சித்திரம் 11

307 21 2
                                    


தனது ஷூட்டிங் முடித்து அமைச்சரிடமும் பேசி, மக்களின் பிரச்சனையை விவாதித்து, சினிமா துறையில் மட்டுமில்லாது நிஜத்திலும் நாயகனாக செயலை செய்து முடித்தான் ருத்ரேஷ் வர்மா.

"சார் நிஜமாகவே அந்த அமைச்சர் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பாரா...?" என்று டிரைவர் முத்து வினவ

"பண்ணுவார் அண்ணா... அவர் பின்புலம் சரியில்லை என்றாலும் என்னைப் போல நாயகனைக் பகைத்து கொள்ள மாட்டார். இவரோட நான் வந்துப் பேசினதால மக்கள் அவங்களோட பிரச்சனை சரியானதா நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்காக இவர் செய்யலை என்றாலும் நாம சரி செய்து தரணும். எதற்கும் அவர் பிரச்சனை சரி பண்றாரா என்று மேனஜரை பார்க்க சொல்லிட்டேன்" என்றதும் முத்துவிற்குப் பெருமையாக இருந்தது.


புகழ்என்னும் மாயவலையின்
கோரப்பிடியை தகர்த்தானே!
மதுமாது போல் போதையை
தனதாக்காமல் வென்றானே!
மாயவனோ இவனென்னும்
ஐயங்களை அளிப்பானே!
இவன் தூயவனே என்றெண்ணம்
மறுநொடியே தருவானே!
கொடை வள்ளல் கர்ணனையும்
இவன் இயல்பில் கொண்டானே!
அவர் கஷ்டங்களை தனதாக்கி
அவர் சுமையை குறைப்பானே!
இன்னல்படும் உள்ளங்களை
இவன் மனதில் சுமந்தானே!
கஷ்டங்களை களைந்தெறியும்
நாயகனாய் திகழ்வானே..!


நாயகன் என்றாலே மது, மாது என்று பெரிய அளவில் புகழ் போதையில் மிதந்து மற்றவரை மதிக்காமல் இருக்கும் நாயகர்களுக்கு மத்தியில் தான் இப்படிப்பட்ட நல்ல மனம் இருக்கும் நாயகனிடம் பணிப்புரியும் நிலையை எண்ணி கர்வம் கொண்டான்.

இங்கு ருத்ரேஷ் காரை செக் போஸ்டில் நிறுத்திய ஒரு போலீஸ் அதிகாரி  அது சினி ஸ்டார் ருத்ரேஷ் என்றதும் அடுத்த நொடியே கார்களை சோதனையிடாது அனுப்ப ருத்ரேஷ் எண்ணங்கள் தானாக இதன்யாவை எண்ணியது.


உன் நிமிர்வு கொண்ட நேர்மை
அது அழகைவிடவும் உயர்ந்தது!
கூர் அறிவால் செயலாற்றும்
உன் திறமை அதனின் பெரியது!
அற்ப புகழைக் கண்டுகொண்டு
கடமை தவறும் மாந்தர்களுள்,
நடுநிலையாய் பணியாற்றும்
தேவதை நீ தனித்துவமானவளே!

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேWhere stories live. Discover now