சித்திரம் 3

441 27 17
                                    

காக்கி உடையில் ருத்ரேஷ் கருப்பு கண்ணாடியினை கையில் வைத்து உதட்டில் புன்னகை ஒற்றை பல்வரிசை தெரிய சிரிப்பதை அதன் சுற்றி வண்ண ஆடைகளில் ருத்ரேஷ் புகைப்படமாக இருக்க அதனைப் பார்த்து

"இந்த எல்லா புகைப்படதிலும் எது என்னை மிகவும் கவர்ந்தது தெரியுமா? இந்த காக்கி உடையில் நீ இருப்பது தான். அது என்னவோ இது உனக்கு உன் உடற்கட்டுக்கும் வெகு பொருத்தமாக இருக்கு... பாரு இந்த இதன்யா வாசுதேவன் இந்த 26 வயது ஆரம்பிக்கின்றது... ஆனா என் வாழ்வில் எனக்கு வந்தக் காதல் கடிதங்கள் எத்தனை.. அது எதுவும் என் மனதைத் தாக்கவே இல்லை. ஆனா அது என்னவோ தெரியல, கல்லூரியில் இருந்து உன்னை தீவிரமா ரசிக்கின்றேன்.

கனவுகளில் உனை சுமந்து

ரசனைகளை மெருகேற்றி

கள்வனாய் நீ நின்றாய்..!

உடலழகில் மதி மயக்கி

அகஅழகில் அதை விலக்கி

ஆணழகனாய் மேல் உயர்ந்தாய்..!

உனை விரும்பும் இதயங்களை

கருணை கொண்டு உறவாடி

நாயகனாய் மனம் வென்றாய்..!

நீ ஆணழகன் என்று இல்லை ருத்து.. எத்தனை கதாநாயகர்கள் அழகா தான் இருக்காங்க! ஆனா நீ உண்மையிலே ஒரு நாயகன். நான் கேள்விப்பட்ட வரை நீ எத்தனை நல்லது செய்யற அது தான் உன்னிடம் இழுக்குது.

நேற்று கூட ஒரு கூட்டதில் அத்தனை ரசிகர்கள் உன்னைப் பார்க்க வந்து இருந்தாங்க. அவர்கள் உன்னை அடித்துப் பிடித்து பார்த்து போன பிறகு உன்னோட பெளன்சர்களை அழைத்து நடக்க முடியாத அந்த மாற்றுத்திறனாளி உன்னைப் பார்க்க முடியலை என்று வருந்திச் சென்றதைப் பார்த்து தனிப்பட்டு கூட்டிட்டு வந்து அவரோட புகைப்படம் எடுத்து உனக்கு வரவழைத்த உணவை அவருக்கு நீயே பரிமாறி அனுப்பி இருக்க பாரு, அங்க நிற்கின்றாய் ருத்து" என்று பேசியவளின் நாசியில் நெய் மணம் வீச தனது நாசியில் வாசம் நுகர்ந்தாள்.

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேWhere stories live. Discover now