💚 இணை 22

682 49 17
                                    

"இப்ப என்ன செய்யணும்ங்குற ரேணு? எல்லா தப்பையும் செஞ்சது அவங்க தான்! ஒரு வருஷத்துக்கு ஒரு லச்சம்ங்குற அளவுல கை வச்சுருக்காங்க. அது போக வீட்ல இருந்த வித்யாவோட பாதி நகைய எடுத்து சத்தமில்லாம வித்துருக்காங்க. இது எதையுமே பாக்காம நான் அந்த சின்னப்பய திட்டுற மாதிரி கண் இருந்தும்  குருட்டுக்கபோதியா தான் இருந்துருக்கேன்! இதுக்கு மேல நான் அவங்களுக்கு என்ன ஃபேவர் பண்ணனும்ங்குற? போதும். ரொம்ப நெருங்குன உறவுக்காரங்கன்னு நினைச்சு, வீட்டுக்குள்ள விட்டதுக்கு மொத்தமா என் நம்பிக்கையையும், பவியோட பாசத்தையும் கால்ல மிதிச்சு நசுக்கிட்டுப் போய்ட்டாங்க! கிளம்புறப்ப நீ நல்லாயிருமான்னு பேத்திய ஒரு வார்த்த கூட சொல்லலையாம். பாவம் பவி.... அந்த குழந்த தான் கெளம்புற வரைக்கும் அவங்க ரெண்டு பேரோட முகத்தப் பாத்துக்கிட்டே
நின்னுட்டு இருந்துருக்கா! என்ன ஆனாலும் சரி ரேணு; நீ வா, நாம வீட்டுக்கு கிளம்பலாம்!" என்று உறுதியான குரலில் சொன்னவரிடம் பதில் எதுவும் பேசாமல் தயங்கிய படி அமர்ந்திருந்தார் ரேணுகா.

"ரேணு.... கிளம்பலாம்னு உங்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்! கேக்குறியா இல்லையா?" என்று கேட்டவரிடம்,

"இல்ல சபா! நான் கிளம்பறது இப்போ இல்ல......! உங்கட்ட நான் தான் சீக்கிரத்துல என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுங்கன்னு கேட்டேன். பட் நேத்து தான் பவியோட தாத்தா, பாட்டி கிளம்பிப் போயிருக்காங்கன்னு சொல்றீங்க! இந்த நேரத்துல என்னைக் கூட்டிட்டுப் போய் பவி முன்னால நிறுத்துனீங்கன்னா அவ என்ன யோசிப்பா? நீங்க எனக்காக அவளோட தாத்தா பாட்டிய வீட்ல இருந்து வெரட்டி விட்டுட்டீங்கன்னு தான யோசிப்பா? கொஞ்ச நாள் ஆகட்டும்..... பவி நார்மலாகி ஒரு நல்ல மூடுக்கு வரட்டும்! அப்புறமா நாம நம்ம வீட்டுக்குப் போய்க்கலாம்! என்ன சபா?" என்று சொன்ன ரேணுகாவிடம்,

"பேசாம அவ சின்னப் பொண்ணா இருந்தப்பவே அவள தூக்கி உங்கையில குடுத்துருக்காம போச்சு ரேணு! இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுன்னு சொல்லி சொல்லியே பத்து வருஷத்த நாம தனித்தனியா வாழ்ந்து முடிச்சிட்டோம். இனிமே நாம எப்ப நம்ம வீட்டுக்குப் போனாலும் பவி நம்மள தப்பா தாம்மா நினைக்கப்போறா; அது ஏன் இன்னிக்கா இருக்கக்கூடாது?" என்று கேட்டார் சபாபதி.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now