சித்திரம் 15

258 16 1
                                    


கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்று
இங்கே முடிவின்றி முன்னேற,
விடையறிய முன்னெடுக்கும்
வினை எல்லாம் பின்னடைய,
மனம் முழுதும் மாயங்கள்
சூழ்ந்து நின்று நகைத்தாட,
என்செய்ய காத்திருக்கும்
விதியென்னும் மாயவலை.?


அங்கே காவலாளியைப் பார்த்த கேப் டிரைவர்.. சற்றே நகர்ந்து சிகரெட் பிடிப்பது போல் நிற்க அந்தக் காவலாளி கார் டிரைவரிடம் வந்து அவனை பார்த்து தலையை தடவிக் கொடுக்கவும் அதே போல டிரைவரும் தலையை வருடிக்கொடுத்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இதைச் செய்யவும் இதன்யாவிற்கு சந்தேகம் வந்தது. யாருக்கும் தெரியாமல் மெதுவாக வெளியே சென்று அவர்கள் இருவரையும் மறைந்து இருந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் இருவரும் எதையோ பேசிக்கொண்டே பேஸ்மெண்டை நோக்கி போனார்கள்.

இதன்யா காதுகள் இரண்டையும் பாம்பு போல கூர்மையாக்கிக் கொண்டு, புலிப்போல பதுங்கி , பதுங்கி அவர்களைப் பின் தொடர்ந்து என்ன பேசுகிறார்கள்? என்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.

"சொல்லுங்க , நீங்கதான் மேனேஜர் சொன்னவரா? " என்றான் காவலாளி

"ஆமா" என்றவன் , "நான் அவரை பார்க்கணும் "என்றான்.

" சரி... இங்கையே இருங்க வந்துடுறேன் " என்று உள்ளே சென்ற காவலாளி, மேனேஜரிடம் சென்று எதையோ காதில் கூறவும் ,

"இதோ வரேன்"... என்று மெதுவாக கூறியவன் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க , "நீ போ" என்று கண்களால் சொல்லவும் , பெரிய இடங்களில் இதுபோலதான் பேசுவார்கள் என்பதால் அதை புரிந்துகொண்டு காவலாளி வெளியே சென்றுவிட்டான்.

மேனேஜர் கண்களால் சொன்னதை ஸ்வேதாவும் கவனித்து விட்டாள்

அவள் மனதுக்குள் சந்தேக அலை பரவ, அதை எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மீண்டும் ஸ்வேதா பேச்சைத் தொடரவும் , ஸ்வேதாவிடம் கொஞ்ச நேரம் பேசிய அந்த மேனேஜர் " நீங்க பார்த்துட்டு இருங்க மிஸ் .... நான் ஓனர் கிட்ட நீங்க கேட்டதைப் பத்தி பேசிட்டு வரேன்" என்றான்

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேWhere stories live. Discover now