சித்திரம் 20

289 20 8
                                    


பிராணேஷின் அலுவலகம்...


பரந்து விரிந்த கடலினிலே
மையம்கொண்ட பேரமைதியின்
அமைதியைத் தகர்த்தெறியும்
ஆழிப்பேரலை போல்
எதிர்பாரா நிகழ்வுகளின்
எண்ணற்ற அரங்கேற்றம்
மலர்மதியின் நிம்மதியை
களவாடி சென்றனவே..!


அமைதியாக கடற்கரையில் அமர்ந்து அலைகளை ரசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென சுனாமி அலைகள் தாக்கினால் எப்படி இருக்கும்! அது அதிர்ச்சியாக மட்டும் இருக்காது! உயிரை உலுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கும்!

அதே அதிர்ச்சி தான் இப்போது இதன்யாவுக்கும். கல்லூரிப்பருவத்திலிருந்தே தான் ரசித்து வந்த ஆதர்ச கதாநாயகன் தான் தமிழக காவல்துறைக்குத் தண்ணீர் காட்டி தங்கத்தைச் சட்டவிரோதமாக கடத்தும் கொள்ளைக்காரன் என்பதை இப்போதும் அவளால் நம்ப இயலவில்லை.

ஒருவேளை நடந்த எதையும் கண்ணால் கண்டிரா விட்டால் அவள் சத்தியமாக இதை நம்பியிருக்கவும் மாட்டாள். ஏனெனில் ருத்ரேஷ் வர்மா என்ற செல்வா இந்த உலகுக்குக் காட்டும் முகமே வேறல்லவா!

திரைத்துறையைப் பொறுத்தவரை எளிமையின் திருவுருவான கண்ணியமான கதாநாயகன்; ரசிகர்களைப் பொறுத்தவரை அரிதாரம் பூசிய நடமாடும் கடவுள்; அரசாங்கத்துக்கோ இடர் நேரங்களில் தானாய் முன் வந்து உதவும் ஒரு சிறந்த குடிமகன்.

இத்தனை முகங்களுக்குப் பின்னால் தானே அவள் இன்று கண்ட அசுரமுகம் மறைந்திருக்கிறது. அவள் நேரில் கண்டுவிட்டாள்! நம்பலாம்! ஆனால் மேற்சொன்னவர்களை நம்ப வைத்து அவனைச் சட்டத்தின் முன்னே நிறுத்த அவள் பகீரதப்பிரயத்தனம் செய்யவேண்டும் போலுள்ளதே!
உணர்வுக்கலவையாய் மாறியவளின் முகபாவத்தை நோக்கியபடியே அவளிடம் தண்ணீர் தம்ளரை நீட்டினான் பிராணேஷ்.

ஒரு நிமிடம் அவனை ஏறிட்டவள் தம்ளரை வாங்கி மடமடவென அருந்த ஆரம்பித்தாள்.

உள்ளே சென்ற நீரின் குளிர்ச்சி அவளுக்குள் எரியும் அக்னியின் வெம்மையைத் தணிக்க முயன்றது. ஆயினும் அவளது பேச்சில் அதில் வெளிப்பட்டது.

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேTempat cerita menjadi hidup. Temukan sekarang