சித்திரம் 19

316 22 15
                                    

அந்த பிரம்மாண்டமான அலுவலக அறையில், தன் இருக்கையில் அமர்ந்திருந்த பிராணேஷின் தலைக்குள் பல வண்டுகள் குடைந்தபடி இருந்தன.

சிரத்தினுள்ளே சில சிக்கல்

அங்கும் இங்கும் வலைய வந்து,

மனதிலுள்ள அமைதிப்போக்கை

முழுவதுமாய் சீர்குலைக்க,

அகத்திரையில் அதன்விளைவாய்

பெரும்போரும் உண்டாகும்..!

அவன் ஒருவனைத் தவிர வேறு பிடிமானம் இல்லாமல், வாடி நின்ற இதன்யாவின் முகம் அவன் மனக்கண்ணில் விரிய, இதன்யாவுக்கு உதவுவதோடு, தன் கம்பெனியைத் தவறாகப் பயன்படுத்தியவன் யார் என்று கண்டறிய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த பிராணேஷ், மேஜையில் கைகளை ஊன்றி எழுந்து நின்று, எதிரில் இருந்த கண்ணாடியில் அவன் பிம்பத்தையே வெறித்துக்கொண்டு இருந்தான். மேகா உள்ளே வர அனுமதி கேட்டு கதவை இருமுறை தட்டியவள், பதில் வராது போக, தானாக கதவை திறந்து அவன் முன் வந்து நின்றாள்.

"சார்.. சார்.." இருமுறை அழைத்தும் அவன் அசையாது நிற்கவே, அவன் சிந்தனை வயப்பட்டு நிற்கிறான் என்றுணர்ந்தவள், தான் கொண்டு வந்த பைலை வைத்து விட்டு, குறிப்பும் எழுதி வைத்தவள், அமைதியாக அறையை விட்டு வெளியேறினாள்.

எவ்வளவு நேரம் நின்ற நிலையில் இருந்தானோ.. கைகள் இரண்டும் வலியெடுக்க, கையை மேலே தூக்கியவன் விழி வட்டத்தில் விழுந்தது, மேகா எழுதி வைத்து விட்டுப் போன குறிப்பு. எடுத்துப் பார்த்தவன் உற்சாகமாக அவள் வைத்த கோப்பை நோக்க, முகம் மீண்டும் காற்று இறங்கிய பலூனாக மாறியது.

அதில் ஷாகித் இங்கிருந்த நாட்களில், வேறு யாருடனாவது நெருக்கமாக பழகினானா என்ற பிராணேஷின் கேள்விக்கு, இல்லை அவன் அப்படி யாரோடும் பழகவோ, ஏன் நல்லவிதமாக பேசவோ கூட இல்லை என்று அறிக்கையை அவள் சமர்ப்பித்து இருந்தாள்.

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேWhere stories live. Discover now