💚 இணை 34

668 47 4
                                    

செல்வாவை சந்தித்ததற்கு மறுநாள் காலையில் தீபக் தன்னுடைய பள்ளித்தோழி சாம்பவியினுடைய வீட்டிற்கு சென்று திவ்யாவின் திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு வர அன்று மாலை ட்யூட்டியிலிருந்து வந்த தன் மகளிடம் ரேணுகா,

"பவிம்மா...... இன்னிக்கு மார்னிங் உன் ப்ரெண்டு தீபக் உனக்கு இன்விடேஷன் குடுக்க நம்ம வீட்டுக்கு வந்துருந்தார்டா; அவரு தங்கச்சி திவ்யா உன் ஜுனியராமே.... அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாம்! நீ கண்டிப்பா அந்த மேரேஜ் அட்டெண்ட் பண்ணனும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க!" என்று சொன்ன தன்னுடைய அம்மாவை கழுத்தில் கைகோர்த்து கட்டிக் கொண்ட சாம்பவி,

"வாவ்; திவ்ஸ்க்கு மேரேஜா! சூப்பர்; நீ என்ன பண்ற; உன் புருஷனையும் அன்னிக்கு லீவ் போடச் சொல்லிடு! நாம திவ்ஸோட மேரேஜ கண்டிப்பா அட்டெண்ட் பண்றோம். ஓகேவா ரேணு?" என்று அவரிடம் கேட்டு தன் அன்னையின் கன்னத்தில் தன் மூக்கினால் உரசி,

"ஏய்.... ஏன்டீ இப்டி அழிச்சாட்டியம் பண்ற?" என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் அவள் செய்வதைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

"யாருடா பவி இந்த திவ்யா? ஸ்கூல் ப்ரெண்டா? அம்மாக்கு தெரியாது?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம்,

"அதாம்மா! ப்ளஸ்டூவுல கேங்க் கேங்கா பிரிஞ்சு சண்ட போட்டுட்டு இருப்போம்னு சொல்லியிருந்தேன்ல? அதுல ஒரு கேங்க் தீபக்கோடது! தீபக்கோட சிஸ்டர் தான் இந்த திவ்யா! அண்ணனோட கூட ரொம்ப ஒட்ட மாட்டா; சாம் அக்கா, சாம் அக்கான்னு எம்பின்னாடியே சுத்தி சுத்தி வருவா. ரொம்ப இன்னொசென்ட் கேரக்டர்மா; இப்ப எப்டி இருக்காளோ? தீபக் என்ன செஞ்சுட்டு இருக்கானோ? வீட்ல வந்து இன்வைட் பண்ணியிருக்கான்னு வேற சொல்ற; கண்டிப்பா பங்ஷன்ல கலந்துக்குறோம். டாடிட்ட சொல்லிடு! ஒரு நல்ல கிப்ட்டா நீயே வாங்கி வச்சிடும்மா!" என்று சொன்னாள் சாம்பவி.

"ப்ரெண்டுக்கு கல்யாணம்னா என்ன மாதிரி கிப்ட் வாங்குறது? சரி ஓகே! நான் ஷாப்ல போயி பார்த்துட்டு உனக்கு மெசேஜ் பண்றேன் விடு; சரி, ரொம்ப நாளா டச்ல இல்லங்குற; அப்ப அந்தப்பொண்ணுக்கு கால் பண்ணி விஷ் பண்ண வேண்டியதுதானடீ; இன்விடேஷன்ல மொபைல் நம்பர் பார்த்த மாதிரி நியாபகம்..... இருக்கான்னு செக் பண்ணு பவிம்மா!" என்று சொன்ன தன் அன்னையிடம்,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now