சித்திரம் 2

631 34 38
                                    


அடுக்கிய ஃபைலை மறுபடியும் கலைத்து மீண்டும் அடுக்கினாள் பெண் ஒருத்தி. அவளது முகத்தில் படபடப்பு அப்பட்டமாக அப்பி இருக்க அதை அருகில் இருந்த மற்றொரு பெண் கவனித்தபடி இருந்தாள்.

"இதோட நாலாவது தடவையா அடுக்கிட்ட அந்த ஃபையில. எதுக்கு மேகா இத்தனை டென்ஷன். ஒரு சிக்னேச்சர் தானே" என்று கேட்க அவளை அமைதியாக எதிர்கொண்டவள் மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி "இது டென்ஷன் இல்ல பெர்ஃபெக்ஷன். நம்ம எம்.டி சார்க்கு அந்த வார்த்தைக்கு முன்னாடி மத்ததெல்லாம் ஒன்னுமே இல்ல" என்றவள் கை கடிகாரத்தை உற்றுப் பார்த்துவிட்டு எழுந்து சென்றாள்.

ஆள் அரவம் அற்றிருந்த கான்ஃபிரன்ஸ் அறையில் தான் இன்னும் சிறிது நேரத்தில் அந்த மீட்டிங் நடக்க இருக்கிறது. அதற்காகத் தான் இத்தனை பரபரப்பு. "அண்ணா இங்க வாட்டர் பாட்டில் வைக்க சொன்னேன் வச்சாச்சா. மைக், விஷுவல் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணியாச்சா" என்று கேட்டுக்கொண்டே அனைத்தையும் பார்வையிட்டு முடித்திருந்தாள் மேகா.

"சொல்றத மட்டும் செய்யுங்க ண்ணா சார் வந்து பார்க்கும் போது எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கனும்" என்று அவள் சொல்லி முடிக்க "மேகா கிளைன்ட்ஸ் வந்துட்டாங்க" என்று ஒரு குரல் கேட்டதும் அங்கிருந்து சென்றாள் அவள். அவர்களுக்கு மலர்கொத்தை தந்து வரவேற்ற மேகா அவளது எம்.டி சாருக்கு அழைப்பு விடுத்தாள்.

பல சதுரடிகளை விழுங்கிய தெம்போடு கம்பீரமாகக் காட்சி அளித்தது நீல நிறம் பூசப்பட்ட பங்களா. அதை அப்படிச் சொன்னால் தான் தகும். முன்னால் பாரபட்சம் பார்க்காமல் பச்சை நிலத்தில் படர்ந்திருக்க அதில் ஒரு அழகான மர ஊஞ்சலும் "கிளுக்" என்று ஒலி எழுப்பி அதன் இருப்பை உணர்த்தியது..

அந்த வீட்டின் ஒவ்வொரு வெட்டும் அதன் செழுமையை சொல்லாமல் பிரதிபலித்தது. மார்பிள் பதித்த மாடிப்படிக்கட்டுகள் நீண்ட வராண்டாவை தொட்டு முடிந்தது.

அங்கே சில அறைகள் இருக்க ஐ ஃபோனின் டிஃபால்ட் டோன் எங்கோ கிணற்றில் இருந்து கேட்பதை போன்று ஒலித்தது. அதன் ஒலி எக்கோவாக எதிரொலிக்க அதை கையில் எடுத்தான் அவன். ஸ்வைப் செய்தவன் "எஸ் மேகா இஸ் எவ்ரிதிங் பெர்ஃபெக்ட்?" கேள்வியாக கேட்க எதிர்புறம் கிடைத்த பதிலில் திருப்தி அடைந்தான் என்பதற்கு சான்றாக உதட்டின் விளிம்பில் ஒரு புன்னகை வெட்டி மறைந்தது.

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேTempat cerita menjadi hidup. Temukan sekarang