💚 இணை 38

893 50 10
                                    

"எங்கடா பவி போயிட்ட? ரொம்ப நேரமா ஒன்னக் காணும்னு பார்த்துட்டு இருந்தோம்!" என்று கேட்ட சபாபதியிடம் முறைப்புடன்,

"ஏன்.... அவ எங்கூடத்தா இருப்பான்னு தெரியலயா ஒனக்கு? கிப்ட்டு குடுத்து, சாப்டீங்கன்னா கெளம்புங்க. பவி அம்மாவாண்டயும் சொல்லிருங்க. அவள நா வீட்டுக்கு கூட்டினு வந்து உடுறேன். ஆனா இங்க கொஞ்ச நேராகும்!" என்று சொன்னான் செல்வா. அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் மகளிடம்,

"என்னடா பவி? நாங்க கெளம்பட்டுமா?" என்று கேட்டார் சபாபதி.

"ஓகேப்பா! நான் இன்னுங்கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு, இவனோட  போய் இவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மீட் பண்ணிட்டு, லன்ஞ்ச்..... இல்ல ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைமுக்குள்ள வீட்டுக்கு வந்துடுறேன். அம்மாட்டயும் போயி இன்ஃபார்ம் பண்ணிட்டு வர்றேன்ப்பா!" என்று அவரிடம் சொல்லி விட்டு சென்றாள் பவி.

"டேய்..... பவிம்மாவ எங்கடா கூட்டிட்டுப் போகப்போற?" என்று சொன்னவரிடம் அசட்டையாக தோள் குலுக்கியவன்,

"அதெல்லா ஒன்னாண்ட சொல்லினு இருக்க முடியாது மாம்ஸூ; அவ உங்கூட வந்தா கூட்டிட்டுப் போயிப் பேசுன்னு சொன்னல்ல? அத்தோட நிறுத்திக்கணும்.  ஒன்னிய பாத்துக்க ஒருத்தர் போதும்; பவிப்பாப்பாவ என்னாண்ட குடுத்துருன்னு நாந்தான் ஒங்கிட்ட ஏற்கனவே கேட்ருந்தேன்ல.... சீக்கிரத்துல அவள எங்கிட்ட குடுக்குறதுக்கு ரெடியா இருந்துக்க! வரவா?" என்று அவரிடம் கேட்டு விட்டு நகர்ந்தவனைப் பார்த்து சிறு சிரிப்புடன் தலையசைத்துக் கொண்டார் சபாபதி.

"சாம் அக்கா..... ஹவ் ஆர் யூ டூயிங்? நம்ம கஸின் அண்ணா உங்கள எவ்ளோ லவ் பண்றாங்க தெரியுமா? அவங்க ஷாப்னு தெரியாம தான் லிட்டில் புட்ஸ்க்கு நாங்க போனோம். எங்களுக்கு கூட அவங்கள முதல்ல பார்த்தப்ப இவங்க தான் சாம் அக்காவோட கஸின் அண்ணான்னு தெரியல. பட் அண்ணா தான் எங்கள கரெக்டா ரெககனைஸ் பண்ணிட்டாங்க. உங்க ஜீனியருங்கறதாலயே எனக்கு ஒரு பப்பிய கிப்டா குடுத்துட்டாங்க தெரியுமாக்கா? ஐ வில் லவ் ஹெர் ட்டில் மை லாஸ்ட் ப்ரெத்னு அவங்க எங்க கிட்ட சொன்னப்ப செம கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் தெரியுமா? உங்க மேல அண்ணாவுக்கு எவ்ளோ லவ் தெரியுமா? உங்கள ரொம்ப வருஷமா பாக்கல..... ஒரு நல்ல பொஸிஷனுக்கு வந்த பிறகு தான் வந்து பாக்கணும்னு அவங்கட்ட நீங்க சொல்லியிருந்தீங்களாம்! ஏன் சாம் அக்கா அப்டி சொன்னீங்க? அண்ணா எவ்ளோ பாவம்?" என்று அவள் பாட்டில் பேசிக் கொண்டே திவ்யாவிடம்,

இளையவளோ என் இணை இவளோ✔Dove le storie prendono vita. Scoprilo ora