💚 இணை 18

657 47 4
                                    

அந்த வாரத்தில் வந்த ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே சபாபதி தன்னுடைய வீட்டுக்கு வந்து விட்டார். எப்பவும் போல் கோவிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தவர், காலை
உணவிற்கு பின் பவியை எங்கோ கிளம்ப வேண்டும் என்று சொல்லி ரெடியாகி வரச் சொன்னார்.

"வெளிய போய்ட்டு வர எவ்ளோ நேரம் ஆகும்ப்பா? என் க்ளாஸ்மேட் தீபக் ரொம்ப நாளா க்ரூப் ஸ்டடிக்கு வா வான்னு என்னை கூப்ட்டுட்டு இருக்கான்! இன்னிக்கு அவன் வீட்ல பிஸிக்ஸ் ரிவிஷனுக்கு ஏழெட்டு பேர் அசெம்பிள் ஆகுறாங்களாம். அதான் நானும், செல்வாவும் ஈவ்னிங் அங்க போகலாம்னு நினைச்சோம். ஃபோர் ட்டூ செவன் நான் தீபக் வீட்டுக்குப் போயிட்டு வரட்டுமாப்பா?" என்று தன்னிடம் கேட்ட சாம்பவியை தன் முகத்தில் கூடுதலான திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் சபாபதி.

ஆறேழு மாதங்களில் அவள் தன்னிடம் பேசிய பெரிய உரையாடல் இதுதான் என்று நினைத்துக் கொண்டு தன் மகளிடம்,

"ஸாரி பவிம்மா! இன்னிக்கு நமக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு! ஸோ நீ கேக்குற உன்னோட க்ரூப் ஸ்டடிய நெக்ஸ்ட் வீக் வேணும்னா நம்ம வீட்லயே வச்சுக்கோயேன். எல்லாரையும் இங்க வரச் சொல்லு. கொஞ்ச நேரம் ஜாலியா இருந்துட்டு, அப்புறமா படிங்க!" என்றவரிடம் தயக்கமான குரலில்,

"இல்ல டாடி..... ப்ரெண்ட்ஸ எல்லாம் நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா அம்மம்மாக்கு கொஞ்சம் டிஸ்டர்பென்ஸா இருக்கும்! அதுனால தாத்தாவும் அத அலவ் பண்ண மாட்டாருப்பா!" என்று சொன்ன பவியை தன் பக்கத்தில் வந்து அமருமாறு கண்களால் அழைத்து, தன்னருகில் இருந்த ஸோஃபாவின் ஒற்றை சேரை தட்டிக்காட்டினார் சபாபதி.

என்றைக்கும் போல சாப்பிட்டதும் அவர் பாட்டில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அவரது அறைக்குச் சென்று இருக்காமல் இன்றைக்கு தன்னுடைய தந்தையின் செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் புதிதாக தெரிந்தது சாம்பவிக்கு. எதையோ உள்ளுக்குள் வைத்துக் கொண்டு அதை சொல்லத் தவிப்பர் போல் ஒருவித தடுமாற்றத்துடனே உலவினார்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now