💚 இணை 17

721 53 16
                                    

செல்வாவும், சாம்பவியும் திவ்யாவின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று வந்ததற்கு பிறகு பள்ளியில் தீபக் சாம்பவியை பார்க்கும் போதெல்லாம் ஐயோ பாவம் இந்தப் பெண் என்ற மாதிரியான பரிதாபகரமான ஒரு பார்வையுடனே சுற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கும், செல்வாவிற்கும் விழாவில் பிரச்சனை நடந்தது வேறு திவ்யாவின் வாய்வழியாக சாம்பவிக்கு தெரிந்திருந்தது. ஆனால் தீபக் அவளை முறைப்பதற்கு பதிலாக சிரித்ததற்கும், செல்வா தீபக்குடன் சண்டைக்கு சென்றதுக்கும் சேர்த்து அவனுக்குத் தான் சரியான மண்டகப்படி கிடைத்தது.

"டேய்.... உனக்கு நான் எத்தன தடவ உட்கார வச்சு க்ளாஸ் எடுத்தாலும், எதையுமே காதுல வாங்க மாட்டியா நீ? தீபக் கூட ஏன் சண்ட போட்ட?" என்று கேட்டவளிடம்,

"ஐய.... இல்ல பாப்பா! நீ சாப்ட போயிருந்தசொல அத்து நம்மளாண்ட ரொம்ப புளிப்பு காட்டினு இருந்ச்சு! அப்பால நாங்க கொஞ்ச நேரம் சொம்மா பேசினு இருந்ததுல அல்லாம் சரியாய்டுச்சு! நானும், அண்த்தயும் ரொம்ப ப்ரெண்ட்சாகிக்கினோம்; நீ ஒண்ணியும் ஃபீல் பண்ணிக்காத! தெர்தா?" என்று அவளுக்கு சமாதானம் சொன்னான் செல்வா.

"என்ன ஃபீல் பண்ணிக்காத......? யாரும் எங்கூட ப்ரெண்ட்லியா இருக்குறதெல்லாம் எனக்குப் பிடிக்காது செல்வா! அதுனால ஸ்கூல்ல கூட நிறைய நேரம் நான் உண்டு, என் வேல உண்டுன்னு தான் இருப்பேன். யார் கிட்டயும் என் நோட்ஸெல்லாம் ஷேர் பண்ணிக்க மாட்டேன். ப்ரேக் டைம்ல கேங்கா கிளம்பி கேன்டீன் போனாங்கன்னா அத பார்த்துட்டு பார்க்காத மாதிரி இருந்துடுவேன். அதுனாலயே எங்க க்ளாஸ்ல தீபக் கேங்க், வதனி கேங்க் பசங்க எல்லாரும் என்னை சாம் ரொம்ப ஹெட்வெயிட்பான்னு தான் சொல்லுவாங்க. இப்டி ஒழுங்கா போயிட்டு இருந்த என்னோட லைஃப நீ உள்ள புகுந்து குழப்பி வச்சுருக்க! தீபக்கே இப்போ எங்கிட்ட வந்து வந்து பேசுறான்; மூவிக்கு வர்றியா, க்ரூப் ஸ்டடீஸ்க்கு வர்றியா, வீக் எண்ட் நம்ம ரெண்டு க்ரூப் மெம்பர்ஸூம் சேர்ந்து ஏதாவது கெட் ட்டூ கெதர் ப்ளான் பண்ணிக்கலாமான்னு கேக்குறான்! இதுக்கு எல்லாம் நான் என்னடா பதில் சொல்லட்டும்?" என்று குறை படித்தவளிடம்,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now