சித்திரம் 22

265 23 8
                                    


அவளின் மெல்லிய சிரிப்பில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது பிராணேஷ்க்கு . அவனும் அந்தப் பக்கம் புன்னகைத்தான்.

"போலீஸ் வேலைனா சும்மா இல்லை பிராணேஷ், அவசரம் இதுல என்ன இருக்கு, ஆனா இதுக்கு பின்னாடி இருக்கறவனை நான் பிடிச்சே தீருவேன்", என்றாள்.

"இவ்வளவு நாள், நீ மட்டும் தனியா அந்த கேஸுக்கு எதிரா ஆதாரம் திரட்ட போராடுன, ஆனா இனி நானும் உனக்கு பக்க பலமா இருப்பேன் தன்யா," என்றான்.

எந்நிலையிலும் உனக்கு

துணை நிற்பேன்..!

இன்னல்களை வேரறுக்க

பக்கபலமாய் இருப்பேனே..!

துவண்டு விழாமல் உனை

தோள் சாய்ப்பேனே..!

என்றென்றும் நீ வென்றிடவே

நானும் போராடிடுவேன்..!

இப்படி சொல்பவனை நினைத்து, உண்மையாலுமே மிகவும் சந்தோசமாக இருந்தது இதன்யாவிற்கு, " இந்த வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், அதை தூக்கிப் போட்டுட்டு வா, என்று சொல்லாமல், எந்த கஷ்டம் வந்தாலும் உனக்கு துணையாய் நான் இருப்பேன்" என்று சொல்லும் துணை கிடைக்க, எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

' இவ்வளவு நாள், ஒரு கழிச்சடையை போய் ஹீரோ என்றும், அவன் போலதான் எனக்கு கணவன் வேண்டும் என்றும், அவனை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினேனே, என்னை நினைத்தால் எனக்கே வெக்கமாக இருக்கிறது, எஎன்றெல்லாம் நினைத்து, சிந்தனை வசப்பற்றிருந்தவளை கலைத்தது பிராணேஷின் குரல்.

"தன்யா லைன்ல இருக்கியா? ... ஏதாவது பேசு".....

"ஹான் இருக்கேன் பிராணேஷ்" .

"நீ பயப்படாம மேற்கொண்டு அந்த ருத்ரேஷ்க்கு எதிரா ஏதாவது ஆதாரம் கிடைக்குமான்னு பாரு, நானும் பார்க்கறேன், இந்த பிரச்சனை எல்லாம் முடிச்ச பிறகுதான் நம்ப கல்யாணம் பண்ணிக்கணும், என்றான் அவளின் சம்மதத்ததை எதிர்பார்த்து.

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேWhere stories live. Discover now