சித்திரம் 9

312 22 10
                                    

"இப்போ அண்ணன் கிட்ட என்ன டா சொல்றது?? விஷயம் தெரிஞ்சா நம்மளை சும்மா விட மாட்டார் டா.", என்று நா தந்தியடிக்க ஒருவன் மற்றவனிடம் சொல்ல,

அவனோ, "என்ன பண்றது இப்ப பிரச்சனை இல்ல தானே! அதை சொல்லி சமாளிப்போம்.", என்று பெருமூச்சு விட்டான்.

"நீ நினைக்கிற மாதிரி கிடையாது டா அவரு. அதெப்படி பிரச்சனை வரும்னு கேப்பார். கேட்கறது கூட ரெண்டாம் பட்சம் தான் நேரா துப்பாக்கியை வாயில சொருகிட்டு தான் பேசவே ஆரம்பிப்பார்."

"அண்ணே எனக்கு பயமா இருக்குண்ணே. இவர் எவ்ளோ பெரிய ஆளு. அப்பறம் ஏண்ணே இந்த தொழில் பண்றாரு."

"வாய மூடு டா குரங்கு. அவருக்கு எல்லா பக்கமும் காது இருக்கும் இந்த கேள்வி மட்டும் அவர் காதுல விழுந்தது. நீ மண்ணுக்குள்ள தான் இருப்ப, பிணமா. டேய் கார் சத்தம் கேட்குது டா. கவனமா இரு."

கடந்ததென்ன புயலொன்றோ

ஐயம் ஒன்று எழுந்தோடும்

அவன் நடையின் வேகம் கண்டு

பயபந்தும் உருண்டோடும்..!

வேக நடையோடு உள்ளே வந்த அவனைக் கண்டு உள்ளே ஒளித்த பயத்துடன், "வாங்கண்ணே.",என்று பல்லைக் காட்டினான் குருவிக்கூடு தலையன் காளி.

"என்ன வரவேற்பு பலமா இருக்கு. என்ன பிரச்சனை?", என்று வந்த ஒரே நொடியில் ஆணிவேரை பிடித்தவனை கண்ட மற்றொருவனுக்கு நா உலர்ந்தது.

"அது இந்த தடவை சரக்கை கப்பலில் அனுப்ப முடியாது போல அண்ணே. இங்க கொஞ்சம் கெடுபிடி அதிகமா இருக்கு. அதான்." என்று இழுக்க,

"டேய்.. யார் கிட்ட?? செல்வா டா. செல்வா... என் சரக்கை கெடுபிடின்னு சொல்லி நிறுத்தி வைக்க முடியுமா? இங்க இருக்கற கஸ்டமர்க்கெல்லாம் என்ன டா பதில் சொல்றது", என்று பேசிக்கொண்டே இடையில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்தவனை கண்ட அந்த இன்னொருவன், உடல் நடுக்கத்தை மறைக்க போராடினான்.

"அண்ணே சரக்கை இந்த ஒரு தடவ விமானத்துல மாத்திக்கலாம் அண்ணே. இவங்க கவனம் அந்த பக்கம் திரும்பும்போது, எப்பயும் போல கப்பல்ல கொண்டு வருவோம். எப்படி பண்றோம்ன்னு அவனுங்களே குழம்புற மாதிரி பண்ணிடுவோம்ண்ணே.", என்று பொறுமையாக சொன்னவனை கண்டு சிரிப்பொன்றை உதிரித்த செல்வா, "சரி எல்லாம் ரெடியா?", என்று துப்பாக்கியை உள்ளே வைத்தபடி கேட்டதும்,

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேOnde histórias criam vida. Descubra agora