணைத்து வைக்க வெளியே விக்ரம் வருவதைப் பார்த்து தங்கச்சி ஸ்கூலுக்கு போயிட்டு வரட்டுமா அண்ணா என்று கேட்க சரி என்று சொல்லி அவன் திரும்பியதும் செந்தில் இந்த ஸ்கூல் டா என்றான் ....

அந்த பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்துல ஒரு பெரிய ஸ்கூல் இருக்குல அது அண்ணா என்றான் ....காலையில் தான் மிரட்ட சென்ற பெண்ணும் அதே ஸ்கூலில் வேலை செய்வதை நினைத்து எனக்கு வீட்டுக்குள்ள இருக்க கடுப்பா வருது அதனால நானும் வரேன் என்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டான்... அண்ணனுக்கு மனசு சரியில்ல போல என்று எதுவும் கேட்காமல் செந்தில் வண்டியை எடுத்தான்....

ஏன் செந்தில் காலையில லேட்டா வந்த என்று கேட்க வீட்டில கொஞ்சம் வேலை அண்ணா அதான் என்றான்.... பிறகு எதுவும் பேசாமல் பள்ளிவாசலில் நிறுத்தினான்... அவன் தங்கை அந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறாள்... பிரணிதா வகுப்பு தான் அவளும்....

யுகமதி மனதில் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக அதை எல்லாம் காதில் வாங்கி மனசு வருத்தப்படும் என்று எதையும் சிந்திக்காமல் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் அமர்ந்திருந்தால்.... என்ன யுகமதி ஸ்கூல்ல உள்ள எல்லாரும் உன்ன பத்தி பேசிட்டு இருக்காங்க ....அதெல்லாம் நீ மனசுல எதுவும் எடுத்துக்காதடி...

அவங்களுக்கு பேச மட்டும் தான் தெரியும் என்று ஆதரவாய் அவர் கையை நித்யா பிடிக்க... வருத்தத்துடன் ஒரு சிரிப்பை உதிர்த்தாள் இது எப்பொழுதும் நிகழ்வது தானே என்பது போல் ... யாஷ் தான வந்தது என்று நித்யா கேட்டதும் ஆமா என்று தலையை அசைத்தாள்... ஈவினிங் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கான்...

சித்தி என்ன சொல்லுவாங்கன்னு பயமா இருக்குடி என்றாள் பயந்து குரலுடன் அவள் சொல்ல ....பேசாம நான் இன்னைக்கு லேட்டா போறேன் முடிஞ்ச அளவு ஒரு ஆறு மணிக்குள்ள நீ வீட்டுக்கு வர பாரு என்று நித்யா தனது தோழிக்காக கூறினாள்... எனக்காக ஏண்டி நீ லேட்டா போற சீக்கிரம் போ என்று சொல்ல ...அடியே உனக்காக இது கூட நான் செய்ய மாட்டேன்னா... பக்கத்து வீடு தானே நான் சீக்கிரம் போனா உன் சித்தியும் கண்டுபிடித்துவிடும் டி மாமி என்று அவள் தாடையை பிடித்து ஆட்ட...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now