💚 இணை 4

842 45 9
                                    

"மாப்ள..... இந்த செல்வா பையன் நம்ம வீட்டுக்கு வேண்டாம் மாப்ள; நான் நெனச்சத விட அவன் ரொம்ப
திமிரு பிடிச்சவனா இருக்கான்! அவன் நமக்கு வேலை செய்யணும்னு நினைச்சு அவன வேலைக்கு சேத்தா, அவன ஒக்கார வச்சு நாம அவனுக்கு வேல செய்ய வேண்டியதாயிருக்கு. இத சொன்னா நீங்க நம்பக்கூட மாட்டீங்க; ஆனா இன்னிக்கு அந்த பயலுக்கு காலையில காஃபி நான் போட்டுத் தந்துருக்கேன் மாப்ள!" என்று சொன்ன தனசேகரிடம்,

"ஓ.... அப்டியாங்க மாமா?" என்று கேட்டார் சபாபதி.

"என்ன மாப்ள நான் எவ்ளோ பெரிய விஷயத்த உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு அப்டியான்னு ஒரு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?" என்று கேட்ட தனசேகரிடம் ஏளனம் நிறைந்த குரலில்,

"என்னிக்காவது நீங்க பவிக்கு ஒரு ட்யூஷன் தேவைப்படுதுன்னோ, இல்ல பவியோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எப்டி என்னன்னு விசாரிங்கன்னு சொல்லியோ, அவளோட வயசுக்கு அவ ரொம்ப அமைதியா இருக்கான்னோ.... இப்டி ஏதாவது ஒரு விஷயத்த எங்கிட்ட சொல்றதுக்காக எனக்கு கூப்ட்டுருக்கீங்களா மாமா?" என்று பதில் கேள்வி கேட்டார்.

"அது..... வந்துங்க மாப்ள!" என்று தயக்கமாக பேசிய தனசேகரிடம்,

"இட்ஸ் ஓகே மாமா! உங்க ரெண்டு பேருட்டயும், வித்யாட்டயும் நானும், பவியும் எதையுமே எக்ஸ்பெக்ட் பண்ணலங்க மாமா! வித்யா விட்டுட்டுப் போன ரெண்டு வயசு
பவிக்கு துணையா வந்து நீங்க இத்தன வருஷமா எங்க கூட வீட்ல இருக்குறதே பெரிய விஷயம்! செல்வா நம்மள மாதிரி ஒரு பேமிலி அட்மாஸ்பியர்ல வளர்ந்தவன் இல்ல; அவனுக்கு நம்ம வீட்ல இருக்குற சூழ்நிலைய அடாப்ட் பண்ணிக்க கொஞ்ச நாளாகும்; அதுவரைக்கும் அவனோட டிமாண்ட்ஸ் எல்லாம் நாம அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும் மாமா! ஸோ இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் என்னை நீங்க கூப்டாதீங்க!" என்று சொல்லி விட்டு வைத்து விட்டார் சபாபதி.

"என்ன நம்ம சொல்றத காதுலயே வாங்காம அவர் பாட்டுக்கு பேசிட்டு வச்சிட்டாரு!" என்று நினைத்த தனசேகர் ஒரு பெருமூச்சுடன் தனது அலைபேசியை பார்த்தபடி அவரது அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now