💚 இணை 20

706 48 8
                                    

திங்கட்கிழமை காலை எட்டுமணியளவில் சபாபதி தன்னுடைய மாமனார் மாமியாரை
வீட்டின் நடுஹாலில் உட்கார வைத்திருந்தார். இன்று லீவ் போடுகிறேன் என்று ஒரேயடியாக அடம் பிடித்த பவியை செல்வா குண்டு கட்டாக தூக்கிச் சென்று பள்ளியில் விட்டு வந்திருந்தான்.

சபாபதி, செல்வா இருவரிடமும் எந்தவிதமான பதட்டமோ, பயமோ, படபடப்போ இல்லை. அவர்கள் பாட்டில் எழுந்தார்கள், கிளம்பினார்கள், அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்! பவி கீழறங்கி வந்து காலை டிபனை முடித்து விட்டு பாலைக் குடித்துக் கொண்டிருந்த போது தான் கல்யாணி சிறு சோம்பலுடன் ப்ரிட்ஜில் இருந்த பால்பாக்கெட்டை தூக்கி அடுப்பில் வைத்திருந்தார். அப்போது தான் சபாபதி கல்யாணியிடம் சென்று

"உங்கட்ட கொஞ்சம் பேசணும்! காஃபி குடிச்சுட்டு சாவகாசமா ஹாலுக்கு வந்து உட்காருங்க!" என்று அவரிடம் சொல்லி விட்டு சென்று ஹாலில் டீவி பார்த்துக் கொண்டு இருந்தார்.

தன்னுடைய தந்தை இப்படி சொன்ன பிறகு தனது பலவருட கொள்கையை உடைத்தெறிந்து விட்டு இன்று முதல்முறையாக பள்ளிக்கு விடுப்பு எடுத்து விடுவது என்ற முடிவில் மறுபடியும் தனது அறைக்கு சென்று தனக்கு இதுவரை பயன்படவே இல்லாத லீவ் லெட்டர் ஃபார்மை நிரப்பி எடுத்துக் கொண்டு தன் தந்தையின் கையெழுத்துக்காக கீழிறங்கி வந்தாள் சாம்பவி.

"டாடி.... இதுல ஒரு ஸைன் பண்ணுங்க!" என்று அவரிடம் கேட்டபடி விடுப்பு விண்ணப்பத்தை நீட்டியவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்த சபாபதி,

"லீவ் போடுற அளவுக்கு இன்னிக்கு என்னடா விசேஷம்? இன்னிக்கு லீவ் எடுத்தாலும் உனக்கு உன்னோட புல் அட்டென்டென்ஸ் சர்ட்டிஃபிகேட் கிடைக்காது தான?" என்று கேட்டவரிடம்,

"ஆமா...... ஆனா பரவால்ல டாடி!" என்றாள் சாம்பவி சற்றே ஏமாற்றம் நிறைந்த குரலில்.

"அச்சச்சோ.... பரவால்லன்னு சொல்லும் போதே அழுதுடுவ போலிருக்கு! லீவ் போட்டுக்கறத பத்தி நீ இவ்ளோ கவலைப்படுறதுனால டாடியால இந்த ஃபார்ம்ல சைன் பண்ண முடியாதுடா செல்லம்! ஐ'ம் ஸாரி!" என்றவர் அறையில் இருந்த செல்வாவை அழைத்தார்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now