💚 இணை 3

929 45 4
                                    

சபாபதியின் வீட்டில் செல்வாவின் வேலைகளுக்கான அட்டவணை அத்தியாவசிய பொருட்களுக்கான விலைஏற்றம் போல் நாள்தோறும் வளர்ந்து கொண்டே சென்றது. அவனுக்கும் சாம்பவிக்கும் எந்த விஷயத்திலும் சுத்தமாக ஒத்துப் போகவேயில்லை. அவள் வழிக்கே செல்லாமல் நாம் பாட்டில் ஓரமாக
ஒதுங்கிப் போய் விடுவோம் என்று அவன் நினைத்தாலும், அதற்கும் விடாமல் அவனது நடவடிக்கைகளில் ஒரு கண் வைத்துக் கொண்டே சுற்றினாள் அந்த சிறு பெண்.

விவரம் தெரிந்ததில் இருந்து அவளது அம்மம்மாவின் வார்த்தை தான் அவளது வாழ்க்கை முறைக்கான வழிகாட்டியாக இருந்திருக்கிறது.

"அம்மம்மா..... சங்கரி ஆன்ட்டி வீட்டு மேரேஜ் பங்ஷனுக்கு உங்கூட நானும் வர்றேன் அம்மம்மா!" என்று தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆசையாக கேட்கும் தன் பேத்தியிடம்,

"ஐயயோ..... வேண்டாம் பவிம்மா...... இவ தான உன் ஓடிப்போன பொண்ணுக்கு பிறந்த பொண்ணுன்னு அந்த சங்கரி உன்னைய பார்த்து பேச ஆரம்பிச்சான்னா அப்புறம் ஒரு மணிநேரம் நம்ம கதையத்தான் பேசிட்டு இருப்பா! அம்மம்மா பங்ஷன்ல தலைய காட்டிட்டு அரைமணி நேரத்துல வந்து உங்கூட இருப்பேன்!" என்று தன் பேத்தி சாம்பவிக்கு தரும் கல்யாணியின் வாக்குறுதி எப்பொழுதும் அந்த வயதான பெண்மணிக்கு நியாபகத்தில் இருந்ததில்லை.

வாரம் ஒரு அவுட்டிங், மாதம் ஒரு விழா என்று செல்வதற்காக ஸாஃப்ட் சில்க், பனாரஸி சில்க், கலம்காரி டிஸைன் மீனாகாரி டிஸைன் என்று பார்த்து பார்த்து தனது பாட்டி தனக்கென புடவைகளை தேர்வு செய்து கொள்வதை பார்க்கும் போது  சாம்பவிக்கு தானும் அந்த ஷாப்பிங்கில் இணைந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்து ஏக்கமாக இருக்கும்! அவர்களுடைய ஷாப்பிங்கில் மட்டுமல்ல.....

"பவிம்மா.... உனக்காக அம்மம்மா தேடி அலைஞ்சு நிறைய ஷாப்பிங் பண்ணிட்டு வந்தேன்டா செல்லம்; குர்த்தீஸ், டாப்ஸ், புல்ஃப்ராக் கூட இருக்கு பாரேன்!" என்று சொல்லும் அந்தப் பாட்டி ஒருநாள் கூட உனக்கு பிடித்ததை நீயே என்னுடன் வந்து தேர்வு செய்து கொள் என்று சொன்னதேயில்லை.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now